முத்துப்பேட்டை, ஆகஸ்ட் 24: முத்துப்பேட்டை அடுத்து எடையூர் அரசு மருத்துவமனை அருகில் உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் இளைஞர் மற்றும் மாணவர் பெருமன்றம் சார்பில் திருத்துறைப்பூண்டி அரசு கலை கல்லூரிக்கு புதிய கட்டிடம் கட்டித்தரக்கொரியும் கொற்கை பள்ளியில் மாணவர் விடுதி கட்டித்தர்க்கொரியும் சாலை மறியல் போராட்டம் இளைஞர் பெருமன்ற முத்துப்பேட்டை ஒன்றிய செயலாளர் உமேஷ்மாபு தலைமையில் நடைபெற்றது. மேலும் இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் முறிகையன் மற்றும் எடையூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்தும் எடையூர் இன்ஸ்பெக்டர் சாமிநாதன் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதால் போராட்டம் விளைக்கிக் கொள்ளபபட்டது. இதனால் திருத்துறைப்பூண்டி, நாகை, முத்துப்பேட்டை, பட்டுகோட்டை வழித்தடத்தில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து தடைப்பட்டது.
நமது நிருபர்: முஹைதீன்
0 comments:
Post a Comment