முத்துப்பேட்டை, பிப்ரவரி/26/2015முத்துப்பேட்டை அடுத்த உதயமார்த்தாண்டபுரம் கிராமத்தில் மக்கள் நேற்காணல் முகாம் நேற்று நடைபெற்றது. நுகர் பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் அழகிரிசாமி தலைமை வகித்தார். மன்னார்குடி ஆர்.டி.ஓ செல்வ சுரபி, திருத்துறைப்பூண்டி தாசில்தார் மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சமூக பாதுகாப்பு நலத்துறை சார்பில் 105 பேருக்கு கல்வி கடன், 25 பேருக்கு பட்டா மாற்றுதல், 55 பேருக்கு புதிய ரேசன் கார்;டு, 2 பேருக்கு சலவைப்பெட்டி, 11 பேருக்கு தையல் மிசின், 7 பேருக்கு உரம் ஆகிய நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட வழங்கல் அலுவலர் மனோகரன், தாட்கோ மேலாளர் வைத்தியநாதன், ஒன்றிய ஆணையர்கள் சாந்தி, வெங்கடேசன், ஊராட்சி மன்ற தலைவர் வைத்தியநாதன், கால்நடை மருத்துவர் கங்கா சூடன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நாச்சிக்குளம் தாகீர், முன்னால் ஒன்றிய கவுன்சிலர் பழணிவேல், வருவாய் ஆய்வாளர் முருகேசன், கிராம நிர்வாக அலுவலர் ராஜராஜசோழன் ஆகியோர் கலந்துக் கொண்டனர். முன்னதாக இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் மதிவாணன் வருவதாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. 10 மணிக்கு துவங்க வேண்டி நிகழ்ச்சியை கலெக்டரை எதிர்பார்த்து திடீரென்று அவர் வராததால் 12 மணிக்கு நிகழ்ச்சி துவக்கப்பட்டது. இதனால் நீண்ட நேரம் காத்திருந்த மக்கள் எல்லோருக்கும் சோர்வு ஏற்பட்டு பலரும் தூங்கினர். அப்பொழுது நிகழ்ச்சி துவங்;கிய சில நிமிடங்களில் ஒரு 70 வயது மூதாட்டிக்கு மயக்கம் ஏற்பட்டு நிகழ்ச்சி மேடை அருகே விழுந்தார். உடன் வருவாய் துறையினர் மூதாட்டிக்கு தண்ணீர் கொடுத்து மேடை எதிர்புறம் படுக்க வைத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
நமது நிருபர்:
ரிப்போர்ட்டர் முஹைதீன்
நமது நிருபர்:
ரிப்போர்ட்டர் முஹைதீன்
0 comments:
Post a Comment