முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டையில் நடந்து கொண்டிருப்பது என்ன.? ஒருவர் மீது ஒருவர் புகார்.! எக்ஸ்பிரஸ் தரும் ரிப்போர்ட்..



முத்துப்பேட்டை, செப்டம்பர் 08: முத்துப்பேட்டையில் மனித நேய மக்கள் கட்சியன் மாவட்ட செயலாளர் S. முஹம்மது மாலிக் அவர்களைப்பற்றி அவதூறான செய்திகளை SDPI கட்சியினர் பரப்பியதாக கூறப்படுகிறது. இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தள நிருபர் துபாயிலிருந்து தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கேட்ட கேள்விக்கு பதிலளித்த MMK கட்சியன் மாவட்ட செயலாளர் S. முஹம்மது மாலிக் அவர்கள், முத்துப்பேட்டையில் நடந்தேறிய விரும்பத்தாகத சம்பவங்கள் நடந்து முடிந்து சில நாட்கள் ஆகின்றன என்றும், அந்த சம்பவத்தை இணைத்து பொய் பிரச்சாரங்கள் மட்டும் நீடிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன என்றும் அவர் தெரிவித்தார். இதில் நடந்து முடிந்திட்ட கலவர சம்பவங்களுக்கு இன்னார் காரணம் என காவல்துறையால் அறியப்பட்டு இருதரப்பிலும் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு சிறைச்சாலைக்கு அனுப்பட்டது யாவரும் அறிந்ததே. 

அப்படி சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டவர்கள் SDPI கட்சியை சார்ந்தவர்கள் என்பதால் அவர்களை நான் ஏதோ போலீசாரிடம் அடையாளம் காட்டி கொடுத்துவிட்டதாக ஒரு பொய்யான தகவலை முன் வைத்து பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும், முத்துப்பேட்டையில் நடந்து வந்துள்ள கலவர சம்பவங்களுக்கு சம்பந்தமே இல்லாத அப்பாவிகள் தான் இதுவரை கைது செய்யப்பட்டு வந்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார். இதற்க்கு உதாரணமாக 2005 ஆம் ஆண்டு அப்பாவியான தண்டாயுதபாணியை வெட்டிவிட்டு ஓடியவர்களை யாரும் கைது செய்யப்படாமல், அப்பாவியான 32 பேர்கள் கைது செய்யப்பட்டனர். அதில் என்மீது குற்ற எண் 329/2005ல் 147, 148, 341, 324, 397 ஆயுத சட்டம் ஆகிய பிவிவுகளின் கீழ் நானும் கைது செய்யப்பட்டு 43 நாட்கள் சிறையில் இருந்தேன் என்றும், இப்போதாவது முஹம்மது மாலிக் M M K மாவட்ட செயலாளர் என்று மாவட்டத்துக்கே தெரியும் என்றும், அப்போது என்னை பற்றி அதிகம் தெரியாது அப்படி இருக்கும் போது என்னை காட்டிகொடுத்தது யார்? என்றும் கேள்வி எழுப்பினார். இப்போது என்னை கைது பண்ணினால் நான் இந்த கேள்வியை கேட்க்க மாட்டேன் ஏனெனில் இப்போது என்னைப்பற்றி எல்லோருக்கும் தெரியும் என்றும் அவர் தெரிவித்தார்.

நீங்கள் ஆங்கங்கே தங்களை பற்றி விளம்பரம் படுத்தி கொள்ள புகைப்படம் தாங்கிய பிளெக்ஸ் பேனர்கள் விளம்பர சுவரொட்டிகள் பெயர்தாங்கிய துண்டு பிரசூரங்கள் இவைகள் மூலம் தங்களை விளம்பரப்படுதிக் கொண்டு பெயர்களை அவன் சொல்லி விட்டான் இவன் சொல்லி விட்டான் என்று சொல்லி கொண்டு அலைவது ஒரு விளம்பரமே தவிர என்றும், விபரம் புரிந்த எவரும் ஏற்று கொள்ள மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் உண்மையை உடைத்து சொல்ல வேண்டு மென்றால் இந்த முறை நடந்தேறிய கைது சம்பவங்கள் யாவும் காவல்துறை முன் ஏற்பாடாக பதிவு செய்து வைத்திருந்த வீடியோ பதிவில் இடம் பெற்றவர்களை இனம் கண்டு கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது என்பதுதான் அப்பட்டமான உண்மை என்றும், எந்த தவறும் செய்யாமல் நான் கைது செய்யபட்ட காலத்தை ஒப்பிடும் போது இந்த முறை பெரிய அளவில் அப்பாவிகள் யாரும் கைது செய்யப்படவில்லை, யாருடைய வீட்டு கதவும் உடைக்கப்படவில்லை, யாருடைய தகப்பனாரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்ல வில்லை, வெளியில் நடமாட்டம் இல்லாமல் நம்மை வீட்டுக்குள் முடக்கி விடவில்லை, தப்பித்தோம் பிழைத்தோம் என்று அப்பாவிகள் யாரும் வெளி ஊர்களுக்கு ஓடிவிடவில்லை, எந்த கடையும் ஒருநாள் கூட அடைக்கப் படவில்லை, பேருந்துகள் இயக்கப்படமால் இல்லை, அவர் அவர் வேலைகளை அவரவர்கள் பார்த்தோம் என்பது தானே உண்மை என்றும் அவர் தெரிவித்தார்.

 மேலும் நான் ஒன்று கேட்கிறேன் கலவர சம்பவம் நடந்து விட்டது அதற்க்கு சம்பந்த பட்ட வர்கள் மீது கைது நடவடிக்கை வரத்தானே செய்யும் என்றும் சம்பந்தப்பட்டவர்கள் கைது நடவடிக்கைக்கு உட்பட்டுதானே ஆகா வேண்டும் என்றும், எனது சமுதாய சொந்தங்களே நான் இந்த ஊரையும், இந்த ஊர் ஜமாஅத் உறவுகளையும், இந்த ஊரில் உள்ள அனைத்து தரப்பு மனிதநேயம் கொண்ட மக்கள் அனைவரையும் நேசிக்கிறேன் என்ற வகையில் சொல்கிறேன் நான் யாரையும் வசைபாடி வம்புக்கு இழுத்து கொண்டும் கடின தொந்தரவு கொடுத்து கொண்டும் ஜமாத்தின் கட்டுப்பாட்டுக்கு கட்டுங்கடங்காமல் ஊரின் அமைத்திக்கு குந்தகம் விளைவித்துக் கொண்டும் சிலரை போல் செல் போன் வைத்து அதன் மூலம் உளவு வேலை பார்த்துக் கொண்டும் தெரு தெருவாக திரிபவன் நான் அல்ல என்றும், அவர் தெரிவித்தார். 

இதிலும் நீங்கள் குறை கண்டு இல்லை இல்லை நீதான் காரணம் என்று சொல்பவர்கள் யாராவது இருந்தால் என் மீதுள்ள குற்றம் சாட்டுகளை முன் வைத்து என்னிடம் நேரடியாகவோ அல்லது பொது இடத்திலோ இது சம்பந்தமாக விவாத்திக்க எந்த குற்றமும் செய்யாத நான் தாயாராக இருக்கிறேன் என்றும் இதற்க்கு நீங்கள் தயாரா.? என்றும் அப்போது அவர் கேள்வி எழுப்பினார். இந்த செய்திகள் அனைத்தையும் முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளத்துத்துடன் பகிருந்து கொள்ள காரணம் நமது சமுதாய இளைஞர்களிடம் என்னை பற்றி தவறான பொய் பிரச்சாரம் செய்து அதனை நம் சகோதர்கள் புறம்தள்ளி அவரவர்கள்தான் உண்மையை விளக்க சொல்லி சொன்னதால்தான் நான்  இவற்றை உங்கள் முன்பு எடுத்துரைக்கிறேன் என்றும் அப்போது அவர் தெரிவித்தார். 

நானும் என்னை சார்ந்தவர்களும் முன் வைத்த கருத்துகளை உங்கள் முன்பு தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன் என்றும், அவையாவது ம.ம.க. மாவட்ட செயலாளர் முஹம்மது மாலிக் ஆகிய நான் என் மீது தொடர்ந்து அவதூறுகளை பரப்பும் SDPI கட்சியினருக்கு பகிரங்க சவால் விடுகிறேன் என்றும், நீங்கள் கூறும் குற்றச்சாட்டுகளை பொது இடத்தில் வைத்து ஆதாரத்தோடு நிரூபிக்க தயாரா? என்றும் அப்படி நிரூபித்துவிட்டால் நான் பொதுவாழ்க்கையில் இருந்து விலகிக்கொள்ள தயார் என்றும், இதனை ஏற்றுக்கொண்டு முன்வர SDPI கட்சியின் நிர்வாகிகள் தயாரா என்றும் அவர் சவாலை முன்வைத்துள்ளார். 


இது குறித்து பாப்புலர் ஃப்ரண்ட்  ஆப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பினர்  A. அபூபக்கர் சித்திக் அவர்களிடம் முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தள நிருபர் துபாயிலிருந்து தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கேட்ட கேள்விக்கு பின்னர் பதிலளித்த அவர், மனித நேய மக்கள் கட்சியினர், SDPI கட்சியின் மீது கூறப்பட்டுள்ள அவதூறு சம்பந்தமாக SDPI கட்சியின் பொறுப்பாளர்கள், உறுபினர்கள் யாரைப்பற்றியும் எந்தவிதமான அவதூறு பிரச்சாரங்களில் ஈடுபடவில்லை என்றும், தன்னை பற்றிய ஓர் மளிவான விளம்பரத்திற்காகவே அவர் இவ்வாறு நடந்து கொண்டுள்ளார் என்றும், அவர் தெரிவித்தார்.

மேலும் இது போன்ற செயல்பாடுகளில் ஒருக்காளும் SDPI கட்சியினர் ஈடுபடவில்லை என்றும், யாரேனும் MMK கட்சியின் மீது அவதூறான செய்திகளை பரப்பிருந்தாள் மாவட்ட நிர்வாகிகள் இதே ஊரான முத்துப்பேட்டையில் தான் இருந்து வருகிறார்கள் என்றும், அந்த மாவட்ட நிர்வாகிகளை நேரடியாகவோ, அல்லது தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொண்டு தங்களுடைய விளக்கங்களை அறிவித்திருக்கலாம். அதை விட்டுவிட்டு இப்படிப்பட்ட காரியங்களில் ஈடுபடுவது சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமல்ல அவரை சார்ந்திருக்கக்கூடிய கட்சிகளும் இழுக்கானது என்றும் மேலும் அவர் தெரிவித்தார். 

முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளத்தின் வேண்டுகோள்: 

அன்பிற்கினிய சகோதரர்களே நமதுதூரில் உள்ள மதவாத சக்திகளுக்கு மத்தியில் நமதூர்  ஓர் மாபெரும் வளர்ச்சியை மேற்கொண்டு வரும் இந்த தருணத்தில் நமக்குள் ஏன் இந்த சண்டை சச்சரவுகள்? மேலும் மதவாதிகளுக்கு தக்க செருப்படி கொடுக்கும் நிகழ்வு நமதூரில் மாற்று மத சகோதரர்கள் மூலம் நடத்திய மத நல்லிணக்க நோன்பு திறக்கும் நிகழ்ச்சியே ஓர் எடுத்துக்காட்டு ஆகும்.அவர்களுக்கு நாம் ஓர் எடுத்துக்காட்டாக நடந்து கொள்ள வேண்டும்.  அதை விட்டுவிட்டு இப்படிபட்ட சூழ்நிலையில் நாம் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக்கொள்வது நமது மார்கத்தில் இடமில்லை. ஆகவே யாரையும் யாரும் பகைவராக கருதாமல், தனது கூட பிறந்த சகோதரர்கள் போல வாழ வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பு. மேலும்  ஏக நாயனானாக அந்த அல்லாஹ்வின் கைற்றை வலுவாக பற்றிப் பிடித்துக்கொள்ளுங்கள் இறைவனின் உதவி என்றும் நமக்குத்தான். 

தொகுப்பு:

A. முஹம்மது இலியாஸ். MBA., MA. (Journalism & Mass Communication) 



6 comments:

  1. அவதூறு அவதூறு என்னதான் அப்படி அவதூறு பிரச்சாரம் செய்தார்கள் எஸ் டி பி ஐ யினர்? இங்கே ம ம க மாலிக் சொல்லித்தான் பலருக்கே இவர் காட்டிகொடுத்த விபரம் தெரியும் ஆக எஸ் டி பி ஐ யினர் யாரும் இப்படி செய்தியை பரப்பியதாக தெரியவில்லையே?

    ReplyDelete
  2. அப்துல்லாஹ்September 8, 2013 at 6:48 PM

    நல்ல முயற்சி முத்துபேட்டை எக்ஸ்பிரஸ் மற்றும் தம்பி முஹம்மது இலியாஸ் நன்றிகள்.

    ReplyDelete
  3. ஊரு ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் இதனை மனதில் வைத்து கொண்டு ஏக நாயனானாக அந்த அல்லாஹ்வின் கைற்றை வலுவாக பற்றிப் பிடித்துக்கொள்ளுங்கள் இறைவனின் உதவி என்றும் உங்களை விட்டு செல்லாது............






    ReplyDelete
  4. அன்பார்ந்த சகோதரர்களே: தாங்கள் அனுப்பிய இந்த செய்திக்கு அதிகமாக கமெண்ட்ஸ்கள் வந்த வண்ணம் உள்ளன, ஆனால் பிறருடைய மனதை நோகும்படி வந்த கருத்துக்கள்தான் இங்கு அதிகம். அதானால் இவற்றை முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் நிர்வாகம் வெளியிடவில்லை. காரணம் தாங்கள் அனுப்பக்கூடிய இந்த கருத்தால் மேலும் மேலும் பிரச்சனைகள் வளர்ந்து கொண்டேதான் இருக்கும் இதற்க்கு நிரந்தர தீர்வு கிடைக்காது. எனவே தங்களால் முடிந்த வரை நல்ல பயனுள்ள கருத்தை அல்லாஹ், ரசூல் கற்றுகொடுத்த நற்செய்தியின் கருத்தாக இங்கு பதிவு செய்யூமாரு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    சகோதரர்கள் மத்தியில் உறவை ஏற்படுத்தும் விதமாக, நல்ல கருத்துகளை பதிவு செய்யுங்கள்,

    இப்படிக்கு:

    முஹம்மது இலியாஸ்.

    ReplyDelete
  5. முத்துப்பேட்டையில் நடக்கும் உண்மை சம்பவம் என்ன ? (நடுநிலையாளர்களின் பார்வையில்...)

    முத்துப்பேட்டையில் ADMK, DMK போன்ற பலம் வாய்ந்த அரசியல் கட்சிக்கு இணையாக வளர்ச்சியை நோக்கி SDPI- செல்கிறது .

    அதற்கு கடந்த பேருர்ராட்சி மன்ற தேர்தலே சாட்சி 2000 வாக்குகளை பெற்று சிறு வித்தியாசத்தில் தோல்வியுற்றது. 2வது இடத்தையும் பிடித்தது.

    தேர்தலுக்கு மட்டும் வரும் கட்சியாக இல்லாமல்.களத்தில் இறங்கி செயல்படுவது ஊழல் கட்சிகளுக்கு பெரும் தலைவலியாக உள்ளது. பட்டறை குளம் துர்வாறுவதில் 27 லட்சம் நடைபெற இருந்த ஊழல், சாலை அமைப்பதற்கு நிதி ஒதுக்கிய பணத்தில் கவுன்சிலருக்கு 10,000 விதம் கொடுத்த போது SDPI-யை சேர்ந்த 2 கவுன்சிலர்கள் திருப்பி கொடுத்து ஊழலுக்கு எதிராக நின்றனர். இன்னும் ADMK பேருராட்சியின் பல்வேறு கவன குறையை கண்டித்து ஆர்ப்பாட்டங்களையும் நடத்தினர்,

    இது போன்ற பிரச்சனைகளால் ஊழல் செய்ய முடியாமலும்.மக்களின் பேராதரவை தடுக்க முடியாமலும் தவிக்கும் இக்கட்சிகள் இதற்கான நல்ல வாய்ப்பாக பயன்படுத்தி பெருநாள் அன்று நடைபெற்ற பிரச்சனையை மறைமுகமாக முஸ்லிம் பெயர் தாங்கிகள், காவல்துறை, பத்திரிக்கை துறை மற்றும் பிஜேபி-னர் மூலமாக அரசியல் விளையாட்டை நடத்திவருகின்றனர்.

    ஓர் உதாரணம் தான் பெருநாள் அன்று நடைபெற்ற சம்பவத்திற்கு வழக்கு கொடுக்க சென்ற SDPI-னர் மீதே காவல்துறையை ஏவி கைது செய்துள்ளனர். பெருநாள் அன்று நடைபெற்ற ஊர்வலம் முஸ்லிம்கள் நடத்தியதே SDPI நடத்தியதாக தினத்தந்தி (தினம்வாந்தி) கக்கியுள்ளது. அதில் SDPI- யை சார்ந்த கோசங்களோ SDPI- யை கொடிகளோ பயன்படுத்தவில்லை.

    BJP-னர் SDPI-யை தடை செய்ய அரசை வலியுறுத்துவது. இன்னும் அக்கட்சியிலுள்ள முஸ்லிம் பெயர் தாங்கிகளை கொண்டு MMK- கட்சியினரிடம் சென்று SDPI-னர் அவதுறு பரப்புவதாக குழப்பங்களை ஏற்படுத்துகின்றனர். (அதற்க்கான ஆதாரம் இன்னும் நிரூபிக்கப்படவில்லை) SDPI-சேர்ந்தவர்கள் அவதுறு பரப்பி இருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க SDPI-யை தலைமை தயாராக உள்ளது. சமுதாய இரு கட்சிகளுக்கும் இடையே சென்று பிரச்சனையை எற்படுத்தி அரசியல் ஆதாயம் தேடுகின்றார்கள்.

    எனவே நல்லுல்லம் கொண்ட அனைவரும் இவர்களை அடையலாம் கண்டு சூழ்ச்சிகளை முறியடித்து, தைரியமாக களத்தில் நின்று போராடும் SDPI-யைக்கு தொடர்ந்து ஆதரவை வழங்க வேண்டும்.

    இப்படிக்கு,

    முத்துப்பேட்டை நடுநிலையாளர்கள்

    ReplyDelete
  6. முத்துப்பேட்டையில் ADMK, DMK உங்களால் ஒரு பொதுக்கூட்டம் நடத்த முடியுமா அவர்களை போல மக்கள் கூட்டத்தை கூட்ட முடியுமா இதனை செய்து காட்டிவிட்டு அதன் பின் சுய சரிதை பாடிக்கொள்ளுங்கள்

    தேர்தலில் வாக்குகள் பெறுவதை வைத்து ஒரு கட்சியை எடை போட முடியாது இதற்கு முந்தைய காலங்களும் சாட்சி திமுகவே வெற்றி பெற்று வந்த நிலை மாறி முஸ்லிம் என்ற காரணத்தால் அதிமுக வெற்றி பெற்றது. ஆகவே சூழ்நிலைக்கேற்ப மக்களின் மனம் மாரும் வாக்குகள் மாறி மாறி விழும். தேர்தலில் டெபாசிட் இழந்தவர்களெல்லாம் பிரதமராக இருக்கிறார். முதலமைச்சராக இருக்கிறார் அதனால் தேர்தல் வாக்குகள் ஒரு கட்சியின் முழு பலத்தையும் காட்டிவிடாது. அப்படி அதுதான் பலம் என்றால் உங்களுக்கு போதிய அரசியல் அறிவு பத்தாது

    ஊழலுக்கு எதிராக குரல் கொடுப்பது தாங்கள் மட்டுமல்ல என்பதை புரிந்துகொள்வது அவசியம். பட்டறை குளம் பிரச்சனை குறித்து ம.ம.க மாலிக் தலைமையில் தமுமுகவினர் சென்று பேரூராட்சி மன்ற தலைவரையும் சந்தித்து முறையிட்டுள்ளனர். ஊழலுக்கு எதிராகவும் குரல்கொடுத்து வருகின்றனர். SDPI-யை சேர்ந்த 2 கவுன்சிலர்கள் என்றால் யார் யார் அந்த 2 கவுன்சிலர் என்று குறிப்பிடவும். பெருநாள் அன்று நடைபெற்ற பிரச்சனைகளுக்கு எந்த அரசியல் கட்சியும் காரணம் போல் தெரியவில்லை.
    பாஜகவினர் கலவரம் வழக்கும் நோக்கில் பேரணிசென்றதுதான் கலவரத்தின் முதல் விதை அதன் பின் அதனை சட்டபடி சந்திக்காமல் முறையற்ற முறையில் அவர்களை போலத்தான் நாங்களும் என்று நிரூபிக்கும் முகமாக நீங்கள் இளைஞர்களை திரட்டி சென்று ஊர்வலம் சென்றது உங்களின் முதல் தவறு. அடுத்தாக ஊர்வலம் சென்ற நீங்கள் பா.ஜ.கவினர் நடத்தும் பகுதிகளுக்குள் செல்ல முற்பட்டது இரண்டாவது தவறு. சாக்கடையில் கல் எறிந்தால் நம் மீதுதான் தெரிக்கும் என்பதை கூட அறியாதவர்களா நாம் ஆனாலும் இளைஞர்களை தூண்டிவிட்டு ஆதாயம் தேட முற்பட்டனர் SDPI கட்சியினர் என்பதே முத்துப்பேட்டை மக்களின் கருத்து

    பெருநாள் அன்று பா.ஜ.க கலவரத்தை தூண்டியிருந்தாலும் பெரிதாக்கி தடியடி மற்றும் வழக்குகள் என கொண்டு சென்றது SDPI கட்சிதான் என்பதனை முத்துப்பேட்டை மக்களாகிய நாங்கள் அறிவோம்.

    இப்படிக்கு,
    முத்துப்பேட்டை மக்கள்

    ReplyDelete

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)