முத்துப்பேட்டை, மார்ச் 18 : முத்துப்பேட்டையில் கடந்த பல மாதங்களாக கேஸ் சிலிண்டர் விநியோகம் மிக தட்டுபாடாகவே இருந்து வந்தது. இது குறித்து முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து மக்களும் சம்மந்தப்பட்ட துறைக்கு பல முறை புகார் தெரிவித்தனர். இதனை கண்டு கொள்ளாத HP சிலிண்டர் நிர்வாகம் சுதந்திரமாக உலா வந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த பொது மக்களும் மற்றும் சமுதாய இயக்கங்களை சார்ந்தவர்களும் போராடினார்கள். மேலும் சம்மந்தப்பட்ட துறைகளுக்கு கடிதமும் எழுதி உள்ளனர். இதனை அறிந்த தஞ்சாவூர் ஆயில் துணை மேலாளர் திரு.ராஜேஷ் மற்றும் வட்ட வழங்கல் அலுவலர் (TSO ) ஆகியோர் கொண்ட குழு அமைத்து முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து ஹோட்டல் மற்றும் சிறிய கடைகளிலும் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அதிர்ச்சியான தகவல்கள் வெளிவந்தன. சோதனையிட்ட எல்லா கடைகளிலும் அனுமதி இல்லாத காலி சிலிண்டர்கள் சுமார் 179 மற்றும் 5 முழு சிலிண்டரையும் கைப்பற்றினர். இதனை அறிந்த பொது மக்கள் சம்பவ இடத்திற்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே பொது மக்கள் மற்றும் SDPI மாவட்ட தலைவர் ஜனாப். தப்ரே ஆலம் பாதுஷா மற்றும் பொருளாளர் நெய்னா முஹம்மது ஆகியோர் ஒன்று சேர்ந்து ஊரில் நடக்கும் அவலங்களை அதிகாரிகளிடம் எடுத்துரைத்தனர். அப்போது அங்கு வந்த அதிகாரிகள் அனைவரிடமும் உள்ள குறைகளை பெற்று இதற்க்கு நல்ல முடிவு எடுக்கப்படும் என்று எழுத்து மூலமாக எழுதியும் கொடுத்துள்ளனர். இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தள நிருபர் கேட்ட கேள்விக்கு பின்னர் பதிலளித்த அதிகாரிகள், இன்று நடைபெற்ற சோதனை யில் மொத்தம் 184 போலி சிலிண்டர்கள் இடைத்தரகர் மூலம் கைப்பற்றப்பட்டுள்ளது என்றும், இனிமேல் முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் வீடு வீடாக சிலிண்டர் விநியோகம் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் நமதூர் கொய்யா மஹால் எதிரே உள்ள மரியா சிலிண்டர் நிறுவனம் அனுமதி இல்லாமல் நடத்தியது சோதனையின் போது தெரியவந்தது. அவற்றை உடனே அகற்ற அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
source from: www.mttexpress.com, www.muthupettaiexpress.com, www.muthupettaixpress.com
நமது நிருபர்
K .எர்சாத் அஹமது, OM . சுபைத் கான்.
முத்துப்பேட்டையில் போலி சிலிண்டர் விநியோகம்,வட்ட வழங்கல் அலுவலர் திடீர் சோதனை..
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment