முத்துபேட்டை, ஜனவரி 03: முத்துபேட்டை அலையாத்தி காட்டுக்கு (லகூன்) செல்ல வனத்துறை திடீர் தடையினால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
முத்துப்பேட்டை அலையாத்தி காடு ஆசியாவிலேயே மிகப்பெரிய காடாகும் இப்பகுதியில் இருக்கும் லகூன் தீவுகள் இந்தியாவில் எங்கும் காண முடியாத பகுதி இதனை தமிழக அரசு சமீபத்தில் சுற்றுலா தளமாக அறிவித்து பல்வேறு வசதிகளை சுற்றுலா பயணிகளுக்கு ஏற்ப்படுத்தி குடுத்தார்கள் அதனால் இந்தியா முழுவதிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தினந்தோறும் வந்து செல்கிறார்கள்.
அவர்கள் வசதிக்காக ஆசாத் நகர் ஜம்புவானோடை பேட்டை போன்ற பகுதிகளிலிருந்து கோரையாற்று வழியாக பிளாஸ்டிக் படகுகள் இயக்கப்பட்டு வருகிறது இந்த நிலையில் நேற்று புத்தாண்டு என்பதால் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் முத்துப்பேட்டையில் குவிந்தனர் இந்த நிலையில் இப்பகுதி பதட்டமான பகுதி என்பதாலும் சென்ற ஆண்டு இதே பகுதியில் பல்வேறு அசம்பாவிதங்கள் நடந்ததால் சுற்றுலா பயணிகள் நலன் கருதி அலையாத்தி காட்டுக்குள் செல்ல வனத்துறையினர் தடை உத்தரவு போட்டனர் இதனால் குவிந்த சுற்றுலா பயணிகள் காட்டுக்குள் செல்ல முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர் , படகுகளும் வனத்துறை உத்தரவால் செல்லவில்லை.
இதுகுறித்து சுற்றுலா பயணி மனோஜ் கூறுகையில் நான் சென்னையிலிருந்து புத்தாண்டுக்காக நானும் எனது நண்பர்களும் இந்த அறிய அலையாத்தி காடை காண வந்தோம் வனத்துறை எந்தவித முன் அறிவிப்பு இல்லாமல் தடை செய்துள்ளனர் இதனால் எங்களுக்கு பெரும் ஏமாற்றம் தந்துள்ளது இதுகுறித்து வனத்துறை அதிகாரி அயூப்கான் கூறுகையில் மாவட்ட ஆட்சியர் உத்தரவுப்படிதான் நாங்கள் தடை செய்துள்ளோம் சென்ற ஆண்டு நடந்த பல்வேறு சம்பவங்கள் காரணமாக இந்த திடீர் உத்தரவு என்றார்.
0 comments:
Post a Comment