சிட்னி,ஏப்ரல் 22:நச்சுத்தன்மை கலந்த உணவை சாப்பிட்டதால் ஏழு வயது சிறுமியின் மூளையில் ஏற்பட்ட பாதிப்பைத் தொடர்ந்து ஃபாஸ்ட் ஃபுட் உலகில் பெரும் செல்வாக்குடன் திகழும் கே.எஃப்.சி(கெண்டகி ஃப்ரைட்சிக்கன்) நிறுவனத்திற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் ஆஸ்திரேலிய குடும்பத்தினருக்கு ஆதரவான தீர்ப்பை நீதிமன்றம் வெளியிட்டது.
2005 அக்டோபர் மாதம் இவ்வழக்கு தொடர்பான சம்பவம் நிகழ்ந்தது. கே.எஃப்.சி நிறுவனத்தின் நச்சுத்தன்மை கலந்த ஃபாஸ்ட் ஃபுட்டை சாப்பிட்டதால் மோனிக்கா ஸமான் என்ற ஏழு வயது சிறுமிக்கு மூளை ஸ்தம்பித்துப் போனதாக அவரது பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கே.எஃப்.சி உணவை சாப்பிட்டதால் தங்களது மகளுக்கு இத்தகையதொரு நிலைமை ஏற்பட்டதாக கூறி 10 லட்சம் டாலர் நஷ்ட ஈடு கோரி மோனிக்காவின் குடும்பத்தினர் நியூ சவுத் வேல்ஸ் உச்சநீதிமன்றத்தை அணுகினர்.
கே.எஃப்.சியின் ட்விஸ் டர்ராப் என்ற உணவை சாப்பிட்டதால் சிறுமியின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதைப் போலவே இந்த உணவை சாப்பிட்ட பல குடும்ப அங்கத்தினர்களும் உடல்நிலை பாதிக்கப்பட்டது.
சிறுமி பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் கோமா நிலையில் உள்ளார். இதனைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர் நீதிமன்றத்தை அணுகினர். நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாக கே.எஃப்.சி நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உணவில் நச்சுத்தன்மை: கே.எஃப்.சிக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பு!
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment