முத்துப்பேட்டை, செப்டம்பர் 07: முத்துப்பேட்டையில் PFI வின் மாநில செயற்குழு உறுப்பினரை போலீசார் கைது செய்ய முயன்றதால் 100 க்கும் மேற்பட்ட மேற்பட்ட இளைஞர்கள் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. முத்துப்பேட்டையில் ரம்ஜான் பண்டிகை அன்று பாரதிய ஜனதா கட்சி, SDPI கட்சி சார்பில் தனித்தனியாக நடைபெற்ற பேரணியால் கலவரம் வெடித்தது. இது தொடர்பாக பாஜக மாநில செயலாளர் முருகானந்தம் உட்பட 50 மீதும், PFI வின் மாநில செயற்குழு உறுப்பினர் A. அபூபக்கர் சித்திக் தலைமையில் 150 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இருதரப்பிலும் 20 க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். மீதமுள்ளவர்கள் தலைமறைவாகி முன்ஜாமினுக்கு சென்னை ஐகோர்டில் தாக்கல் செய்திருந்தனர். கடந்த 4 நாட்களுக்கு முன்பு அபூபக்கர் சித்திக், சேக் முஹைதீன், மாலிக், சர்தார், முன்ஜாமீன் கிடைத்தது. இவர்கள் திருத்துறைப்பூண்டி கோர்ட்டில் ஆஜராக தயார் நிலையில் இருந்தனர். இதனால் அபூபக்கர் சித்திக்கை கைது செய்ய முத்துப்பேட்டை ஒ,பி,எம், தெருவில் உள்ள அவரது வீட்டுக்கு எடையூர் இன்ஸ்பெக்டர் சாமிநாதன், முத்துப்பேட்டை சப்இன்ஸ்பெக்டர் பால்ராஜ், இளங்கோ மற்றும் போலீசார் சென்று அபூபக்கர் சித்திக்கை காவல்நிலையம் அழைத்தனர். இதனால் போலீசாருக்கும் அபூபக்கர் சித்திக்குக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இது பற்றி தகவல் அறிந்ததும் SDPI கட்சியை சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கூடினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. நிலைமை மோசமானதால் அங்கிருந்து போலீசார் திரும்பிச் சென்றனர். இதுகுறித்து A. அபூபக்கர் சித்திக் கூறுகையில் திட்டமிட்டு பிரச்சனையை தூண்டி எங்களை பலிகடவாக்க நினைக்கிறது என்றும், இந்த வழக்கில் பாஜக பிரமுகரும் தான் உள்ளார் என்றும் தெரிவித்தார்.
நமது நிருபர்:
O.M. சுபைத் கான். BE
0 comments:
Post a Comment