முத்துப்பேட்டை ஆகஸ்ட் 01 : கல்வி மட்டுமே ஒரு மனிதனை முழுமைப் படுத்தக் கூடிய ஓர் ஆயுதமாகும். கல்வி கற்காத மனிதன் அரை மனிதன் என்று சமுதாயத்தில் தூற்றப்படுவான். கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு நமதூர்முத்துப்பேட்டையில் கல்வி கற்றோரை விரல் விட்டு எண்ணிவிடலாம், ஆனால் தற்போது அல்லஹ்வின் நாட்டத்தால் அந்நிலை மாறி கல்வி கற்றோர், கர்பிப்போர்களின் எண்ணிக்கை கணிசமாகவே உயர்ந்துள்ளது. பொதுவாகவே முஸ்லிம் சமுதாய இளைஞர்கள் கல்வி கற்காமலே வெளிநாட்டுக்கு சென்று சம்பதிபதிலேயே குறியாக இருந்தனர். ஆனால் தற்போது அந்நிலை மாறி வெளிநாடுகளுக்கு சென்று படிக்கும் அளவிற்கு நமது சமுதாயம் முன்னேற்றம் அடைந்துள்ளது வரவேற்க்கத்தக்கதே.முத்துப்பேட்டையில் உள்ள பேட்டை பள்ளி, அரபு சாஹிப் பள்ளி, குட்டியர் பள்ளி, கொத்பா பள்ளி, ஜாமியா பள்ளி, முஹைதீன் பள்ளி, மதினா பள்ளி. புது பள்ளி, மக்கா பள்ளி, நூர் பள்ளி, ரஹ்மத் பள்ளி ,ஆசாத்நகர் பள்ளி, தர்ஹா பள்ளி, ஆகிய 13 பள்ளிவாசல் அனைத்து முஹல்லா வாரியாக படிப்பவர்களின் எண்ணிக்கை குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் ஆய்வில் இறங்கியது. அதன் படி பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவியர் (ஆண், பெண்) களின் எண்ணிக்கையின் தொகுப்பை தங்களுடைய பார்வைக்கு வெளியிடுகிறோம். இன்ஷா அல்லாஹ் இதனின் தொகுப்பு வருடம் வருடம் ஆய்வில் இறங்கி உங்களுடைய பார்வைக்கு கொண்டு வருவோம் என்பதையும் இதன் மூலம் தெய்ரிவித்துக் கொள்கிறோம்.
நமது நிருபர்
தொகுப்பு, ரிபோட்டர் இல்யாஸ் & ரிபோட்டர் உமர் முக்தார் &
ASNS.அப்துல் பாரி
0 comments:
Post a Comment