முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டையில் எழுச்சி மிக்க நோன்பு திறக்கும் நிகழ்ச்சி...





ஆகஸ்ட் 22: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் இதுவரை நடைபெறாத நோன்பு திரோக்கும் நிகழ்ச்சியை K .N . ஆத்மநாதன் பெரிய பண்ணை ஜாம்பை-வடகாடு, R .S .வீர சேகரன் உப்பூர், P . பாலசுந்தரம் என மூன்று மாற்று மத சகோதரர்கள் நேற்று 21 .08 .2011 முத்துப்பேட்டை கொய்யா மஹாலில் ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் முத்துப்பேட்டையை சார்ந்த அனைத்து முஹல்லா நிர்வாகிகள், மற்றும் முக்கியஸ்தர்கள், இஸ்லாமிய அமைப்புகளைச் சார்ந்த பொறுப்பாளர்கள் மற்றும் மாற்று மத முக்கியஸ்தர்கள், மற்றும் சான்றோர்கள் சமய நல்லிணக்க ஆர்வலர்கள் வர்த்தக பெருமக்கள் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியை சிறபித்தார்கள். இந்நிகழ்ச்சி இரு சமூகங்களுக்கிடையேயான சகோதருத்துவம் மிக்க நெகல்வான ஒரு சந்திப்பாகவே நடந்தேறியது. முத்துப்பேட்டையில் நற்சிந்தனையோடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சிக்கு முத்துப்பேட்டை யில் அனைத்து மக்களிடையேயும் மிகவும் சகோதர வாஞ்சையை ஏற்படுத்தியது. இப்தார் நிகழ்ச்சிக்கு பிறகு தொழுகை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த சகோதரர்களுக்கும், உலக மக்கள் அனைவருக்கும் இறைவனிடம் பிரார்த்தனை செய்யப்பட்டது. எதிவரும் காலங்களில் நாமும் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து மாற்று மத சகோதரர்களுக்கு அழைப்பு கொடுத்து விருந்து உபசரிப்பு செய்வது என முடிவெடுக்கப்பட்டது . இந்நிகழ்ச்சி உண்மையில் மிகப்பெரியதொரு நிகழ்வை உருவாக்கியது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்றே சொல்லலாம். இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்த சகோதரர்களுக்கு தங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெருவிக்க தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் : 90472 61919 ...

குறிப்பு:

இந்நிகழ்ச்சியில் மிகவும் வருந்தத்தக்க சம்பவம் என்னவெனில் முத்துப்பேட்டை காவல் துறையைச்சார்ந்த DSP,INSPECTER,SI, மற்றும் உளவு பிரிவுகளுக்கு அழைப்பு கொடுத்தும் வரவில்லை என்பது மக்கள் மத்தியிலும், இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் மத்தியிலும் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது. இரு சமூகங்களின் நல்லிணக்க ஒற்றுமைக்கு மிகவும் முக்கியமான இந்நிகழ்ச்சிக்கு காவல்துறை கலந்து கொண்டிருந்தாள் மிகவும் சிறப்பாக இருந்திருக்கும் என்பதே மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது.

தொகுப்பு

ரிபோர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி, EK . முனவ்வர் கான். H . தமீம் நியாஸ்

0 comments:

Post a Comment

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)