மதுரை, செப்டம்பர் 04: மதுரையில் உள்ள பிரபலமான சுங்கம் பள்ளி வாசல் வளாகத்திற்குள் 12 ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டிருப்பது தொடர்பாக ஜமாத் உறுப்பினர்கள் பலரும் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
போலீஸாரின் ஆலோசனைப்படி இந்த பள்ளிவாசலுக்குள் ரகசியக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால் இதற்கு தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகமும், சுங்கம் பள்ளிவாசல் ஜமாத் உறுப்பினர்கள் பலரும் கடும் அதிருப்தியும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். அதேசமயம், முஸ்லீம் ஐக்கிய ஜமாத், தமிழ்நாடு தௌஹீத் ஜமாத் ஆகியவை இந்த கேமரா பொருத்தலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் முஸ்லீம் சமுதாயத்தினரிடையே கருத்து பிளவு ஏற்பட்டுள்ளது.
*இந்த செய்தியை ஆகஸ்ட் 16 தேதியிட்ட ஒரு சில நாளிதழ்களும்,இணையதளங்களும் வெளியிட்டிருந்தன.
வழிபாட்டு தளங்களில் கண்காணிப்பு காமெரா பொருத்தவேண்டும் என்பது காவல்துறையின் வாய்மொழி உத்தரவுதான். அப்படியே பொறுத்தவேண்டும் என்றாலும் அனைத்து வழிபாட்டுத் தளங்களிலும் பொருத்தவேண்டும் என காவல்துறை அறிவுறுத்த வேண்டும். இதை கூட காவல்துறை கட்டாயப்படுத்த முடியாது. ஆனால் பள்ளிவாசலில் மட்டும் பொறுத்த வேண்டும் என்பது உள்நோக்கம் கொண்டதும் ஒரு சமுதாயத்தை அவமதிப்பதும் ஆகும்.
நெல்லை மேலப்பாளையம், மதுரை நெல்பேட்டை ஆகிய பகுதிகளில் முஸ்லிம்கள் மீது காவல்துறை நிகழ்த்தி வரும் வரம்பு மீறல் நடவடிக்கைகள் குறித்த உண்மை நிலையை அறிய மனித உரிமைகளுக்கான மக்கள் கழகத்தைச் சேர்ந்த பேரா.அ.மார்க்ஸ் தலைமையில் சென்ற மனித உரிமை ஆர்வலர்கள் குழு மதுரையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பை நடத்தி, மதுரை காவல்துறையின் அராஜக போக்கை கண்டித்தது.
இதில் பேசிய பேரா.மார்க்ஸ், ''போலீசாரின் (மறைமுக) உத்தரவின் பேரில் முஸ்லிம் பகுதிகளில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப் பட்டிருப்பதாக உள்ளூர் முஸ்லிம்கள் கூறுகின்றனர். இப்படி சிவில் சமூக மக்களின் (அன்றாட) வாழ்க்கையை கண்காணிப்பது சட்டவிரோத நடவடிக்கையாகும்'' எனக் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
முஸ்லிம்களை குற்றப்பரம்பரை போல் சித்தரிக்கும் போக்கை காவல்துறை நிறுத்திக்கொள்ள வேண்டும்.எங்கேனும் பள்ளிவாசல்களில் கண்காணிப்பு கேமராவை பொருத்தும் படி காவல்துறை கட்டாயப்படுத்தினால் சம்மந்தப்பட்ட ஜமாத்துகள் நீதிமன்றத்தில் காவல்துறைக்கு எதிராக வழக்கு தொடுக்க தயங்கக்கூடாது.
காவல்துறை இதுபோன்ற சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். இந்த விவகாரத்தை தமிழக காவல்துறை தலைவரின் கவனத்திற்கு கொண்டு செல்ல முடிவு செய்திருக்கிறோம்.
நன்றி: INTJ
காவிகளை நோட்டம் செய்யாமல் அப்பாவி முஸ்லிம்களை நோட்டம் செய்வதுதான் காவல்துறையின் வேலைபோல... என்ன செய்வது முஸ்லிமாக பிறந்தாலே சோதனையும், வேதனையும் உண்டுதானே...
ReplyDeleteஎல்லா வற்றிருக்கும் அல்லாஹ் போதுமானவன்.
ReplyDeleteயா அல்லாஹ் இந்த உலகில் உள்ள அனைத்து முஸ்லிம் மக்களுக்கும் நல்ல ஒரு வாழ்க்கையை ஏற்படுத்தி கொடுப்பாயாக....
ReplyDelete