முத்துப்பேட்டை, ஜூலை 22 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை சேர்ந்தவர் சேக்ஜி. இவர் அடிக்கடி மலேசியா, சிங்கபூர் நாடுகளுக்கு சென்று ஜோதிடம் மற்றும் வியாபாரம் செய்வதற்காக சென்று வருபவர். வழக்கம் போல கடந்த 15 ஆம் தேதி அன்று சென்னை விமான நிலையத்திலிருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் அன்று இரவு மலேசியாவிற்கு சென்று உள்ளார். அங்கே உள்ள விமான நிலையத்தில் இறங்கியவுடன் அவருடன் சென்று 38 பேரையும் எமிகிரேசன் கிளியர் (விசா பரிசோதனை செய்யும் இடம்) இடத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.அங்கே உள்ள விமான நிலைய அதிகாரிகள் எந்த விசாரனயையும் மேற்கொள்ளாமல் கொடுமை படுத்திவருவதை கண்ட இவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். அந்த நாட்டிற்க்குள்ளும் விடாமல் ஏர்போர்ட்டிலே வைத்துள்ளனர்.
அதிலிருந்து மீண்டு தப்பி வந்த அவர் நமது முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளத்திற்கு பேட்டியளித்தது பின் வருமாறு:
கடந்த 15 ஆம் தேதி அன்று மலேசியாவிற்கு புறப்பட்டேன். நான் மாதம் இரண்டு அல்லது மூன்று முறை எனது சொந்த வியாபாரம் விசயமாக செல்வது வழக்கம். இந்த முறை சென்ற பொது எனக்கு அங்கு ஏற்பட்ட கொடுமையை இது வரைக்கும் நன் கண்டது இல்லை. மேலும் எந்த ஒரு தகவலும் எங்களுக்கு சொல்லாமல் வெறும் 50 பேர் மட்டுமே தாங்கும் அறைக்குள் 1312 நபர்களை அடைத்து வைத்தார்கள். இதில் 612 பேர் தமிழர்கள், 17 பேர் பெண்கள் ஆவர்கள். மேலும் அங்கு சாப்பாடு தாநீர் இல்லை 2 ரூபாய் பொருளை 5 ரூபாய்க்கு விற்பனை செய்கிறார்கள்.அப்போது அங்கு சாப்பாடு மற்றும் குடி தண்ணீர் கேட்டால் அங்குள்ள அதிகாரிகள் எங்களை தாக்குகிறார்கள்.சாப்பாடு தண்ணீர் இல்லாமல் அங்குள்ள அனைவரும் மயங்கி கீழே விழுந்தது எனக்கு மேலும் அதிர்ச்சியை கொடுத்தது. அங்கு நின்று கொண்டு தான் தூங்குகிறார்கள். அப்போது நேற்று முன்தினம் பசி தாங்காமல் 300 தமிழர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் .அவர்களை அழைத்து அனைவரின் பாஸ்போர்டை வங்கி கொளுத்திவிட்டனர் மலேசிய அதிகாரிகள்.
இதிலிருந்து நான் தப்பிப்பதற்காக எனக்கு மலேசியாவில் உள்ள பிரபல பத்திரிகை அடையாள உரிமம் இருந்ததை காட்டியவுடன் அதனின் உதவியை கொண்டு நான் உடனே நாடு திரும்ப எனக்கு வாய்ப்பு வந்தது. அவற்றை பயன்படுத்தி முத்துப்பேட்டையில் உள்ள ஜெசீமா டிராவல்ஸில் டிக்கெட் எடுத்து நான் திரும்ப ஊருக்கு வந்து சேர்ந்துள்ளேன். மேலும் மலேசியாவில் இதுவரைக்கும் அவற்றில் சிக்கித்தவிக்கும் அனைத்து தமிழர்கலையும் உடனே விடுதலை செய்யவேண்டும் என்று அரசியல் அதிகாரிகளுக்கு வலிறுத்தி வருகிறேன் என்று தனது பேட்டியில் அப்போது அவர் தெரிவித்தார். தொடரும் முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளத்தின் வேட்டை...
source from: www.muthupettaiexpress.blogspot.com
நமது நிரூபர்
யூசுப் அலி (அலீம்), AKLT. அப்துல் ரஹ்மான்
மலேசியா விமான நிலையத்தில் தமிழர்களுக்கு அடி,உதை 300 பேர் பாஸ்போர்ட் தீ வைப்பு..!!!
Subscribe to:
Post Comments (Atom)
அல்ஹம்துலில்லாஹ்....ஜோதிடம் என்ற பெயரில் அடுத்தவர்கள் பணத்தை கரந்து வந்தவருக்கு அல்லாஹ் தகுந்த பாடத்தை அளித்துள்ளான் ...பாவம் அடுத்தவரின் எதிர்காலத்தை கணித்து சொல்லும் சேக் ஜீக்கு தனக்கு என்ன நடக்கப்போகிறது என்பதை கணிக்கமுடியாமல் போனது மிகவும் வேதனையான விசயம் தான். இனிமேலாவது அல்லாஹ்விற்கு மட்டும் தான் அடுத்தவரின் எதிர்காலம் தெரியும் என்பதை புரிந்து நடந்தால் சரி...
ReplyDeleteஅல்ஹம்துலில்லாஹ்....ஜோதிடம் என்ற பெயரில் அடுத்தவர்கள் பணத்தை கரந்து வந்தவருக்கு அல்லாஹ் தகுந்த பாடத்தை அளித்துள்ளான் ...பாவம் அடுத்தவரின் எதிர்காலத்தை கணித்து சொல்லும் சேக் ஜீக்கு தனக்கு என்ன நடக்கப்போகிறது என்பதை கணிக்கமுடியாமல் போனது மிகவும் வேதனையான விசயம் தான். இனிமேலாவது அல்லாஹ்விற்கு மட்டும் தான் அடுத்தவரின் எதிர்காலம் தெரியும் என்பதை புரிந்து நடந்தால் சரி...
ReplyDeleteஅல்ஹம்துலில்லாஹ்....ஜோதிடம் என்ற பெயரில் அடுத்தவர்கள் பணத்தை கரந்து வந்தவருக்கு அல்லாஹ் தகுந்த பாடத்தை அளித்துள்ளான் ...பாவம் அடுத்தவரின் எதிர்காலத்தை கணித்து சொல்லும் சேக் ஜீக்கு தனக்கு என்ன நடக்கப்போகிறது என்பதை கணிக்கமுடியாமல் போனது மிகவும் வேதனையான விசயம் தான். இனிமேலாவது அல்லாஹ்விற்கு மட்டும் தான் அடுத்தவரின் எதிர்காலம் தெரியும் என்பதை புரிந்து நடந்தால் சரி...
ReplyDelete