முத்துப்பேட்டை, ஜனவரி 02: முத்துப்பேட்டை அருகே உள்ள தம்பிக் கோட்டை மரவாக்காடு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (31). இவர் தனது நண்பர்கள் சிங்காரவடிவேலு, மணி ஆகியோருடன் முத்துப்பேட்டையில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைக்கு மது குடிக்க வந்தனர். அப்போது முத்துப்பேட்டை கல்கோனி தெருவை சேர்ந்த பைசூல் அகமதும் மது கடைக்கு வந்தார். மது குடித்து கொண்டிருந்த போது அவர்களுக்குள் தகராறு உருவானது.
இதில் ஆத்திரம் அடைந்த பைசூர் அகமது சோடா பாட்டிலை உடைத்து ரமேஷ், சிங்கார வடிவேலு, மணி ஆகியோரை குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த ரமேஷ் திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள பைசூல் அகமதை தேடி வருகிறார்கள்.
0 comments:
Post a Comment