முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டையில் ஒன்றிணைந்த அனைத்து முஸ்லிம் ஜமாஅத் கூட்டம் ! !



முத்துப்பேட்டை, அக்டோபர் 26: முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடை தர்ஹா அருகில் உள்ள ஜீவானந்தம் என்பவரின் அனுபவத்தில் உள்ள இடத்தில் பூமிக்கடியிலிருந்து சூலாயுதம் வந்ததாக பரபரப்பானது.


யாரோ விஷமிகள் தூண்டுதலின் பேரில் அந்த இளைஞர் வேண்டுமென்றே அந்த இடத்தில் சூலாயுதத்தை வைத்துவிட்டு தானாக வந்ததாக நாடகமாடி பிரச்சனையை தூண்டி வருகிறார்.

இதனால் இன்று அஸர் தொழுகைக்கு பிறகு முத்துப்பேட்டை அரபு சாஹீப் பள்ளிவாசல் மதராஸவில் இன்று முத்துப்பேட்டை முஸ்லிம் ஜமாத் ஒருகினைப்பாளார் S.S.பாக்கர் அலி அவர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.

இதில் முத்துப்பேட்டை அனைத்து ஜமாத் நிர்வாகிகள், தமுமுக , SDPI , TNTJ ,முஸ்லிம் லீக் மற்றும் ஊர் பொது மக்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள்.

தீர்மானங்கள்:

வருகின்ற 28.10.2013 மாவட்ட ஆட்சியர்களிடம் மனு கொடுத்து சூலாயுதம் வந்ததாக கூறியவர் பாண்டியன் கைது செய்து அவர்களை விசாரனை செய்ய வேண்டும்.

பாண்டியனை கைது செய்யவில்லை என்றால் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெறும்.

இனி வரும் காலங்களில் ஊரில் எந்த பிரச்சனையாக இருந்தால் இதை போல ஒற்றுமையாக செயல்பட வேண்டும்.

0 comments:

Post a Comment

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)