திருவாரூர், ஜனவரி 18 : SDPI கட்சி சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை திருவாரூர் ஹோட்டல் ராயல் பார்க்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்ட மாநில செயலாளர் ஜனாப். அப்துல் சத்தார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜனாப். A . அபூபக்கர் சித்திக் ஆகிய இருவரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். இந்த சிகழ்ச்சியில் முல்லை பெரியார் பிரச்சனை சம்மந்தமாக மத்திய அரசு, தமிழக உரிமையை பாதுகாக்க வேண்டும் என்றும், உச்ச நீதி மன்ற ஆணையை கேரளா அரசு பின்பற்ற வேண்டும் என்றும்,விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும் திருவாரூர் மாவட்ட கமிட்டியிடம் தங்களால் இயன்ற உதவியை மாநில தலைமையிடம் செளுத்துப்படி மாநில செயலாளர் ஜனாப். அப்துல் சத்தார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜனாப். A . அபூபக்கர் சித்திக் ஆகியோர் கேட்டுக்கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு SDPI திருவாரூர் மாவட்ட தலைவர் ஜனாப். தப்ரே ஆலம் பாதுசா அவர்கள் தலைமை ஏற்றார். கட்சியின் பொது செயலாளர் ஜனாப். அப்துல் அஜீஸ் அவர்கள் வரவேற்ப்புரை ஏற்றார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மற்றும் நகர நிர்காகிகள் மற்றும் கிளை நிர்வாகிகள், உள்ளாட்சித்தேர்தலில் வெற்றி பெற்ற SDPI கட்சியின் வேட்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
source from www.muthupettaiexpress.blogspot.com
நமது நிருபர்
K . எர்சாத் அஹமது, MJ .சாதிக்
SDPI சார்பில் திருவாரூரில் நடைபெற்ற மாவட்ட செயற்குழு கூட்டம்
Subscribe to:
Post Comments (Atom)
முஸ்லிம்களின் அரசியல் பேரியக்கம் இந்திய சமூக சமத்துவ ஜனநாயக கட்சியின்
ReplyDeleteசெயற்குழு செய்திக்கு நன்றி...
அன்பிற்கினிய இந்திய சமூக சமத்துவ கட்சியின் சகோதரர்களுக்கு நாம் தமிழகத்தில்
கட்சி நடத்துகிறோம் அனைத்துதரப்பினருக்கும் நமது செய்திகள் நமது கட்சியின்
பெயர் பதிவாகவேண்டும்... தாங்கள் இன்றும் கட்சியின் பெயரை SDPI என க்ரிப்பிடுவது
சரியாகப்படவில்லை... வெகுஜனமக்க்களுக்கு சென்றடையும் செய்திகளிலாவது
கட்சியின் பெயரை தமிழில் பதிவு செய்யலாமே...
melum valara vaalthum dhanam videos
ReplyDelete