புது டெல்லி, பிப்ரவரி/26/2015: இந்திய நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை மத்திய ரயில்வே வரவுசெலவுத் திட்டம் தாக்கல் செய்யப்படுகிறது. மோடி தலைமையிலான பாஜக அரசின் முதல் முழுமையான வரவுசெலவுத் திட்டம் என்பதால் இந்த பட்ஜெட் அனைத்து தரப்பினரிடமும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ரயில் பயணிகளின் பாதுகாப்பு திட்டங்களுக்கு ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு முன்னுரிமை கொடுக்க உள்ளார். இந்தியாவில் ஏழைகளும் குளிர்சாதன ரயிலில் செல்ல வழிவகை செய்யவேண்டும் என்று பிரதமர் மோடி அறிவுறுத்தி இருந்தார். அதை ஏற்று குளர்சாதன ரயில்கள் இன்றைய வரவுசெலவுத் திட்டத்தில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ரயில்களில் பயணக் கட்டணமும் மிகவும் குறைவாக இருக்கும்.
.
0 comments:
Post a Comment