மதுரையில் நடைபெற்ற அனைத்து குண்டு வெடிப்புகளுக்கும், வெடிக்காமல்
எடுக்கப்பட்ட குண்டுகளையும் வைத்தது காவல்துறை தான் என்பது
அம்பலமாகியுள்ளது.
மதுரையை சுற்றி சிறப்பு பிரிவு போலிஸ் குண்டு வைக்கிறது என சந்தேகப்பட்ட SDPI வழக்கறிஞரணி, இவ்வழக்குகளின் விசாரணையை CBI க்கு மாற்ற கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்து நிலுவையில் இருந்துவரும் நிலையில், நேற்று இவ்வழக்கில் மதுரை SP யின் இரண்டு கடிதங்களை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தலைவர் வழக்கறிஞர்.பீட்டர் ரமேஷ் குமார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
அதிர்ச்சியூட்டும் இக்கடிதத்தில் போலிஸில் உள்ள சில கருப்பு ஆடுகள் தனது இன்பார்மர்கள் மூலம் பல்வேறு சமூகவிரோத செயல்களை செய்வது மட்டுமல்லாமல், வெடிகுண்டுகள் வைக்கும் காரியங்களிலும் ஈடுபட்டு வருவதை புட்டுப்புட்டு வைத்துள்ளார்.
இதன் மூலம் மதுரையை சுற்றி இதுவரை எடுக்கப்பட்டதாக கூறப்படும் சுமார் 15 குண்டு, போலிகுண்டு, பட்டாசு குண்டுகளின் பிண்ணனியில் சிறப்பு பிரிவு போலிஸ் இருப்பது தெளிவாகியுள்ளது. இச்சிறப்பு பிரிவிற்கு மதுரைக்கு தலைமை வகித்தது ADSP மாரிராஜனும், ADSP கார்த்திகேயனும் ஆவார்கள். இப்படி இவர்களே குண்டுவைத்து விட்டு அப்பாவி முஸ்லிம்களை விசாரணை என்ற பெயரில் அடித்து சித்திரவதை செய்வது மாபெரும் அநீதியாகும்.
இதுபோன்ற காவல்துறையில் உள்ள கயவாளிகளுக்கு, இன்பார்மர்கள் என்று அழைக்கப்படும் மாமாக்கள் குண்டுவைப்புகளில் உதவி செய்து வருகின்றனர்.
மதுரை சிறப்பு பிரிவு இது போன்ற இன்பார்மர்களை தேர்வு செய்து சட்டவிரோத காரியங்களை செய்து வருகின்றது. தாங்களே குண்டு வைத்துவிட்டு பின்னர் அப்பாவி முஸ்லீீம்களை கைது செய்து மெடலும் , பதவிஉயர்வும் பெருவதற்காக இக்கருப்பு ஆடுகள் இதனை செய்து சிறப்பு மிகுந்த தமிழக காவல்துறைக்கு கலங்கத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.
இவ்வழக்கில் நமக்காக ஆஜராகி தெளிவான வாதங்களை எடுத்து வைக்கும் வழக்கறிஞர். பீட்டர் அவர்கள் இவ்வழக்கை கண்டு அதிர்ச்சியுற்று என்னிடம்,”மாப்ள இது ரெம்ப அநியாயம்டா, இப்படி போலிஸே குண்டுவைப்பார்கள் என்பதை கேள்விதான் பட்டிருக்கின்றேன், இவ்வழக்கில்தான் அதனை நேரடியாக பார்த்து உணர்ந்துள்ளேன்” என்றும் “முஸ்லீம் சமூகம் உண்மையிலையே பாவம்டா ” என்றும் மனமுருகி கூறினார். என எஸ்.டி.பி.ஐ கட்சி வழக்கறிஞர் அணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் அப்பாஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இன்னும் இந்த வழக்கில் பல அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒடுக்கப்படுகிற மக்களுக்காக குரல் கொடுக்கும் எஸ்.டி.பி.ஐ கட்சி குண்டு வெடிப்பு வழக்கில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் சட்ட ரீதியான உதவிகளையும் செய்து வருவதோடு, வெகுவிரைவில் உண்மையை குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்பதை தெரிவித்து கொள்கிறது.

0 comments:
Post a Comment