சென்னை, அகஸ்ட் 01: முன்னாள் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சரும் சன் குழும முக்கிய நிர்வாகிகளுள் ஒருவருமான தயாநிதிமாறன் ,பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ஜி.கே.மணி, புதிய தமிழகம் கட்சி தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான கிருஷ்ணசாமி ஆகியோருடன் நமது முத்துபேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளத்தின் முதன்மை ஆசிரியர்களுள் ஒருவரான ஜே. ஷேக் பரீத் சந்தித்து பேசினார் .
தயாநிதிமாறனிடம் பேசும்போது "மீடியாக்கள் முஸ்லிம்களை திட்டமிட்டே
தீவிரவாதிகளாக சித்தரிப்பதாகவும் ,இது கண்டிக்கத்தக்க ஒன்று என்றும் ,இதுபோன்ற நிகழ்வுகள் சன் தொலைக்காட்சியிலும் தொடர்வதாகவும் எடுத்து கூறினார் .
பாமக தலைவர் ஜீகே மணியுடன் பேசும் போது "காதல் நாடகத்தை கண்டிக்கும் உங்கள் கட்சி தலைமை " ஆர் எஸ் எஸ் ,பாஜக ,இந்துமுன்னணி போன்ற அமைப்புகள் பொதுக்கூட்டங்களில் "இஸ்லாமிய பெண்ணை காதலிக்க வேண்டும் என கட்டளையிடுகிறார்கள் .ராமகோபாலன் போன்றோர் "இஸ்லாமிய பெண்ணை எவர் காதலித்து திருமணம் செய்கிறாரோ அவருக்கு "ஒரு லட்சம் "ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று கூறுவதை உங்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கண்டிக்க தயங்குவதேன் என்று கேள்வி எழுப்பினார் .
புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியிடம் "உங்களுக்குள்ளேயே பள்ளர் என்றும் பறையர் என்றும் இரு பிரிவுகளை வைத்துகொண்டு சாதி மறுப்பை பற்றி பேசுகிறீர்கள் .நீங்கள் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவனுடன் இணைந்து பணியாற்றினால் இன்னும் சாதிக்கலாம் என்று கூறினார் .
புதுக்கல்லூரி மாணவர்...
very nice.............
ReplyDeleteum good...
ReplyDelete