முத்துப்பேட்டை, அக்டோபர் 13 : திருவாரூர் முத்துப்பேட்டையில் நடைபெற உள்ள உள்ளாட்சி மன்ற தலைவர் பதவிக்கு கணிப்பொறி என்ற சின்னத்தில் போட்டி இடுவதாக சுயேச்சை வேட்பாளர் லப்பை தம்பி தெருவித்தார், இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இனையதள நிருபர் கேட்ட கேள்விக்கு பின்னர் பதிலளித்த அவர், முத்துப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளின் மையப் பகுதி யில் நியாய விலை அங்காடிகளை திறக்க செய்து மக்கள் அலைகளிப்பில்லாமல் ரேசன் பொருட்கள் பெற ஆவணம் செய்யப்படும் என்றும், மிக முக்கியமான குடிநீர் வசதி தங்கு தடையின்றி முத்துப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும், மின்விசிறி மின் கம்பங்கள் அமைத்து மிவசதி தங்கு தடையின்றி கிடைத்திட ஏற்பாடு செய்யப்படும் என்று, தார் சாலை, சிமென்ட் சாலை இல்லாத வார்டுகளில் இவைகளை அமைக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் அவர் தெருவித்தார். பள்ளிக் குழந்தைகள் சிறந்த முறையில் கல்வியில் திறமை பெறவும், அறிவாளியாகவும் வளர்ந்திட கல்வி நிறுவனங்களில் உரிய மக்கள் பிரதிநிதிகளை நியமித்து கண்காணிக்கப்படும் என்றும், கியாஸ் சிலிண்டர் வீட்டில் இருந்தபடியே பெற்றிட உரிய ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும், குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, குதியோர் அதர வற்றோர், விதவை, திருமண உதவித்தொகை, மாற்று திறநாளிகளுக்கு அரசால் வழங்கப் படும் மாதாந்திர உதவித்தொகையினை பெற்றுத்தர ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் அவர் தெருவித்தார். மேலும் விவசாய தொழிலாளர்கள், தென்னை உரிமையாளர்கள், கட்டிடத் தொழிலாளர்கள், தென்னைத் தொழிலாளர்கள், தென்னை உரிமையாளர்கள் ஆகியோர் பாதிக்கப் படும் காலங்களில் மத்திய மாநில அரசால் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளை பெற்று தரப்படும் என்றும், மீனவ பேரு மக்களின் துயர் துடைக்க பேட்டை, ஆசாத் நகர் கொரையாற்று ஆறு முகத்துவாரங்களில் (ஐஸ் பிளான்ட்) கட்டிடம் பேரூராட்சி மூலம் அமைத்து தரப்படும் என்று அப்போது அவர் தெருவித்தார். அன்பிற்கினிய வாக்காளர்களே நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் தங்களுடைய வாக்குகளை தவறாமல் எனக்கு அளித்து பெருவாரியான முறையில் வெற்றிபெற செய்யுமாறு தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
தொகுப்பு
ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி,EK .முனவ்வர் கான்.அபு மர்வா
முத்துப்பேட்டை பேரூராட்சி தலைவர் பதவிக்கு சுயேட்சையாக லெப்பை தம்பி போட்டி:
Subscribe to:
Post Comments (Atom)
This comment has been removed by a blog administrator.
ReplyDelete