சென்னை, பிப்ரவரி 19: பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியாவின் சார்பில் 17/2/2014 அன்று இராமநாதபுரத்தில் நடைபெற்ற பாப்புலர் ஃப்ரண்ட் தின பேரணியில் பொதுமக்கள் மீது காவல்துறையின் கண்மூடித்தனமான தாக்குதலை கண்டித்து இன்று 18/2/2014 மாலை 4.30 மணியளவில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆப் இந்தியாவின் சென்னை மாவட்டம் சார்பில், சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சென்னை மாவட்ட தலைவர் நாகூர் மீரான் தலைமை தாங்கினார். பெண்கள், குழந்தைகள் என்று கூட பாராமல் பாப்புலர் ஃப்ரண்ட் தினப் பேரணியில் கலந்து கொண்ட பொதுமக்கள் மீது தடியடி நடத்திய காவல்துறையின் அராஜக போக்கை கண்டித்து கோஷம் எழுப்பபட்டது. பல்வேறு இயக்கத் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டு இந்தத் தாக்குதலில் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கக் கோரி மாநில அரசிற்கு கோரிக்கை விடுத்தனர். இந்நிகழ்ச்சியில் திரளாக பொதுமக்கள் கலந்து கொண்டு காவல்துறைக்கு எதிராக தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
0 comments:
Post a Comment