முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

இஸ்லாத்தின் பார்வையில் "காதலர் தினம்" INTJ தலைவர் SM .பாக்கர் அவர்களின் பேட்டி..




சென்னை, பிப்ரவரி 14 : இஸ்லாத்தின் பார்வையில் காதலர் தினம் என்ற தலைப்பில் முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளத்திற்கு இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் மாநிலத் தலைவர் SM . பாக்கர் அவர்கள் அளித்த பேட்டி பின்வருமாறு: இன்றைய நவீன உலகில் முஸ்லிம்கள் வலிகெடுவதற்கு உண்டான வாசல்கள் திறந்து விடப்படுகின்றது. அதில் ஒரு புறம் இந்த காதலர் தினம். காதலை இஸ்லாம் மறுப்பதில்லை. ஆனால் காதல் என்கிற பெயரில் நடக்கின்ற இந்த "காம விளையாட்டுகளைத்தான்" இஸ்லாம் தடுக்கின்றது. நபி(ஸல்) அவர்கள் தவறான பார்வை கண்கள் செய்யும் விபச்சாரம் ஆகும். தவறான பேச்சு நாவு செய்யும் விபச்சாரம் என்றார்கள். இன்றைக்கு இந்த இரண்டும்தான் காதல் என்கிற பெயரில் நடக்கிறது. மேலும் அல்லாஹ் திருமரையிலே விபச்சாரத்தின் அருகில் கூட நெருங்காதீர்கள் என்று கூறுகிறான். இந்த அடிப்படையில் எந்த ஓர் முஸ்லிம் பெண்ணோடு அல்லது ஆணோடு தவறான பார்வை மற்றும் தவறான பேச்சு, தனித்திருத்தல் ஆகியவைதான் இன்றைக்கு காதலாக காதலர் தினத்தன்று நடக்கின்ற நிகழ்வாக கருதப்படுகின்றது. ஆணும், பெண்ணும் தனித்திருந்தால் மூன்றாவதாக அங்கு ஷைத்தான் இருக்கின்றான் என்று முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இந்த காதலர் தினத்தை கொண்டாடுபவர்கள் ஷைத்தானுடைய வலையிலே இருந்து தங்களுடைய மார்கத்தை இழப்பதோடு தங்களுடைய குடும்பத்திற்கும் தவறான பெயரை வாங்கித்தருகின்றனர். இதைத்தடுக்கும் முகமாக கடந்த காதலர் தினத்தன்று கலாச்சார சீரழிவின் களமாக சென்னை மெரீனா கடற்கரையில் இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் மகளீர் அணி தாவா பணியிலே இறங்கி இந்த சீர்கேட்டை தடுக்க முனிந்த போது இந்த சமுதாயத்தின் அவளம் வெளிப்பட்டது. கடற்கரையில் காதலர்களோடு இருந்த பர்தா அணிந்த 10 ஜோடிகளிடத்தில் தங்கள் தாவாவை செய்த போது அதிலே 9 பேர் முஸ்லிம் அல்லாத ஆணுடன் இருந்தது தெரியவந்தது. அதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த மகளீர் குழுவினர் சம்மந்தப்பட்டவர்களுக்கு குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் எடுத்துச் சொல்லி ஒரு சில குடும்பத்தாரிடம் தெரியப்படுத்தி சீர்கேட்டை தடுத்தனர். சென்னை மெரீனா கடற்கரையில் பிடிப்பட்ட 10 பேரில் 9 பேர் முஸ்லிம் பெண்கள் முஸ்லிம் அல்லாதவர்களோடு காதல் என்றால் சென்னை, மற்றும் மாநிலம் முழுவதும் எவ்வளவு பேர் என்பதை நினைத்து பார்க்கும் போது சமுதாயத்தின் நிலை கண்டு நெஞ்சம் பதறுகிறது. இந்த ஆண்டும் பிப்ரவரி மாதம் தொடங்கிய முதலே இதற்கான பிரச்சாரங்களை INTJ தொடங்கி விட்டது. இருப்பினும் INTJ வாழ் மட்டுமே இந்த கலாசார சீர்கேட்டை தடுத்து நிறுத்திவிட முடியாது. இதற்கான அனைத்து சமுதாய அமைப்புகளும், அனைத்து முஹல்லா ஜமாஅத்தார்களும் களமிறங்கி போராடினால் தான் இந்த கலாசார சீர்கேட்டுக்கு ஓர் முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்று அப்போது அவர் தெரிவித்தார். இந்த பேட்டியின் போது மாநில செயலாளர் செங்கிஸ்கான் உடனிருதார் .
source from: www.mttexpress.com, www.muthupettaiexpress.com, www.muthupettaixpress.com

தொகுப்ப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ்

3 comments:

  1. அதிரை குரல்February 14, 2012 at 11:37 AM

    ஒரு அருமையான பேட்டி என்று தான் சொல்ல வேண்டும்.
    இதனைத் தொகுத்து வழங்கிய முத்துப்பேட்டை இலியாஸ் அவர்களுக்கு நன்றி.!
    தங்களது சேவைகள் இன்னும் பல தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. நமது இஸ்லாமிய பெண்கள் இஸ்லத்தை முழமையாக தெரியமல் சிர்கான செயல்களை செய்கிறார்கள் வல்ல ரஹ்மான் அனைத்து உள்ளங்களையும் மாற்றி தீண்தாரியாக ஆக்கி வைப்பான்க ஆமின்

    அன்புடன்.
    அ.ஹாஜா நஜீபுதீன் (ஆ.நே.)

    ReplyDelete
  3. நமது இஸ்லாமிய பெண்கள் இஸ்லத்தை முழமையாக தெரியமல் சிர்கான செயல்களை செய்கிறார்கள் வல்ல ரஹ்மான் அனைத்து உள்ளங்களையும் மாற்றி தீண்தாரியாக ஆக்கி வைப்பான்க ஆமின்

    அன்புடன்.
    அ.ஹாஜா நஜீபுதீன் (ஆ.நே.)

    ReplyDelete

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)