மறுமலர்ச்சி தமுமுக என்ற புதிய இஸ்லாமிய அமைப்பின் துவக்க விழா இன்று சென்னையில் நடைபெற்றது .இதில் தமுமுக வின் முன்னாள் மாநில மாணவரணி செயலாளரும் வழக்கறிஞருமான காஞ்சி .ஜைனுலாபிதீன் ,தமுமுக வின் முன்னாள் மாநில துணை தலைவர் கேப்டன் அமீருதீன் ,தமுமுக வின் முன்னாள் மாநில மருத்துவ சேவை அணி செயலாளர் பாஷா , தமுமுக வின் முன்னாள் மாநில உலமா அணி செயலாளர் யூசுப் எஸ் .பி , தமுமுக வின் முன்னாள் தலைமை நிலைய செயலாளர் திருவள்ளூர் இஸ்மாயீல்,தமுமுக வின் முன்னாள் மாநில மாணவரணி துணை செயலாளர் புளியங்குடி செய்யதலி ,தமுமுக வின் முன்னாள் நெல்லை மாவட்ட செயலாளர் ரசூல் மைதீன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் இதில் கலந்து கொண்டனர் .இதில் வெள்ளை கருப்பு வெள்ளை நிறத்திலான மூவர்ண கொடியை மறுமலர்ச்சி தமுமுக வின் அமைப்பாளர் வழக்கறிஞர் காஞ்சி ஜைனுலாபிதீன் அறிமுகம் செய்து வைத்தார் .
பின்னர் முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளத்திற்கு பேட்டியளித்த வழக்கறிஞர் ஜைனுலாபிதீன் , இரத்தம் சிந்தி உழைத்த தொண்டர்களை தமுமுக தலைமை அவமதிப்பதாக குற்றம் சாட்டினார் .தாம் தொடங்கியுள்ள இந்த இயக்கம் சமூக ஒற்றுமைக்காகவும் ,மதவெறி சக்திகளுக்கு எதிராகவும் செயல்பட போவதாகவும் கூறினார் .மேலும் இந்த அமைப்பிற்கு தமுமுகவின் முன்னாள் துணை தலைவர் விஞ்ஞானி அப்துல் ஜலீல் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் ஜைனுலாபிதீன் தெரிவித்தார் .
தகவல் .ஜே .ஷேக் பரீத் .
0 comments:
Post a Comment