முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டையில் சுன்னத் ஜமாத்திற்கு மாற்றாக நடைபெற்ற திருமணத்தை தடுத்து நிறுத்திய சுன்னத் ஜமாத்தினர் --சாப்பாட்டு அறைக்கு பூட்டு போட்டதால் பரபரப்பு !!!

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஆசாத் நகரில் மளிகை கடை வைத்து இருப்பவர் அப்துல் வகாப். இவரது மகன் முகம்மது சபியுல்லாவுக்கும,; புதுக்கோட்டை மாவட்டம் பி.ஆர்.பட்டிணம் அபுல்பரக்கத் மகள் சபினா பேகத்திற்கும் நேற்று திருமணம் நடைபெறுவதாக இருந்தது.
 

 

 


 திருமணத்தை முத்துப்பேட்டை ஆசாத் நகர் ஜும்ஆ பள்ளிவாசலில் சுன்னத் ஜமாத் முறைபடி திருமணமும், அதே பள்ளிவாசலில் சாப்பாடு நடைபெறுவதாக முடிவு செய்யப்பட்டு திருமண பத்திரிக்கையில் அடிக்கப்பட்டன. அதனால் திருமணத்திற்கான ஏற்பாடுகளை பள்ளிவாசலில் இரண்டு நாட்களாக செய்யப்பட்டன.

 இந்த நிலையில் மணமகன் மற்றும் பெண் வீட்டார் திடீர் என்று தவ்ஹீத் கொள்கை படி திருமணத்தை நடத்த திட்டமிட்டு கருமாரியம்மன் கோவில் அருகே உள்ள மணமகனின் உறவினர் வீட்டில் வைத்து நேற்று காலை 11.30 மணியளவில் தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் முன்னிலையில் திருமணத்தை நடத்தினர். 

பள்ளிவாசலில் சுன்னத் ஜமாத் முறைபடி திருமணம் நடத்த தயாராக எதிர்பார்த்து காத்து இருந்த ஜமாத் நிர்வாகிகள், ஊர்காரர்களுக்கு இது பெரும் அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் தந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த பள்ளிவாசல் சுன்னத் ஜமாத் நிர்வாகிகள், திருமணத்தை ஜமாத்துக்கு மாறாக தவ்ஹித் கொள்கைப்படி நடத்தியதால் பள்ளிவாசலில் சாப்பிட அனுமதிக்க மாட்டோம் என்று அறிவித்தனர். 

இதனால் பெரும் பதற்றமானது. உடன் மனமகன் வீட்டாரும், தவ்ஹித் ஜமாத் பிரமுகர்களும் முத்துப்பேட்டை போலீசாருக்கு தகவல் தொவித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் சாமிநாதன் தலைமையில் போலீசார் ஆசாத்நகர் பள்ளிவாசல் சுன்னத் ஜமாத் நிர்வாகிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். 

இதனால் பிரச்சனை பெரிதாகி ஆத்திரம் அடைந்து சுன்னத் ஜமாத் நிர்வாகிகள் சாப்பாடு ஏற்பாடு செய்யப்பட்ட மதரஸாவை பூட்டுப்போட்டு பூட்டினார்கள். இதனால் மணமகன் உறவினர்கள் தவ்ஹித் ஜமாத் முன்னால் மாவட்ட தலைவர் அன்சாரி தலைமையில் சாலைமறியலில் ஈடுப்பட்டனர். 

இதனால் திருத்துறைப்பூண்டி வழித்தடத்தில் சிறிது நேரம் போக்கு வரத்து தடைப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு முத்துப்பேட்டை டி.எஸ்.பி.கணபதி தலைமையில் போலீசார் வந்து சாலை மறியலில் ஈடுப்பட்டவர்களை அப்புறப்படுத்தினர். அதன்பிறகு மாப்பிள்ளை தந்தை அப்துல் வகாப் மற்றும் இவரின் தந்தை பக்கிர் ராவுத்தர் ஆகியோர் பள்ளிவாசல் சென்று சுன்னத் ஜமாத் நிர்வாகிகளிடம் நான் செய்தது தவறு மன்னித்து கொள்ளுங்கள்.

 ஜமாத் என்னா முடிவு எடுத்தாலும் கட்டுப்படுகிறேன், வந்தவர்களுக்கு சாப்பாடு வழங்க அனுமதி தாருங்கள் என்று கண்ணீர் விட்டு கேட்டனர். அதனால் சமாதனம் அடைந்த பள்ளிவாசல் சுன்னத் ஜமாத் நிர்வாகிகள், ஜமாத் கூட்டத்தை கூட்டினார்கள். இதில் நூற்றுக்கணக்கான இளைஞர்களும் கலந்துக் கொணடனர்.

 அப்பொழுது பள்ளிவாசலில் நடந்த கூட்டத்தில் போலீசார்கள் மணிகண்டன், சுபாஷ் சந்திர போஸ் ஆகியோர் தனது செல் போனில் படம் எடுத்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த இளைஞர்கள் போலீசாரிடம் கடும் வாக்கு வாதத்தில் ஈடுப்பட்டனர். இதனால் இளைஞர்களுக்கும், போலீசுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

பிறகு சமாதானம் செய்யப்பட்டன. அப்பொழுது நடந்த கூட்டத்தில் மாப்பிளை தந்தை பள்ளிவாசலுக்கு, செய்த தவறுக்காக ஒரு லட்சம் அபராதம் கட்ட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டன. இதற்கு மாப்பிள்ளை தந்தை அப்துல் வகாப் சம்மதம் தெரிவித்து கையெழுத்து போட்டார். 

அதன் பிறகு திருமணத்துக்கு சாப்பிட வந்த ஆண்கள் மற்றும் பெண்களை சாப்பிடும் மதரஸாவின் பூட்டை திறந்து அனுமதித்தனர். இது குறித்து திருத்துறைப்பூண்டி தாசில்தார் ராஜகோபால், வருவாய் ஆய்வாளர் ராமச்சந்திரன் உட்பட அதிகாரிகள் விசாரனை நடத்தினார்கள். 

மேலும் அசம்பாவிதம் நடக்காமல் இருக்க பள்ளிவாசல் அருகே துப்பாக்கி ஏந்திய போலீசார் உட்பட ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டனர். இச்சம்பவத்தால் முத்துப்பேட்டையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

0 comments:

Post a Comment

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)