முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

காவல்துறை குழப்பத்தை தீர்க்க வேண்டும்!

  • சென்னை, அக்டோபர் 27: இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலச் செயலாளர் முஹம்மது ஷிப்லி வெளியிடும் அறிக்கை:
  • தமிழக காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த போலீஸ் பக்ருத்தீன், பண்ணா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகியோரை தனிப்படை போலீசார் ஒருவழியாக ஆந்திர மாநிலம் புத்தூரில் கைது செய்தனர். இந்த கைது நடவடிக்கைகள் காவல்துறைக்கு பெருமையைத் தேடிந்தந்த போதிலும், கைதுக்குப் பின்னரான காவல்துறையின் நடவடிக்கைகள் குழப்பத்தையே ஏற்படுத்தியுள்ளன.
    இந்த குழப்பத்திற்கு காரணம் போலீஸார் சொன்னதாக மீடியாக்கள் வெளியிட்ட செய்திகள்தான்.
    வேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் போலீஸ் பக்ருத்தீனை ஆஜர்படுத்திய போலீசார் இந்துத்துவா அமைப்புகளின் பிரமுகர்களான பரமக்குடி முருகன், டாக்டர் அரவிந்த் ரெட்டி, மதுரை சுரேஷ், சேலம் ஆடிட்டர் ரமேஷ், வேலூர் வெள்ளையப்பன் ஆகியோரை போலீஸ் பக்ருத்தீன் கொலை செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறார் என தெரிவித்திருந்தனர். இதை மீடியாக்களுக்கு காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.
    இந்நிலையில், முன்னதாக கடந்த ஜூலை 26ம் தேதி அறிக்கை வெளியிட்ட காவல்துறை தலைவர் ராமானுஜம், பரமக்குடி முருகன், டாக்டர் அரவிந்த் ரெட்டி ஆகியோரை கொலை செய்த குற்றவாளிகள் பிடிபட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருப்ப தாகவும், இந்த இருவரின் கொலைகளுக்கான பின்னணி காரணங்கள் நிலத் தகராறு, கொடுக்கல் - வாங்கல் பிரச்சினைதான் என்றும் அந்த அறிக்கையில் தெளிவுபட கூறியிருந்தார். இந்த குற்றவாளிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது என்றும் காவல்துறைதலைவர் சுட்டிக் காட்டியிருந்தார்.
    இச்சூழலில், மேற்கண்ட இருவரது கொலைகளையும் போலீஸ் பக்ருத்தீன்தான் செய்தார் என இப்போது போலீசார் சொல்வது காவல்துறை தலைவரின் அறிக்கைக்கு முரணாகவும், மக்கள் மத்தியில் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
    இதையொட்டி, திமுக தலைவர் கருணாநிதியும், காவல்துறையின் செயல்பாடுகள் சந்தேகத்திற்குரியதாகவும், குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் பரமக்குடி முருகன், டாக்டர் அரவிந்த் ரெட்டி ஆகியோரை கொலை செய்த உண்மையான குற்றவாளிகள் யார்? போலீஸ் பக்ருத்தீன் குழுவினரா? அல்லது ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர்களா?
    இதில் ஒரு தரப்புதான் குற்றவாளிகள் என்றால் இன்னொரு தரப்பினர் மீது போலீஸ் ஊரை ஏமாற்ற பொய் வழக்கு போட்டுள்ளதா என்றெல்லாம் திமுக தலைவர் கருணாநிதி கேள்வியெழுப்பியுள்ளார்.
    கருணாநிதியின் கேள்வி நியாயமான ஒன்றுதான். இதே கோணத்தில்தான் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தும் துவக்கம் முதலே இந்த கேள்விகளை எழுப்பி வருகிறது.
    எனவே, இந்த வழக்கில் யார் உண்மையான குற்றவாளிகள் என்பதை நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டிய பொறுப்பு காவல்துறைக்கு இருப்பதால், உண்மையான குற்றவாளியை விரைவில் அடையாளம் காட்டி இந்த குழப்பத்திற்கு காவல்துறை முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
    இவ்வாறு மாநிலச் செயலாளர் முஹம்மது ஷிப்லி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
    இப்படிக்கு
     
    அபு ஃபைசல்
     
    மாநிலச் செயலாளர் & செய்தி தொடர்பாள

0 comments:

Post a Comment

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)