முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டை பேரூராட்சி தலைவர் பதவிக்கு அ.அப்துல் சலீம் போட்டி:வி.சி தகவல்!!!




முத்துப்பேட்டை, அக்டோபர் 06 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நடைபெற உள்ள உள்ளாட்சி மன்ற தலைவர் பதவிக்கு விடுதலை சிறுத்தை கட்சி சார்பாக அ. அப்துல் சலீம் அவர்கள் போட்டியிடப் போவதாக விடுதலை சிறுத்தை கட்சி தெருவித்துள்ளது. இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிருபர் கேட்டக் கேள்விக்கு பின்னர் பதிலளித்த அவர், முத்துப்பேட்டை பேரூராட்சி உட்பட அணைத்து வார்டுகளிலும் குடியிருக்கும் குடிமனைப்பட்டா இல்லாதவர்களுக்கு குடிமனைப் பட்ட வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப் படும் என்றும், முத்துப்பேட்டையில் மின்தடை இடையூரை தடுக்க (110 கிலோ வாட் ) 1/10 பவர் அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், முத்துப்பேட்டை அனைத்து வார்டுகளிலும் இலவச கழிவறைகள் கட்டி பேரூராட்சி பராமரிப்பில் செயல்படுத்தப்படும் என்றும் அவர் தெருவித்தார். மேலும் குடிதண்ணீர் வசதி, தெருவிளக்கு வசதி அனைத்து வார்டுகளிலும் உள்ள தெருக்களுக்கு குறைகள் இல்லாதபடி தினந்தோறும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், பேரூராட்சி உட்பட்ட அனைத்து குளம், குட்டைகளையும் ஆய்வு செய்து பொது மக்கள் பயன்பெரும் வகையில் நடைமுறை படுத்தப்படும் என்றும், முத்துப்பேட்டை அரசு மருத்துவமனையை 24 மணி நேரமும் மருத்துவர்களைக் கொண்டு இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், மக்கள் குடியிருக்கும் தெருக்களில் (சாலைகளிலும்) மழைநீர் தேங்கமல் வடிக்கால் அமைத்து தரப்படும் என்றும்,முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து பொது வழிப்பாட்டு தளங்களுக்கும் சோடியம் லைட் வசதி செய்து தரப்படும், அரசு வழங்கும் நிவாரணங்கள் மற்றும் சலுகைகள் அனைத்தும் உரியவரிடம் முழுமையாக வழங்கப்படும் என்றும் அவர் தெருவித்தார். முத்துப்பேட்டை நகரத்தை தாலுக்காவாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஆதரவற்ற முதியோர்களுக்கு இலவச சிகிச்சை மற்றும் முதியோர் இல்லம் பராமரிப்பு செய்து தரப்படும் என்றும், பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அனைத்து தரப்பு மக்களும் பயன் பெற சமுதாய கூடங்கள் அமைத்து தர ஆவன செய்யப்படும் என்றும் அப்போது அவர் தெருவித்தார்.
Source from muthupettai express
தொகுப்பு
ரிப்போர்ட்டர் இல்யாஸ். ASNS .அப்துல் பரி.EK . முனவ்வர் கான். அபு மர்வா (துபாய்)

0 comments:

Post a Comment

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)