முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டை மழை நீர் வெள்ளத்தால் பாதிப்படையும் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள்!






முத்துப்பேட்டை, நவம்பர் 29: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. எனினும் இம்மழையின் காரணத்தால் தண்ணீர் ஆங்காங்கே வெள்ளம் போல தேங்கி கிடக்கின்றன. அவற்றில் முத்துப்பேட்டை பட்டுக்கோட்டை ரோட்டில் (பிர்லியான்ட் பள்ளிகூடம் எதிரில்) உள்ள ரஹ்மத் பள்ளிவாயில், புதிய பேருந்து நிலையத்தில் உள்ள சாலைகள், ஆகிய இடங்களில் அதிகமான வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் அனைவரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். மேலும் ஆசாத் நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும் வெள்ளம் சூழ்ந்த வண்ணம் உள்ளன. எனவே இதனால் மாணவர்கள் பள்ளிக்கு சென்றால் நீரில் நீந்தித்தான் போகவேண்டும் என்ற சூழ்நிலை உருவாகி உள்ளது. மேலும் அவ்வாறு செல்லக்கூடிய பள்ளி மாணவர்கள் அணிந்த ஆடைகள் மற்றும் புத்தக பைகள் இவையாவும் நுழைந்து விடுகின்றது. இதனால் அவர்களின் படிப்பில் சற்று கவனம் குறைந்தும், உடல்நிலை சரி இல்லாமல் போவதும் காரணமாக அமைந்துள்ளது. எனவே இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு முத்துப்பேட்டை பேரூராட்சியின் தலைவர் இவற்றை உடனே அகற்றி பொது மக்கள் மற்றும் மாணவர்களை வெள்ள நீர்களிலிருந்து பாதுகாக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
www.muthupettaiexpress.blogspot.com, www.muthupettaiexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி, EK .முனவ்வர் கான், அபு மர்வா

1 comments:

  1. அது மட்டுமல்ல தேங்கி கிடக்கும் மழை நீரால் கொசு உற்பத்தியாகி காலரா போன்ற நோய்களும் பரவும் அபாயம் உள்ளது .எனவே உள்ளாட்சி /பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு தேங்கி கிடக்கும் மழை நீரை அப்புறபடுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
    சுல்தாப்பா(எ) சுல்தான் அப்துல் காதர்,
    முத்துபேட்டை (கேம்ப் :ஷார்ஜா)

    ReplyDelete

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)