முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

விநாயகர் சிலை உடைப்பு: மதுக்கூரில் பதற்றம்


மதுக்கூர், செப்டம்பர் 15: மதுக்கூர் சிவக்கொல்லை பகுதியில் மதுக்கூர் ஒன்றிய இந்து முன்னணி சார்பில் 9 1/2 உயர விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) இந்து முன்னணி இயக்கம் சார்பில் விநாயகர் ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது.
இந்தநிலையில் நள்ளிரவு சில மர்ம நபர்களால் விநாயகர் சிலை உடைக்கப்பட்டது. தகவல் அறிந்த இந்து முன்னணி அமைப்பினர் ஒன்றிய செயலாளர் போஸ் தலைமையில் போலீசாரை கண்டித்தும், விநாயகர் சிலையை உடைத்த நபர்களை கைது செய்யக்கோரியும் நள்ளிரவு முதல் உண்ணாவிரதம் இருந்தனர்.
இதுகுறித்து பட்டுக்கோட்டை உதவி கலெக்டர் முருகேசன், டி.எஸ்.பி. வெங்கடேசன், பட்டுக்கோட்டை தாசில்தார் முத்துக்குமரன் ஆகியோர் நேரில் சென்று விசாரித்து வருகின்றனர். உண்ணாவிரதம் இருந்தவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையொட்டி உண்ணாவிரதம் கைவிடப்பட்டது.
குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கும்வரை விநாயகர் ஊர்வலத்தை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

1 comments:

  1. Tamilaga arasu ithu pondra kalavaraththirkku thunai pogum entha Martha oorvalamaaga irunthaalum avtrai mulumaiyaaga thadai seyya vedum

    ReplyDelete

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)