டெஹ்ரான்,பிப்ரவரி 03 : ஈரான் நாட்டில் மருத்துவக்கல்வி பயின்று வரும் நான்கு இந்திய மாணவர்களை அந்நாட்டு அரசு வெளியேற்றியுள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் 4 முதல் 10 ஆண்டு காலமாக மருத்துவம் மற்றும் பல்வேறு மேற்படிப்புகளை ஈரான் அரசு வழங்கும் உதவி மூலம் படித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில தேதிகளுக்கு முன்பு கேரளாவை சேர்ந்த ரஷீன் என்ற மாணவர் ஒருவர் கடந்தாண்டு ஜூலை மாதம் 21ம் தேதி தன்னுடைய மாநிலத்திற்கு திரும்பி வந்துள்ளார். அதே போல கான்பூர், ஜம்முகாஷ்மீர் மாநிலம் உட்பட பல்வேறு மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்தியாவிலிருந்து சென்று மாணவர்கள் அதிகம் படிக்கும் நாடுகளின் வரிசையி்ல் ஈரான் இரண்டாம் இடத்தில் உள்ளது. இதற்கு முன்பு ஈரான் மாணவர்கள், இந்தியாவில் உள்ள உள்ளூர் அமைப்புகளின் தூண்டுதல் காரணமாக வெளிநாட்டு கொள்கைகளை எதிர்த்து போராடுவதாக உளவுத்துறை தகவல் அளித்ததன் அடிப்படையில் 2009ம் ஆண்டில் 32 மாணவர்களை இந்தியா வெளியேற்றியது. இதற்கு இந்திய தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கம் திருப்தியளிக்கவில்லை என்று ஈரான் தரப்பில் கூறப்பட்டது. மேலும், ஈரான் மற்றும் இந்தியா இடையே மாணவர்களை வெளியேற்றும் போராட்டத்திற்கும் மற்ற அரசியல் ரீதியான பிரச்சினைகளுக்கும் சம்பந்தமில்லை என்று இரு தரப்பு அரசு தெரிவித்துள்ளது.
ஈரானில் இருந்து இந்திய மாணவர்கள் வெளியேற்றம்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment