7:35 PM
இஸ்லாமியர்களுக்கு ஒரு துன்பம் என்றால் ஓடோடி வந்து போராட்ட களத்தில் சிங்கமாய் கர்ஜிப்பவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் சகோதரர் தொல்.திருமாவளவன் .அவர் இஸ்லாத்தின் மீதும் இஸ்லாமியர்களின் மீதும் அளவில்லா அன்பும் ,ஈடு இணையற்ற கருணையும் கொண்டவர் என்பது நாம் யாவரும் அறிந்த ஒன்று .
இஸ்லாமியர்களின் 5 கடைமைகளில் ஒன்றான ரமலான் நோன்பை சகோதரர் தொல் திருமாவளவன் அவர்கள் கடந்த 10 ஆண்டிற்கும் மேலாக அதிகாலையில் எழுந்து சஹர் செய்து ரமலான் நோன்பிருப்பதை கடைபிடித்து வருகிறார் .
வழக்கம்போல் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் சகோதரர் தொல்.திருமாவளவன் இந்த வருடமும் இஸ்லாமியர்கள் கடைபிடிக்கும் ரமலான் நோன்பை கடைபிடித்தார் .
வழக்கம் போல் மூன்று நாட்கள் மட்டுமே நோன்பிருக்கும் தொல்.திருமாவளவன் இந்த வருடம் நான்கு நோன்பை கடைபிடித்தார் .
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சென்னை அபூ பேலஸ் ஹோட்டலில் நடைபெற்ற இப்தார் நிகழ்ச்சியில் மனிதநேய மக்கள் கட்சியின் பொது செயலாளர் தமீமுன் அன்சாரி ,SDPI கட்சியின் மாநில தலைவர் தெஹ்லான் பாகவி ,இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் மாநில செயலாளர் முஹம்மது முனீர் ,இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில தலைவர் தடா ரஹீம் ,அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பின் தலைவர் அப்போலோ ஹனீபா ,சுன்னத் ஜமாஅத் ஐக்கிய பேரவை தலைவர் மேலைநாசர்,பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மாநில தலைவர் இஸ்மாயில் ,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நிஜாமுதீன் ம்ற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை பொது செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் உட்பட கட்சி நிர்வாகிகள் வாழ்த்தி பேசினர்.
தொகுப்பு ஜே :ஷேக் பரீத்
7:06 PM
கடந்த 10-08-2014 அன்று பட்டுக்கோட்டையில் தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளையின் முன்னாள் செயளாலர் சகோதரர் சாதிக் மற்றும் அவர்சகோதரர் யூசுப் இருவரும் குடும்பத்தோடு காரில் வந்துகொண்டு இருக்கும்போது அவரையும் அவர்குடும்பத்தாரையும் தேவையில்லாமல் கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தி தீட்டியுள்ளார் போக்குவரத்து காவலர்
ஏன் தேவையில்லாமல் திட்டுகிற்ரிர்கள் உங்கள் மீது போலீசில் புகார் கொடுக்க போகிறேன் என் சொல்லிவிட்டு பொலிஸ் ஸ்டேசன் வந்தனர்
இவர்களை பிந்தொடர்ந்து வந்த அந்த காவலர் ஒரு குடிகாரன் போல லத்தியை எடுத்து போலீஸ் ஸ்டேசன் உள்ளேயே வைத்து உயிர் போகும் அளவுக்கு தாக்கியுள்ளார் இதில் அடிதாங்காமல் யூசுப் அவர்கள் மயக்கமடைந்தார்.
தனது சகோதரன் தாக்கப்படுவதை பார்த்து பொருக்காமல் நியாயம் கேட்ட சகோதரியையும் கேவலமாக திட்டியுள்ளார் அந்த வெறியர்
இப்படி ஆசைதீர அநியாயம் செய்தபின்பு வெளியே அனுபியுள்ளார்கள்
லோக்கல் பத்திரிக்கையாளர் ஒருவர் நம்மிடம் கருத்து தெரிவிக்கையில் அந்த போக்குவரத்து காவலர் பலத்டவை இதே போல நடந்து தலைமை அதிகாரி வார்னிங் பன்னியுள்ளதாகவும் கூறினார்.
இந்நிலையில்
முத்துப்பேட்டை கிளைகளின் சார்பில் மஸ்ஜிதுன் நூரில் ஆலோசனை கூட்டம் புரைதா மண்டல தலைவர் செய்யது இபுறாகிம் தலைமையில் நடைபெற்றது. இதில் 19.8.2014 அன்று நடைபெறும் பட்டுக்கோட்டை காவல்நிலையம் முற்றுகை போராட்டத்திற்கு அதிகமான மக்களை அழைத்துச்செல்ல ஆலோசனை செய்யப்பட்டது. இரண்டு கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் அனைவரும் அதிக அளவில் சென்று பிரச்சார பணி செய்வது என் முடிவு செய்யப்பட்டது.
தொகுப்பு ஜே :ஷேக் பரீத்
8:03 PM
அதிராம்பட்டினம் மேலத்தெருவை சேர்ந்த முகைதீன் அப்துல் காதர் மற்றும் மர்ஹூம் முகம்மது அன்சாரி ஆகியோரின் பேத்தியும், சேக்கனா பஷீர் அஹமது, நிஜாம் ஆகியோரின் தம்பி மகளும், ராஜிக் முஹம்மது அவர்களின் மகளுமாகிய பேபி ஹஸ்னா [ வயது 4 ] இன்று காலை 8 மணியளவில் வஃபாத்தாகி விட்டது.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா இன்று காலை 11.30 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
7:56 PM
இந்திய செவிலியர்களை பத்திரமாக ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினர் திருப்பி அனுப்பியதற்க்கு நன்றி தெரிவிக்கும் முகமாக இளைஞர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் சின்னம் பொறித்த பனியன் போட்ட விவகாரம்,கோவையில் மதகுரு உள்பட ஆறு பேரை பொய் வழக்கில் கைது செய்து இருப்பது,விசாரணை என்ற பெயரில் தமிழகம் முழுவதும் இஸ்லாமிய இளைஞர்களை கைது செய்து சட்டவிரோத காவலில் வைத்து விசாரித்து அனுப்புவது,இது போன்ற காவல்துறையின் செயல்பாடுகள் கடுமையான கண்டனத்திற்க்குரியது.
காவல்துறையிலுள்ள ஒரு சில அதிகாரிகளின் இது போன்ற செயல்களால் ஒட்டுமொத்த காவல்துறையும் களங்கத்தை சுமந்து நிற்கிறது.வரம்புமீறும் காவல்துறை அதிகாரிகள் மீது உடனுக்குடன் உரிய நடவடிக்கை எடுத்து மக்களின் நன்மதிப்பை பெறும் துறையாக,காவல்துறையை தமிழக அரசு மாற்ற வேண்டும்.
காவல்துறையை தன் கையில் வைத்திருக்கும் தமிழக முதல்வர் இதை கவனத்தில் கொள்ள தவறினால் அவரது ஆட்சிக்கு இத்தகைய செயல்கள் மிகப்பெரிய இழப்பை தேடி தரும் என்பதில் ஐயமில்லை
முத்துப்பேட்டை,ஆகஸ்ட் 01: முத்துப்பேட்டை P.K.T. ரோடு மர்ஹும் S.M.K.N.நெயனாம்ஷா மரைக்காயர் அவர்களின் மகனும், S.M.K.N.முஹம்மது தாவுது சகோதரர்களின், சகோதரரும், கொய்யா முஹம்மது தாஜுதீன் சகோதரர்களின் தகப்பனாரும், A.S.N.முஹம்மது இபுராஹீம், J. ஷேக் பரீது ஆகியோரின் மாமனாருமாகிய "கொய்யா S.M.K.N.அப்துல் ரஜாக் ஹாஜியார்" அவர்கள் இன்று காலை 6 மணியளவில் மௌத்தாகி விட்டார்கள்.
(இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்)
அன்னாரின் ஜனாஸா அடக்க நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.
அறிவிப்பவர்: கொய்யா S.M.K.N.முஹம்மது தாவுது.
மேலும் தொடர்புக்கும்:
A.S.N.முஹம்மது இபுராஹீம்.....+91 98947 95822
A.முஹம்மது சாதாத்....+91 96599 81181
A.அப்துல் மாலிக் .....+91 90031 3313
J. ஷேக் பரீது: +91 7200 116852
முத்துப்பேட்டை, ஜூலை 30: முத்துப்பேட்டை குட்டியார் பள்ளி வாசலில் நடைபெற்ற நோன்பு பெருநாள் தொழுகை மிக சிறப்பாக நடைபெற்றது.
துபாய், ஜூலை 28: இன்று அரபு நாடுகள் முழுவதும் நோன்பு பெருநாள் சிறப்பாக மிக சிறப்பாக நடைபெற்றது. அதில் துபாய் அமிரகத்தில் இன்று காலை சரியாக 6:08 மணியளவில் ஈத்கா மைதானாத்தில் நோன்பு பெருநாள் தொழுகை மிக சிறப்பாக நடைபெற்றது. இதில் எல்லா நாடுகளை சார்ந்தவர்களும் தொழுத வண்ணம் மிக சிறப்பாக இருந்தது. இந்த தொழுகையில் கலந்து கொண்ட வர்களின் எண்ணிக்கை சுமார் 1 லட்சத்திற்கு மேல் மக்கள் திரளாக வந்து கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
முத்துப்பேட்டை ஜுலை 27: முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடை அம்பட்டாங்கொல்லை பகுதியில் உள்ள கந்தபரிச்சான் ஆற்றில் கரை ஓரம் நேற்று காலை பட்ட பகலில் ஒரு பெண் உடம்பில் மண்ணனையை ஊற்றி தீ வைத்த கொண்டு எரிந்த நிலையில் சத்தம் போட்டார். இதனை கண்ட பொதுமக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் அதிர்ச்சி அடைந்து நின்றனர். சற்று நேரத்தில் உடம்பில் பற்றிய தீ எரிந்து நிலையில் கீழே அந்த பெண் விழுந்தார். பின்னர் பொதுமக்கள் மணல்களை அள்ளி வீசி தீயை அணைத்தனர். அதற்குள் அந்த பெண்ணும் தீயில் கருகி இறந்து போனார். உடன் முத்துப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் சண்முகவேல், சப்-இன்ஸ்பெக்டர் சாமிநாதன் சென்று விசாரனை நடத்தினார்கள்.
இதில் அதே பகுதியை சேர்ந்த சாம்பசிவம் என்பவரது மனைவி சரோஜா(65) என்று தெரியவந்தது. மேலும் சரோஜா சில வருடங்களாக மன நலம் பாதிக்கப்பட்டு கோவில், தர்ஹா போன்றவைகளுக்கு சென்றும் குணம் ஆகாமல் வீட்டில் இருந்த அவர் நேற்று பகல் மண்ணனை கேன் மற்றும் தீ பெட்டியை எடுத்து சென்றும் கந்தப்பரிச்சான் ஆற்று திடலில் நின்று தீ வைத்து கொண்டதாக விசாரணையில் தெரிந்தது. இது குறித்து சரோஜாவின் உறவினர் சீனிவாசன் கொடுத்த புகாரின் அடிப்படையில் முத்துப்பேட்டை போலீசார் சரோஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து விசாரனை மேற்கொண்டு உள்ளனர். இச்சம்பவம் முத்துப்பேட்டை பரபரப்பை ஏற்படுத்தியது.


முத்துப்பேட்டை, ஜுலை 27: முத்துப்பேட்டை அடுத்த ஜாம்பவானோடை தர்ஹாவில் மதநல்லிணக்க இப்தார் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. தர்ஹா முதன்மை அறங்காவலர் பாக்கர் அலி சாஹிப் தலைமை வகித்தார். ஊர் முக்கிய பிரமுகர்கள் முன்னிலை வகித்தனர். முன்னதாக டிரஸ்டி தமீம் அன்சாரி சாஹிப் வரவேற்று பேசினார். இதில் சிறப்பு விருந்தினராக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மா.மதிவாணன,; திருவாரூர் மாவட்ட எஸ்.பி.காளிதாஸ் மகேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு நோன்பு திறந்தனர். முன்னதாக மாவட்ட ஆட்சியர் மதிவாணன் பேசுகையில்: இப்படி ஒரு புனித பாக்கியத்தை தந்த தர்ஹா நிர்வாகத்துக்கு நன்றி. மதங்களை கடந்து சகோதரத்துவத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்து உள்ளது. நாம் செய்த ஒவ்வொரு காரியமும் நல்லதே செய்ய வேண்டும். நல்லதே கருதவேண்டும் என்றலாம் இஸ்லாத்தில் போதிக்கப்பட்டு வருவதை நான் பல இடங்களில் கேட்டு உள்ளேன். அனைத்திலும் சமாதானம் என்ற ஒரே வாக்கியத்தையே மையப்படுத்துகிறது. இஸ்லாத்தில் போதிக்கப்படும் அனைத்திலும் சமாதானத்தையே கூறப்படுகிறது என்பது மகிழ்ச்சியை தருகிறது, இந்த நாளில் சகோதரத்துவத்தில் நாம் வாழ வேண்டும். மத நல்லினக்கத்தோடு வாழ வேண்டும் என்று நாம் உறுதி எடுப்போம் என்றார். மாவட்ட எஸ்.பி காளிதாஸ் மகேஷ்குமார் பேசுகையில்: இந்த நாளில் சகோதரத்துவத்தையும், ஒற்றுமையையும் ஏற்படுத்தும் வகையில் விழா நடத்த கோரிக்கை வைத்தேன். செய்து கொடுத்த தர்ஹா நிர்வாகத்துக்கு நன்றியை தெரிவிக்கிறேன். அதே போல் இந்த இப்தார் நிகழ்ச்சியில் ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் இப்பொழுது நாம் காணமுடிகிறது. இது போல் அனைத்து நிகழ்ச்சிகளிலும் இருக்க வேண்டும் என விரும்புகிறேன். உங்களை போன்றவர்கள் ஏற்படுத்தி தரவேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் திருத்துறைப்பூண்டி வட்டாச்சியர் மதியழகன், ஒன்றிய குழுத் தலைவர் நடராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி, முன்னால் வட்டார வளர்ச்சி அலுவலர் சக்திவேல், முத்துப்பேட்டை டி.எஸ்.பி.கணபதி, இன்ஸ்பெக்டர்கள்: எடையூர் பாண்டியன், முத்துப்பேட்டை சண்முகவேல், ஒன்றிய கவுன்சிலர் ஜாம்பை கல்யாணம், ஜாம்பை இளைஞர் நற்பணி மன்றம் தலைவர் கண்ணன், குட்டியர் பள்ளி தலைவர் காதர் உசேன், தமிழ் இலக்கிய மன்ற செயலாளர் ராஜ்மோகன், ரோட்டரி தலைவர் வேதசங்கர், வர்த்தகக்கழக தலைவர் ராஜாராமன், பொதுச்செயலாளர் ராமலிங்கம், விவசாயிகள் பிரிவு நிர்வாகி முருகையன், சமூக ஆர்வலர் சுல்தான் இபுராஹிம், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சண்முகம், புதுபள்ளி நிர்வாகி சிராஜிதீன், பேரூராட்சி கவுன்சிலர் நாசர், நகர காங்கிரஸ் தலைவர் ராஜேந்திரன், மாநில இளைஞர் காங்கிரஸ் முன்னால் துணைத் தலைவர் கந்தவேல், மர்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் நகர செயலாளர் காளிமுத்து, தர்ஹா நிர்வாகி சேட்டு, திருத்துறைப்பூண்டி சிராஜிதீன் உட்பட பலரும் கலந்துக் கொண்டனர். முடிவில் தர்ஹா நூர் முகம்மது லெப்பை நன்றி கூறினார்.
.
முத்துப்பேட்டை, ஜுலை 27: முத்துப்பேட்டை அடுத்த பேட்டை அங்களம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பரமணியன்(45), மாட்டு வண்டியின் கூலி தொழிலாளியான இவரது மகள் மாரியசெல்வி(26)க்கு கடந்த 11.07.2014 அன்று பட்டுக்கோட்டை ஆலடிக்குமுளை கிராமத்தை சேர்ந்த வினோத் என்பவருக்கு திருமணம் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோவிலில் நடைபெற்றது. அதற்காக தமிழக அரசின் திருமண உதவி திட்டத்தில் பணம் பெற கடந்த 22.06.2014 அன்று முத்துப்பேட்டை ஒன்றிய குழு அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். அன்றைய நாள் முதல் சுப்பிரமணியனை தினமும் ஒவ்வொரு ஆவனங்களை கேட்டு அலையவிட்ட கிராம நல அதிகாரிகள் இறுதியாக கடந்த 21.07.2014 திங்கள் அன்று சுப்பிரமணியன் வீட்டை கிராம நல அலுவலர் சீதா லட்சுமி தலைமையில் மூன்ற பெண் அதிகாரிகள் பார்வையிட்டனர். பின்னர் அவர்கள் சுப்பிரமணியத்திடம் இதில் நிறைய பணிகள் இருப்பதாகவும், பத்தாயிரம் வரை செலவு இருப்பதாகவும் அலுவலர் சீதா லட்சுமி, சுப்பிரமணியத்திடம் பத்தாயிரம் பணம் கொண்டு வரும் படி கூறி சென்றுள்ளார்.
இந்த நிலையில் அடுத்த நாள் அலுவலகம் சென்ற சுப்பிரமணியன் தான் மிகவும் சிரமப்படுவதாகவும் அதனால் என்னிடம் பணம் இல்லை என்று கூறி உள்ளார். அதற்கு அலுவலர் சீதா லட்சுமி சும்மா சம்மா இங்கு வர கூடாது. இறுதியாக எட்டாயிரம் பணம் கொண்டு வந்து கொடுத்தால் தான் உதவி பணம் பெற்று தருவேன் என்று கோபமாக கூறி உள்ளார். இதனால் அதிர்ப்தி அடைந்த சுப்பிரமணியன் மற்றும் அவரது மகள் மாரிசெல்வி ஆகியோர் நேற்று முன்தினம் 24.07.2014 தேதி மீண்டும் அலுவலர் சீதா லட்சுமியை நேரில் சந்தித்த போது மீண்டும் அதே பாணியில் அலுவலர் சீதா லட்சுமி கூறி திருப்பி அணுப்பி உள்ளார். இதனால் மன உலைச்சல் அடைந்த சுப்பிரமணியன், நாகை லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் புகார் கொடுத்தார். அதன் படி லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி.சிவஞான வடிவேல், இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ்குமார், சந்திரன், உதவி அலுவலர்கள் ரவி சந்திரன், பாண்டியன், சந்திரபாலன், அன்பழகன் ஆகியோர் அடங்கிய லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று மதியம் 2.30 மணிக்கு அலுவலகத்தை கண்காணித்து கொண்டிருந்தனர். அப்பொழுது சுப்பிரமணியத்திடம் ரசாயணம் தடவிய ரூபாய் 8 ஆயிரம் பணங்களை கொடுத்து அனுப்பினர்.
அலுவலர் சீதா லட்சுமி பணத்தை பெற்று கொண்டு நாளை மீண்டும் ஒரு சான்று கொண்டு வரும் படி கூறினார். இதனை மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் அலுவலகத்தில் உள்ள முக்கிய ஆவணங்களை பல மணி நேரம் சோதனையிட்டு அலுவலர் சீதா லட்சுமியை கைது செய்து கோர்டில் ஆஜர் படுத்த நாகை லஞ்ச ஒழிப்பு அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். கைது செய்யப்பட்ட அலவலர் சீதா லட்சுமியின் கணவர் சேகர் ஏற்கனவே கிராம நிர்வாக அலுவலராக இருந்தபோது லஞ்ச ஒழிப்பு போலீசில் மாட்டி பணி நீக்கம் செய்யப்பட்டவர். தற்பொழுது திருத்துறைப்பூண்டி ம.தி.மு.க நகர செயலாளாராக உள்ளார். இச்சம்பவம் செய்தி மக்கள் மத்தியில் பரவியதால் முத்துப்பேட்டையில் பெரும் பரபர்பபு எற்பட்டு உள்ளது.
முத்துப்பேட்டை, ஜூலை 23: முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து சகோதரர் களுக்கும் எனது முதற்கன் சலாத்தை தெரிவித்துக் கொள்ள கடமைப் பட்டுள்ளேன். அன்பார்ந்த சகோதரர்களே வருகிற ஹிஜ்ரி 1435 ஷவ்வால் பிறை 5, அதாவது ஆங்கில தேதியின் அடிப்படையில் 02-08-2014 ஞாயற்று கிழமை காலை 11:30 மணியளவில் பெரியோர்களால் நிச்சயித்த வண்ணம் முத்துப்பேட்டை CR திருமண மண்டபத்தில் எனக்கு திருமணம் நடைபெற உள்ளது.
எனவே எனது உற்றார், உறவினர், நண்பர்கள், மற்றும் பெரியோர்களும் திருமணத்தில் தவறாமல் கலந்து கொண்டு எங்களுடைய ஈருலக வாழ்க்கைக்கு ஏக இறைவனிடம் எங்களுக்காக துவா செய்யுமாறு அன்புடன் அழைக்கிறேன்.
இப்படிக்கு: M. முஹம்மது முஸ்தகீம். BE.
முத்துப்பேட்டை, ஜூலை 23: முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து சகோதரர் களுக்கும் எனது முதற்கன் சலாத்தை தெரிவித்துக் கொள்ள கடமைப் பட்டுள்ளேன். அன்பார்ந்த சகோதரர்களே வருகிற ஹிஜ்ரி 1435 ஷவ்வால் பிறை 6, அதாவது ஆங்கில தேதியின் அடிப்படையில் 03-08-2014 ஞாயற்று கிழமை காலை 11:30 மணியளவில் பெரியோர்களால் நிச்சயித்த வண்ணம் முத்துப்பேட்டை குத்பா ஜும்மாஹ் பள்ளிவாச லில் எனக்கு திருமணம் நடைபெற உள்ளது.
எனவே எனது உற்றார், உறவினர், நண்பர்கள், மற்றும் பெரியோர்களும் திருமணத்தில் தவறாமல் கலந்து கொண்டு எங்களுடைய ஈருலக வாழ்க்கைக்கு ஏக இறைவனிடம் எங்களுக்காக துவா செய்யுமாறு அன்புடன் அழைக்கிறேன்.
இப்படிக்கு: M. முஹம்மது ஆசிக் ஹலீம்