முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

ஜெர்மனி, பிரான்சைத் தொடர்ந்து இத்தாலியும் தற்போது பர்தாவுக்குத் தடை!!!

ஆகஸ்ட்18: ஐரோப்பிய நாடுகளான ஜெர்மனி, பிரான்சைத் தொடர்ந்து இத்தாலியும் தற்போது முஸ்லிம் பெண்கள் அணியக்கூடிய புர்காவைத் தடை செய்துள்ளது!

பெண்ணியவாதிகள் மத்தியில் இது வரவேற்கதக்க விஷயம் என்றாலும், இந்த விஷயத்தை, முஸ்லிம் மக்கள் மீது கலாசாரரீதியாகவும், மேற்கத்திய நாட்டு அரசுகள், கட்டவிழ்த்துவிடும் அடக்குமுறையின் ஒரு அங்கமாகவே பார்க்கவேண்டும்.
ஏற்கனவே டென்மார்க்கில் ஒரு பத்திரிகை முஸ்லிம்களின் போற்றுதலுக்குரிய முகமது நபி (ஸல்) அவர்களை கேலிச்சித்திரமா போட்டது. அதைதொடர்ந்து வளைகுடா நாடுகள் மொத்தமும், உலகத்துலேயே பாலுக்கு பேர்போன டென்மார்க்கிலிருந்து ஏற்றுமதியாகிற பொருட்கள தடை செய்ததன் மூலம் தங்கள் எதிர்ப்பை காட்டினர்.
இருந்தபோதும், மேற்கத்திய நாட்டு அரசாங்கங்கள், முஸ்லிம் மக்களுக்கு எதிராக செயல்படுவதை நிறுத்தவில்லை.
இந்த இடத்தில் ஒருவிஷயத்தை சொல்லவிரும்புகிறேன். எனக்குதெரிந்த ஒரு டாக்டர், முப்பது வருடங்களுக்குமுன் அமெரிக்காவில் செட்டில் ஆனவர். அவர் ஒரு முஸ்லிம். அமெரிக்க குடிஉரிமை பெற்றவர். வருடம் ஒருமுறை இந்தியா வந்து செல்வார். இவ்வாறு அவர், ஒவ்வொரு முறையும் இந்தியாவிலிருந்து அமெரிக்கா திரும்பும்போதும், அமெரிக்க குடிஉரிமை அதிகாரிகளால் தேவையில்லாத கேள்விகள் கேட்கப்பட்டு, கிட்டத்தட்ட அவமான படுத்தபடுவாராம். எதிர்கேள்வி கேட்டால் தேவையில்லாத பிரச்சனை என்று அவர் அதை ஒவ்வொருமுறையும் சகித்துகொள்வாராம். அவரின் வீட்டு மற்றும் அலுவலக தொலைபேசிகள் ஒட்டு கேட்கபடுகிறதாம். அவரின் வங்கி கணக்கும் கண்காணிக்க படுதாம். இத்தனைக்கும் அவர், மதத்தின் மீது அவ்வளவு பற்றான நபரும் கூட கிடையாது. இவருக்கே இந்த நிலைஎன்றால், மதத்தின் மீது பற்றுள்ள அப்பாவி முஸ்லிம் மக்களின் கதி என்ன என்பதை யோசித்துபாருங்கள்.
எனவே இத்தடைக்கு எதிரா, முஸ்லிம்கள் மட்டுமல்லாமல், அனைத்து மதத்தவரும், மதமே இல்லைன்னு சொல்றவங்களும் குரல் கொடுக்கணும்! ஏனென்றால் இது ஒரு மதத்தை தழுவிய மக்களுக்கு எதிரான அடக்குமுறை. உலகில் அடக்குமுறை எந்தவடிவத்தில் இருந்தாலும் அதை எதிர்த்து குரல் எழுப்பபடவேண்டும்.
நமது நிருபர்

உமர் முக்தார்

1 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் பாய் உங்களுடைய வெப் மாஸ்டர் தொலை பேசியை தர முடியுமா எனது இணையதளம் பற்றிய சில சந்தேகத்ததை கேட்கனும் mrra1000@gmail.com

    ReplyDelete

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)