முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டை அருகே பயங்கர தீ விபத்து. 4 வீடுகள், வைக்கோல் போர் எறிந்து சாம்பல் திமுக மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் பார்வையிட்டார்.



முத்துப்பேட்டை, பிப்ரவரி/25/2015: முத்துப்பேட்டை அடுத்த ஆரியலூர் திருவாசல் மேடு புதுத்தெரு பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. அங்கே உள்ள குடியிருப்பு பகுதியில் செல்லும் உயர மின் விளக்கு கம்பிகள் தாழ்வாக கூறை வீடுகளை உரசியவாறு செல்கிறது. இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த முருகைய்யன்(65) என்பவரது கூறை வீட்டின் மேல் ஒன்றோடு ஒன்று மின் கம்பி உரசியதால் அதிலிருந்து ஏற்பட்ட நெருப்பு பொறி வழுந்து தீ பற்றி எறிந்தது. இதனை கண்ட மக்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர். அதற்குள் அருகில் இருந்த ராஜேந்திரன், பூமிநாதன், காளிதாஸ் ஆகியோரின் வீடுகளும், அருகில் இருந்த சிவகுமார் என்பவருக்கு சொந்தமான வைக்கோல் போரும் தீ பிடித்து எறிந்தது. தகவல் அறிந்து திருத்துறைப்பூண்டி தீயணைப்பு அலுவலர் லோகநாதன் தலைமையிலும், முத்துப்பேட்டை தீயணைப்பு அலுவலர் நெடுஞ்செழியன் தலைமையிலும் ஏராளமான தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைக்க முயற்சித்தனர். அதற்குள் 4 வீடுகளும் இருகில் இருந்த வைக்கோல் போர் முழுவதும் எறிந்து சாம்பலானது. மேலும் வீடுகளிலிருந்த கட்டில், பீரோல், டிவி போன்ற பொருட்களும் முக்கிய ஆவணங்களும் தீயில் எறிந்து நாசமானது. சேதம் மதிப்பு 3 லட்சம் என்று தெரிகிறது. 

தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு திருவாரூர் மாவட்ட தி.மு.க செயலாளர் பூண்டி கலைவாணன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ந.உ.சிவசாமி, ஒன்றிய செயலாளர் மனோகரன், ஒன்றிய கவுன்சிலர் கண்ணன், திருத்துறைப்பூண்டி தாசில்தார் மதியழகன், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் முருகையன், முன்னால் ஊராட்சி தலைவர்கள் ஞானசேகரன், மேட்டு கோட்டகம் சண்முகம் உட்பட பலரும் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினர். இதில் வருவாய் துறை சார்பில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் விரைவில் நிவாரணம் சழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இது குறித்து எடையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் கூறுகையில் தாழ்வாக செல்லும் மின் கம்பியால்தான் இந்த விபத்து நடந்தது. இதன் போன்ற சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகிறது. மின்சார வாரியம் உடனடியாக நடவடிக்கை எடுத்து இதனை உயரமாக மாற்றி தர வேண்டும் என்றார்.

நமது நிருபர்:

ரிப்போர்ட்டர் முஹைதீன் 

0 comments:

Post a Comment

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)