முத்துப்பேட்டை ஜூலை 26 : அலையாத்திக் காடுகளுக்குப் பேர் போன இடம்தான் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள முத்துப்பேட்டை. இதற்கு மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், என்று எங்கு இருந்து சென்றாலும் கிட்டத்தட்ட ஒரே பயண நேரம்தான் முத்துப்பேட்டைக்கு. பஸ் நிலையத்திலிருந்து ஆட்டோவில் கொஞ்சம் தூரம் பயணமானாள் ஆறும் கடலும் சங்கமிக்கும் இடம்தான் 'லகூன்!'
சுற்றிலும் வேர்களைத் தண்ணீருக்கு மேல் வைத்து சுவாசிக்கும் அலையாத்தி மரங்கள் காடாகப் பறந்து விரிந்து நிற்க, அதிக ஆழமற்ற - கடலிலும் சேர்க்க முடியாத, ஆற்றிலும் சேர்க்க முடியாத - அந்த நீர்ப்பரப்பில் செல்லும் அனுபவம், அங்கு மட்டுமே கிடைக்கும் பரவசம்!
இந்த அலையாத்திக் காடுகளில் நரிகண்டல், கருங்கண்டல், நீர்முள்ளி, திப்பரத்தை, சுப்புன்னை, வென்கடல், தில்லை என நமக்கு அறிமுகமே இல்லாத மூலிகை மரங்களையும் பூநாரை, கூலக்கட, நீர்க் காகம், ஊசிவால் வாத்து என அழியும் தருவாயை எட்டிவிட்ட பறவைகளையும் தன்னுள் புதைத்து வைத்து உள்ளது இந்த கடல் புதையல்!
படகு சவாரி கிடைக்கிறது. ஆங்காங்கே குட்டிக் குட்டித் தீவுகள் போல காடுகள் இருக்கின்றன. சுற்றுலாப் பயணிகளுக்காகவே அவற்றில் குடிசைகள் அமைத்து இருக்கின்றனர்.காட்டுக்குள் நடந்து போக மரத்தில் பாலமும் அமைக்கப் பட்டுள்ளன. உயர் கோபுரங்களிலும் நின்று பார்க்கலாம். இதனை பார்க்க அலை மோதும் கூட்டம் அதில் வெளிநாட்டவர்களையும் அழைப்பதில் விட்டுவைக்கவி இல்லை அட்டகாசமான பயணத்திற்கு அலையாத்திக் காடுகள் கேரண்டிதான்!
தொகுப்பு: ரிப்போர்ட்டர் இல்யாஸ்
0 comments:
Post a Comment