முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டை பிரச்சனை குறித்து சட்டசபையில் கேள்வி எழுப்பிய ம.ம.க சட்டமன்ற குழு தலைவர் பேராசிரியர் முனைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ்.


முத்துப்பேட்டை, பிப்ரவரி 25/2015: முத்துப்பேட்டை பிரச்சனை குறித்து சட்டசபையில் கேள்வி எழுப்பிய ம.ம.க சட்டமன்ற குழு தலைவர் பேராசிரியர் முனைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ்.MLA.,அவர்களின் கேள்விக்கு மாண்புமிகு முதல் அமைச்சர் கீழ்க்கண்டவாறு பதிலளித்தார்.....
ஆளுநர் உரையின் மீது நடைபெற்ற விவாதத்தின் போது திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் நடைபெற்ற சம்பவம் குறித்து இன்று (20.2.2015) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் விளக்கம் அளித்தார்.முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆற்றிய உரையில்,
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் கடந்த 31.12.2014 அன்று இரவு ஆங்கிலப் புத்தாண்டு தினத்தின்போது இந்துக்கள் சிலர், ஷேக் தாவூத் தர்கா வழியாகச் சென்றபோது, கோஷங்களை எழுப்பியதால் அங்கிருந்த முஸ்லீம்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தபோது அவர்களிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டு, அப்பகுதியில் இருந்த தெரு விளக்குகள் சேதப்படுத்தப்பட்டன.
இதன் பின்னர் சில அடையாளம் தெரியாத நபர்களால் அங்குள்ள மற்றொரு தர்காவின் சுற்றுச்சுவரின் ஒரு பகுதி சேதப்படுத்தப்பட்டது. காவல் துறையினர், உடனடியாகத் தலையிட்டு இருதரப்பினருக்குமிடையே மோதல் ஏற்படாவண்ணம் பார்த்துக் கொண்டு, தக்க பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டனர். இது தொடர்பாக, முஸ்லீம் தரப்பினர் அளித்த புகார்களின் பேரில், முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, வீரமூர்த்தி உள்ளிட்ட 15 பேர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர். இச்சம்பவங்களையடுத்து,
01.01.2015 அன்று சில அடையாளம் தெரியாத நபர்கள் பாலமுருகன் என்பவரது பணிமனையில் இருந்த மூன்று கார்களின் கண்ணாடிகளை சேதப்படுத்தியது தொடர்பாக, அவரது புகாரின் பேரில், மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. காவல் துறையினர் தொடர்ந்து அப்பகுதியில் ரோந்துப் பணி மேற்கொண்டு வருகின்றனர். தற்போது நிலைமை அமைதியாக உள்ளது. வழக்குகள் புலன் விசாரணையில் இருந்து வருகின்றன என்று கூறினார்.
தகவல் நன்றி – பேராசிரியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ்

0 comments:

Post a Comment

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)