முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

பேரூராட்சி வாசலில் பிச்சை எடுக்கும் போராட்டம் -வார்டு புறக்கணிப்பால் விரக்தி !!

தனது வார்டை புறக்கணிப்பதாக கூறி முத்துப்பேட்டை பேரூராட்சி வாசலில் நேற்று அதிமுக கவுன்சிலர் நாசர் பிச்சை எடுத்தார்.  முத்துப்பேட்டை பேரூராட்சி கூட்டம் நேற்று அதன் தலைவர் அருணாச்சலம்(அதிமுக) தலைமையில் நடைபெற்றது. செயல் அலுவலர் சித்திவிநாயகமூர்த்தி,   துணை தலைவர் அப்துல் வஹாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டம் துவங்கியதும், சுயேட்சை கவுன்சிலர் பாவா பகுருதீன், பல்வேறு பணிகளுக்கு எம்.பி நிதி வந்துள்ளது. அது குறித்த விவரங்கள் ஏடி அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு விட்டதா என்று தலைவரிடம் கேட்டார். அதற்கு தலைவர், அனுப்பிவிட்டதாக கூறினார்.
மீண்டும் பாவா பகுருதீன் சீக்கிரம் அதற்கான வேலைகள் நடைபெறட்டும். அடுத்த முறை யார் எம்.பியாக வருவார்கள் என்று தெரியாது என்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் கவுன்சிலர் பாவா பகுருதீன் கூட்டத்தை விட்டு வெளியேறினார்.
13வது வார்டு அதிமுக கவுன்சிலர் நாசர், தனது வார்டுக்கு வளர்ச்சி திட்டம் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக கூறி, கையில் தட்டு மற்றும் வாசகம் அடங்கிய போர்டுடன் வந்திருந்தார். அவர், எனது வார்டை பேரூராட்சி தொடர்ந்து புறக்கணிக்கிறது.
20140131a_01310601101
இதனால் எனது வார்டு மக்கள் குடிநீர், சுகாதாரம், தெருவிளக்கு, சாலைவசதி இல்லாமல் தவிக்கிறார்கள். அதனால் நான் ஏந்தி வந்திருக்கும் இந்த தட்டில் எனது வார்டில் அடிப்படை பணிகளை செய்ய உங்களால் முடிந்த நிதியை தாருங்கள் என்று தலைவரைப் பாரத்து தட்டு ஏந்தி பிச்சை கேட்டார். இதனால் தலைவருக்கும், கவுன்சிலர் நாசருக்கும் கடுமையான வாக்குவாதம் நடைபெற்றது.
பிறகு கவுன்சிலர் நாசர் கூட்டத்தைவிட்டு வெளியேறி, பேரூராட்சி வாசலில் நின்று தட்டு ஏந்தி அனைவரிடமும் பிச்சைக் கேட்டார். பா.ஜ. கவுன்சிலர் மாரிமுத்து, திமுக கவுன்சிலர்கள் ஜெய்புனிஷா, செல்வி தம்புசாமி, முஸ்லீம் லீக் கவுன்சிலர் தம்பி மரைக்காயர், சுயேட்சை கவுன்சிலர் பஜரியா அம்மாள் ஆகியோர் அந்த தட்டில் நிதி அளித்தனர்.
வாசலில் கவுன்சிலர் பிச்சைக் கேட்டு நின்றிருந்ததை அறிந்த திமுக கவுன்சிலர் ஜெகபருல்லா, காங்கிரஸ் கவுன்சிலர் மெட்ரோ மாலிக் ஆகியோர் பேரூராட்சி பின்பக்கம் சுவர் ஏறி குதித்து சென்றனர். மேலும் அந்த வழியாக வந்த பொதுமக்களும் கவுன்சிலர் தட்டில் சில்லரை காசுகளை போட்டனர்.
கடைசியில் ரூ.85 வசூல் செய்யப்பட்டதாக எழுதி, அதை பேரூராட்சி சுவற்றில் ஒட்டி விட்டு கவுன்சிலர் நாசர் சென்றார். இது குறித்து கவுன்சிலர் நாசர் கூறுகையில், எனது வார்டு மக்களுக்கு எந்த பணியையும் செய்து கொடுக்க முடியவில்லை. பலமுறை தலைவரிடம் கேட்டும் பயனில்லை.
இதனால் எனது வார்டு மக்கள், ஜமாத் நிர்வாகிகள் என்னை ராஜினாமா செய்ய சொல்கிறார்கள். இனிமேலும் இதுபோன்ற சம்பவம் தொடர்ந்தால் வருகிற 15ம் தேதி முதல் தினமும் காலை 10 மணிமுதல் மதியம் 2 மணி வரை தட்டு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டம் 3 வருடங்களுக்கு தொடரும். அதன் மூலம் கிடைக்கும் நிதியைக் கொண்டு எனது வார்டில் வளர்ச்சி பணி செய்வேன் என்றார்.

0 comments:

Post a Comment

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)