முத்துப்பேட்டை, அக்டோபர் 03 : சோசியல் டெமாக்ரடிக் கட்சியின் தேர்தல் பணிக்குழுக் கூட்டம் 01.10.2011 ஆம் தேதியன்று இக்கட்சியின் மாவட்ட தலைவர். தப்ரே ஆழம் பாதுஷா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.அதில் மாவட்ட நிர்வாகிகளும், நகர நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பல முக்கிய பிரச்சனைகள் பற்றி விவாதிக்கப் பட்டு, பேரூராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் சித்திக் மச்சன் என்கிற அ.அபூபகர் சித்திக் அவர்கள் சார்பாக தேர்தல் வாக்குறுதியாக பின் வருபவன் வற்றை செய்து கொடுப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தேர்தல் வாக்குறுதிகள்:
1 ) முத்துப்பேட்டை பேரூராட்சியில் சேரக் கூடிய மக்களின் வரிப்பனமான பொது நிதிலிருந்து இறைவன் மீது ஆணையாக ஒரு ருபாய் கூட ஊழல் செய் மாட்டோம்.
2 ) முத்துப்பேட்டை மக்களின் கனவான, முத்துப்பேட்டையை தாலுக்கவாக மாற்றும் திட்டத்தை விரைந்து செயல்படுத்த அரசை அணுகி எல்லாவிதமான முயர்த்சிகளும் மேற்கொள்ளப் படும்.
3 ) முத்துப்பேட்டை பேரூராட்சி பகுதியில் பணிகள் முடிக்கப் படாமல் உள்ள சிமென்ட் சாலைகளை உடனடியாக விரைந்து பணிகள் நடக்க உரிய நடவடிக்கை எடுப்போம்.
4 ) முத்துப்பேட்டை பேரூராட்சி பகுதியில் உடைந்து பழுதான கழிவு நீர் வடிக்கால்களை முன்னுரிமை அடிப்படையில் சீர் செய்து பொது சுகதரத்தை பாதுகாப்போம்.
5 ) வடிக்கால் வசதியில்லாத அனைத்து வார்டுகளிலும் உடனடியாக வடிகால் வசதி அமைய நடவடிக்கை எடுப்பது.
6 ) ஆங்காங்கே சேரும் குப்பை, கூளங்களை உடனுக்குடன் அப்புறப்படுத்த அதிக கவனம் செலுத்துவது.
7 ) பன்றி காய்ச்சல் வராமல் தடுக்க, ஊர் எல்லைக்குள் பன்றிகள் இல்லை என்ற நிலைமையை ஏற்படுத்துவது.
8 ) பேட்டை, செம்படவான்கடு, மருதங்காவளி, தேற்குகாடு மக்களின் குடிநீர் பிரச்சனையை கவனத்தில் கொண்டு புதிய குடிநீர் மேல்நிலைத் தொட்டி அமைப்பது.
9 ) செயல் இலக்கச் செய்யப்பட பரக்கலக்கோட்டை நீரேற்று நிலையத்தை, அவசிய நேரங்களில் பயன்படுத்தும் வகையில் புதுப்பித்து செயல்பட்டு நிலைமைக்கு கொண்டு வந்து தினமும் இருமுறை தண்ணீர் கிடைக்க வழிவகை செய்வது.
10 ) சாக்கடை கலந்த குடிநீர் விநியோகம் நடைபெறாமல், சுகாதாரமான குடிநீர் விநியோகம் கிடைக்க ஆவண செய்வது.
11 ) இந்து. முஸ்லிம், கிருஸ்தவ, தலித் மக்களிடயே ஒற்றுமையை ஏற்படுத்தி, முத்துப்பேட்டையை அமைதி பூங்காவாக மாற்றுவோம்.
12 ) பிறப்பு, இறப்பு பதிவேடுகள் பராமரிப்பு முறையை (சப்ரிஜ்ஸ்டர் ஆபிசில் ஒப்படைக்கப் பட்ட பதிவேடுகளை திரும்பப் பெற்று) மக்களை அலைகளிக்காமல் மக்களுக்கான சேவையாக செய்து வருவோம்.
13 ) எந்த காரணம் கொண்டும் (வரிவித்திபு முறையிலும் மக்களுக்கான சேவைகள் கிடைப்பதிலும்) நிர்வாகத்தால் மக்களை அவத்திக்குள்ளக்கும் எவ்வித சிலையும், செய்ய அனுமதிக்க மாட்டோம்.
14 ) பேரூராட்சிக்கு வரவேண்டிய பல லட்ச ரூபாய் வாரக் கடனை வசூல் செய்து, மக்கள் மக்கள் நலத்திட்டங்களை செய்வோம்.
15 ) சொத்து வரி விதிப்பதில் ABC மண்டல பிரிப்பு முறையை அரசாணைபடி மாற்றியமைப்போம், இனி வருங்காலங்களில் எக்காரணம் கொண்டும் சொத்து வரி விதிப்பு உயர்வு செய்ய அனுமதிக்க மாட்டோம்.
16 ) அரசு ஆண்கள், மேன்கள், மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர், மாணவியர், ஆசிரியர் நலன் கருதி குடிநீர், கழிவறை வசதிகளை உடனடியாக செய்து தர முழு முயற்ச்சி எடுப்போம்.
17 ) அரசு ஆரம்ப சுகாதார நிலையமாக உள்ள மருத்துவமனையை 24 மணி நேரமும் செயல்படும், அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தி செயல் பட முழு கவனம் செலுத்துவோம்.
18 ) அரசு அறிவிக்கும் அனைத்து வித நலத்திட்டங்களும் (இலவசங்கள் உள்பட) மக்களுக்கு டிரைவில் விடுபடாமல் கிடைக்க முழு கவனம் செலுத்துவோம்.
19 ) பேரூராட்சிக்கு சொந்தமான அனைத்து குளங்களையும் மக்கள் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் மாற்றி தருவோம்.
இவன்
சோசியல் டெமாக்ரடிக் கட்சி (SDPI)
தேர்தல் பணிக்குழு, முத்துப்பேட்டை
தொகுப்பு
ரிப்போர்ட்டர் இல்யாஸ், அச்ன்ஸ்.அப்துல் பாரி, ஏக.முனவ்வர் கான், அபு மர்வா (துபாய்)
முத்துப்பேட்டை பேரூராட்சியின் தேர்தல் வாக்குறுதி! மாவட்ட SDPI கட்சி வெளியீடு:
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment