சென்னை, ஆகஸ்ட் 05: சென்னை புதுக்கல்லூரியில் பயின்றவர்கள் தான் இந்த இருவரும் கல்லூரியில் பயிலும் காலத்திலேயே சமுதாய உணர்வோடு முஸ்லிம் மாணவர் பேரவையில் இருந்து சமுதாய இளைஞர்களை ஒன்றிணைத்து பல நல்ல காரியங்களை ஒன்றிணைந்து இந்த இருவரும் செய்து வந்தனர் .முஸ்லிம் லீக்கின் குடும்பத்தில் பிறந்தவரான அபூபக்கர் அவர்கள் முஸ்லிம் லீக் வளர்ச்சிக்கு பல பணிகளை செய்து 1999ஆம் ஆண்டு நடந்த முஸ்லிம் லீக் பொன்விழா மாநாட்டில் பல இளைஞர்களை ஒன்றிணைத்த பெருமை அபூபக்கர் அண்ணன் அவர்களையே சாரும் .
துடிப்போடு என்றும் உலா வரும் சகோதரர் தமீமுன் அன்சாரி அவர்கள் 1995 உருவாக்கப்பட்ட தமுமுகவில் இனைந்து பல போராட்டங்களில் பங்கேற்று சமுதாய முன்னேற்றத்திற்கு தன்னை உட்படுத்தியுள்ளார் .அபூபக்கர் அவர்கள் எதையும் பொறுமையோடு அறிவோடு கையாளும் பக்குவம் உடையவர் காரணம் இவர் சிராஜுல் மில்லத் அப்துஸ் சமது அவர்களின் அரசியல் வழியில் வந்தவர் .சகோதரர் தமீமுன் அன்சாரி ஒரு சிறந்த பேச்சாளர் இன்று இளைஞர்கள் அவரின் பேச்சில் சமுதாய உணர்வு இருக்கிறது நாமும் சமுதாய பணியாற்றணும் என்ற சிந்தனை இளைஞர்களிடத்தில் வந்துள்ளது .
இருவரும் சமுதாய முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்ல வேண்டும் என்று விரும்பியதால் அல்லாஹ் இவர்களுக்கு உயர்ந்த பொறுப்புகளை வழங்கி சமுதாய பனி ஆற்ற வைத்துள்ளான் ஆகவே தான் இன்று முஸ்லிம் லீக் பொது செயலாளராகவும் மத்திய அரசின் மதரசா மேம்பாட்டுக்குழு உறுப்பினராகவும் சிறப்பாக செயல்படும் அண்ணன் அபூபக்கர் அவர்கள் இன்றும் முஸ்லிம் மாணவர் பேரவையில் எங்களை போன்ற நிர்வாகிகள் சமூகப்பணிகளை செய்ய சிறப்பாக வழி காட்டிவருகிறார் .
பேச்சால் உணர்வால் இன்று மமக வின் பொது செயலாளராக சகோதரர் தமீமுன் அன்சாரி அவர்கள் சிறப்பாக செயல்படுகிறார் சிராஜுல் மில்லத் அவர்களின் மீது இன்றும் தனி ஒரு மரியாதையை சகோதரர் தமீமுன் அன்சாரி அவர்கள் வைத்திருக்கிறார் காரணம் முஸ்லிம் லீக் தலைவர்களின் சமுதாய உணர்வும் தியாகமும் தான் என்றால் அது மிகையாகாது .
இந்த இரு கல்லூரி நண்பர்களும் இயக்கங்களில் வேறுபட்டிருக்கலாம் ஆனால் சமுதாயத்திற்கு சேவை செய்ய வந்தவர்கள் அல்லாஹ் இவர்களின் சேவைகளை பொருந்தி கொள்வானாக …..ஆமீன் !
குறிப்பு :என் மனதிற்கு தோன்றியதை எழுதினேன் இவர்களைப்போல் இயக்கங்களில் வேறுபட்டாலும் சமுக பணிகளில் நண்பர்களாய் ஒன்றிணைவோம் இன்ஷா அல்லாஹ்
என்றும் உங்கள் சகோதரன் :
தகவல் ;கீழக்கரை சமீர்
புதுக்கல்லூரி மாணவர்
0 comments:
Post a Comment