முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

தி மெசேஜும் முஸ்லிம்களுக்கான மெசேஜும்.




உலகம் செப்டம்பர் 16: தி.மெசேசெஜ் THE Message ஆங்கில திரைப்படம் தமிழ் பின்னணி குரலுடன் தயாரிக்கப்பட்டு,முஸ்லிம் பிரமுகர்கள்,சமூக ஆர்வலர்கள்,பத்திரிகையாளர்களுக்கு கடந்த வாரம் சென்னை வடபழனியிலுள்ள ஆர்.கே.வி திரையரங்கில் திரையிட்டு காட்டப்பட்டது.
இந்த படம் குறித்து,இன்றைய (16/9/20130)தேதியிட்ட தி ஹிந்து நாளிதழ் சிறப்பாக செய்தியை வெளியிட்டுள்ளது.

பொதுவாக திரைப்படங்கள் குறித்து முஸ்லிம்கள் மத்தியில் சரியான புரிதல் இல்லை.திரைப்படம் ஹராம்(விலக்கப்பட்டது) என்ற சிந்தனை முஸ்லிம்கள் மத்தியில் திணிக்கப்பட்டிருக்கிறது.(ஆனாலும் இப்படி புரிதல் இல்லாமல் ஹராம் தீர்ப்பு கொடுக்கும் பலர் திரைப்படங்களை பார்கிறார்கள் என்பது தனி விஷயம்) ஒரு திரைப்படத்தில் வரும் காட்சிகள் இஸ்லாமிய வரையறைகளை மீறும் வகையில் உள்ளதா என்பது தான் கவனிக்கப் பட வேண்டிய விஷயம்.
சினிமா என்பது மிகப்பெரிய வெகுஜன ஊடகம்.அதன் மூலம் இஸ்லாமிய செய்திகளையும்,சமூக சீர்திருத்தக் கருத்துகளையும் மனித குலத்திற்கு கொண்டு செல்ல முடியும்.

தி மெசேஜ் திரைப்படம் குறித்து தி ஹிந்துவிற்கு நாளிதழிடம் பேரா.ஜவாஹிருல்லாஹ், ''செய்திகளை மக்களிடம் முழுமையாக கொண்டு செல்வதில் காட்சி ஊடகங்களில் மிகப்பெரிய வெற்றிடம் உள்ளது.இஸ்லாத்தின் செய்திகளையும் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் போதனைகளையும் காட்சி ஊடகங்கள் மூலம் சொல்வதில் எந்த தவறும் இல்லை.ஒரு திரைப்படம் ஹராமா இல்லையா என்பதை அந்த திரைப்படத்தின் உள்ளடக்கத்தை அறிந்த பின்னர் தான் தீர்மானிக்க முடியும்.அதனால்,திரைப்படங்கள் ஹராம் என கண்மூடித்தனமாக வகைப்படுத்த முடியாது.''என்று சரியான கருத்தை தெரிவித்துள்ளார்.



இந்த படத்தை தமிழாக்கம் செய்த முஹம்மது தம்பி,''இஸ்லாத்தை பற்றிய மிகப்பெரிய அளவில் தவறான புரிதல் முஸ்லிம் அல்லாத மக்கள் மத்தியில் நிலவுகிறது.முஸ்லிம்களில் பலரும் கூட நபிகள் நாயகத்தைப் பற்றியோ,அவர்களின் போதனையைப்பற்றியோ தெளிவான பார்வை இல்லை.இந்த படம் பலரது மனநிலையில் படிந்து போயுள்ள தவறான கருத்துக்களை அகற்றும்'' என ஹிந்து நாளிதழிடம் தெரிவித்துள்ளார். இந்த திரைப்படங்கள் குறித்த முஸ்லிம்களின் பார்வையில் தெளிவு பிறக்க வேண்டும்.



0 comments:

Post a Comment

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)