முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

கூத்தாநல்லூரும் -தம்ரூட்டும் !!ஓர் ருசிகர பார்வை !!!

கூத்தாநல்லூர் வந்து செல்பவர்கள் பைகளில் அவசியம் தம்ரூட் இருக்குமாம்.!!

கூத்தாநல்லூர், டிசம்பர் 13: தனக்கென தனிப் பாரம்பரியம் கொண்ட ஊர் கூத்தாநல்லூர். நகரம் என்று அழைக்கப்பட்டாலும் சற்றே பெரிய கிராமமாகக் காட்சியளிக்கும் கூத்தாநல்லூர் ஒருவித்தியாசமான ஊரும்கூட. சுற்றுவட்டாரக்காரர்களால் ‘குட்டி வளைகுடா’ என்றுஆழைக்கப்படும் கூத்தாநல்லூரின் பெரும்பாலான ஆண்கள் வளைகுடா நாடுகளில்இருக்கிறார்கள்.
தம்முடைய வாழ்நாளின் பெரும்பாலான நாட்களை வளைகுடா நாடுகளிலேயே கழித்துவிடுவதாலோ என்னவோ அந்நாடுகளின் கலாச்சாரம் கூத்தாநல்லூர்க்காரர்களின் ஒவ்வொரு விஷயத்திலும்ஏதேனும் ஒரு வகையில் பிரதிபலிக்கிறது. கூத்தாநல்லூருக்குச் செல்பவர்களுக்கு மூன்று அனுபவங்கள் முக்கியமானவை.
நீண்ட வீதிகளின் இருமருங்கிலும் மாளிகைகளாய்க் காட்சியளிக்கும்வீடுகள்; மையத்தில் பிரியாணியைக் குவித்து சுற்றிலும் நால்வர் அமர்ந்து சாப்பிடும்நல்விருந்து, ஒருபோதும் திகட்டாத வீட்டுப் பணியாரம் – தம்ரூட்.
கூத்தாநல்லூரில் அந்தக் காலத்திருந்தே வீட்டுப் பணியாரம் மிகவும்பிரசித்திபெற்ற ஒரு பலகாரம். பெயரில் என்னவோ பணியாரம் என்றிருந்தாலும் நாம்வழக்கமாகக் குறிப்பிடும் பணியார வகையைச் சேர்ந்தது அல்ல இது; விசேஷமானது.பண்டிகை நாட்கள், பிறந்த நாள், நிச்சயதார்த்தம், திருமணம், மணமக்கள் அழைப்பு,வெளிநாட்டுக்கு வழியனுப்பும் நிகழ்ச்சி… இப்படி விசேஷமான தருணங்களில் மட்டுமேவீட்டுப் பணியாரம் செய்வார்கள். கூத்தாநல்லூர்க்காரர்கள் யாரேனும் திருமணஅழைப்பின்போது அழைப்பிதழுடன் வீட்டுப் பணியாரமும் வைத்து உங்களைஅழைத்தால் அவர் உங்களை மிக முக்கியமானவராகக் கருதுகிறார் என்று பொருள்.அதாவது வெற்றிலை, பாக்கு வைத்து அழைப்பதுபோல் இது ஒருவகை கௌரவம்!
ரவை, முட்டை, பால்திரட்டு, ஜீனி, நெய், முந்திரி சேர்த்துச் செய்யப்படும்இந்த வீட்டுப் பணியாரம் எல்லோருக்கும் கைகூடாது. அதனாலேயே, அந்தக் காலத்தில்வீட்டுப் பணியார ஆத்தாக்கள் நிறைய பேர் இப்பகுதியில் இருந்தார்கள்.
யாருக்குத்தேவையோ அவர்களுடைய வீட்டுக்கே வந்து இவர்கள் வீட்டுப் பணியாரம் செய்து தருவார்கள். விசேஷ நாட்களில் இவர்களுக்கு ஏகக் கிராக்கியாக இருக்கும்.
ஆனால்,கூத்தாநல்லூரிலேயே இப்போது வீட்டுப் பணியாரம் என்ற பெயரையும் அதன்கதையையும் அடுத்து வரும் தலைமுறைக்குத் தெரியாமல் போகும்படி செய்துவிட்டார்ஒருவர். அவர்… எம்.ஐ. முஹம்மது தமீம்!
அவர் தொடங்கிய ‘மௌலானா பேக்கரி’யில் வீட்டுப் பணியாரம் தம்ரூட்டாகப்புதிய அவதாரமெடுத்த இந்த 19 ஆண்டுகளில் வீட்டுப் பணியார ஆத்தாக்கள் காணாமலேபோய்விட்டார்கள். மேலே சாக்லேட் நிறத்திலும் உள்ளே மஞ்சள் நிறத்திலும் கேக்போல இருக்கும் தம்ரூட் திகட்டாத ஒரு பலகாரம்.
நினைத்து நினைத்துச் சாப்பிட அழைக்கும் தம்ரூட்டின் கவர்ச்சிக்குக் காரணம் அதன் சுவை மட்டுமல்ல; அதில் எப்போதும் உறை கொண்டிருக்கும் உருகும் நெய்யின் மணமும்கூட. இந்த மணம்கூத்தாநல்லூர்க்காரர்களை மட்டும் கட்டிப்போடவில்லை. கூத்தாநல்லூர் செல்லும்எவரையும் கட்டிப்போட்டுவிடுகிறது.
‘மௌலானா பேக்கரி’ உரிமையாளர் தமீம் சொன்னார்: “மொஹல் உணவுவகையைச் சேர்ந்த வீட்டுப் பணியாரம், இந்த மக்களின் கொண்டாட்டங்களிலிருந்துபிரித்துப் பார்க்க முடியாத ஒன்று. நாங்கள் இந்தக் கடையைத் தொடங்கியதும்வித்தியாசமாக ஏதேனும் செய்ய வேண்டும் என்று தோன்றியபோது வீட்டுப் பணியாரமேமுதலில் ஞாபகத்துக்கு வந்தது. அதுவரை வீடுகளில் மட்டுமே செய்யப்பட்டுவந்தவீட்டுப் பணியாரத்தைக் கடையில் செய்து விற்கத் தொடங்கினோம். அதன் ருசியைக்கூட்டியதுடன் சீக்கிரம் கெட்டுப்போகாதவாறும் தயாரித்தோம். இப்போது வளைகுடாநாடுகள் வரை எங்கள் கடை தம்ரூட் பிரபலம்” என்றார் தமீம்.
இவர்கள் கடையில் குறிப்பிட வேண்டிய இன்னொரு ஐட்டம் பால் மணம் மாறாதஅமுல் ரஸ்க். தமிழக பேக்கரிகளில் இவர்களுக்கென்று ஒரு முக்கிய இடத்தை இந்தரஸ்க் பெற்றுத் தந்திருக்கிறது. “இந்த இடத்தைவிடவும் தம்ரூட் பெற்றுத்தரும் இடம்இன்னும் பெரிதாக இருக்கும்” என்று சிரிக்கிறார் தமீம்.
கூத்தாநல்லூர் வந்து செல்பவர்கள் பைகளில் அவசியம் தம்ரூட் இருக்குமாம். ஊர் திரும்பியதும் நம் பையைத் திறந்து பார்த்தோம். நெய் வாசம் மட்டும்இருந்தது!

1 comments:

  1. கூத்தாநல்லூருக்கு 1975 ல் எண் 100 மேலத்தெருவில் சிங்கப்பூர் நூர்முகம்மதுவின் மகன் ஜெஹபர்தீன் இல்லத்தில் விருந்தினனாக வந்துள்ளேன் வாணியம்பாடி இஸ்லாமியா கல்லூரியில் B.Com வகுப்பு தோழன் ஜெஹபர்தீன் ஒரே ரூமில் வசித்தவன் கல்லூரியில் படிக்கும் பொழுது அவர் தகப்பனார் காலமாகி விட்டார் ஜெஹபர்தீன் திருமணத்திலும் கலந்து கொண்டேன் அவரின் மூத்த மகள் பிறந்த பொழுது நான் ஈரோட்டிலிருந்து நாகூர் செல்லும் வழியில் கூத்தாநல்லூருக்கு வந்து அவர் மகளை பார்த்து விட்டு சென்றேன் அவர் முகவரி தெரியாததால் தொடர்பு கொள்ள இயலவில்லை தெரிந்தவர்கள் எனக்கு தந்தால் அவரை காண விரும்புகிறேன் எனது தொடர்பு ஹாஜி முஹம்மது ஹபீபுர் ரஹ்மான் ஈரோடு usmhabeeb@gmail.com 99655 55665

    ReplyDelete

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)