முத்துப்பேட்டை, 26/02/2015: முத்துப்பேட்டை அடுத்த குன்னலூர் கிராமத்திலும், அதன் சுற்று வட்டார பகுதியிலும் ஆயிரக்கணக்கான அரசு கேஸ் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் 2 முதல் 5 கிலோமீட்டர் தூரம் உள்ள திருத்துறைப்பூண்டி கேஸ் விநியோகஸ்தரிடமிருந்து சிலிண்டர் பெற்று வந்தனர். இந்த நிலையில் முத்துப்பேட்டையில் தனி கேஸ் விநியோகஸ்தர் நியமணம் செய்யப்பட்டதால் இங்குள்ள குன்னலூர் பகுதி வாடிக்கையாளர்களையும் கேஸ் நிறுவனம் முத்துப்பேட்டையில் பெற மற்றம் செய்தது. இதனால் குன்னலூர் மற்றும் அதன் சுற்று பகுதி மக்கள் 20 முதல் 25 கிலோமீட்டர் தூரம் உள்ள முத்துப்பேட்டையில் பெறும் நிலை ஏற்ப்பட்டது. இதனால் இப்பகுதி மக்கள் அதிருப்தி அடைந்தனர்.
இந்த நிலையில் குன்னலூர் கிராம மக்கள் சார்பில் இந்த நிலையை கண்டித்தும், உடன் இப்பகுதி வாடிக்கையாளர்களுக்கு மீண்டும் திருத்துறைப்பூண்டிக்கே மாற்றி தரக்கோரியும் இன்று 25-ந்தேதி குன்னலூர் கடைதெருவில் சாலை மறியல் போராட்டம் நடத்த போவதாக முடிவு செய்தனர். இதனையடுத்து நேற்று திருத்துறைப்பூண்டி தாசில்தார் மதியழகன் தலைமையில் சமரச பேச்சு வார்த்தை கூட்டம் நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் ஆடலரசன், தி.மு.க மாவட்ட பிரதிநிதி அன்பழகன், காங்கிரஸ் வட்டார வர்த்தக பிரிவு தலைவர் வடுகநாதன், த.மா.கா தலைவர் சந்திரசேகரன், சி.பி.ஐ கிளைச்செயலாளர் பழனி, சி.பி.எம் கிளைச்செயலாளர் பன்னீர்செல்வம், தே.மு.தி.க தலைவர் சுரேஷ்; மற்றும் திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டை கேஸ் ஏஜென்சி உரிமையாளர்கள் உட்பட பலரும் கலந்துக் கொண்டனர். இதில் குன்னலூர் கிராமத்தைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் மீண்டும் திருத்துறைப்பூண்டியிலேயே சிலிண்டர்கள் பெற்று கொள்ளலாம் என்று அதிகாரிகள் தரப்பில் உறுதி கூறி எழுதி கொடுத்ததால் சாலை மறியல் போராட்டத்தை விளக்கி கொண்டதாக அனைத்து கட்சி பிரமுகர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் தெரிவித்தனர்.
நமது நிருபர்:
ரிப்போர்ட்டர் முஹைதீன்
0 comments:
Post a Comment