முத்துப்பேட்டை, ஜனவரி 14/15: முத்துப்பேட்டை ஆசாத்நகர் பகுதியில் கடந்த 4
வருடங்களுக்கு முன்பு பேரூராட்சி சார்பில் ரூபாய் 95 லட்சம் மதிப்பீட்டில்
வெள்ளைகுளம் முதல் பழைய பேருந்து நிலையம் வரை சாலை இருப்பக்கமும் கழிவு
நீர் வடிக்கால் கட்ட நிதி ஒதிக்கீடு செய்யப்பட்டு அதிரடியாக அன்றே தினமே
பணிகள் துவங்கியது. இரவு பகல் பாராமல் பணிகளை துவக்கிய பேரூராட்சி
நிர்வாகம் என்ன காரணமோ பணியை பாதியில் நிறுத்தினர். அதனால் பணிகள் முழுமை
பெறாமல் ஆங்காங்கே மட்டுமே பணிகள் நடந்து பாதியில் கிடப்பில் போடப்பட்டது.
அன்று முதல் இன்று வரை அந்த பணியை பேரூராட்சி நிர்வாகம் இது வரை செய்து
முடிக்கவில்லை. அதனால் பணி நடைபெற்ற இடங்களில் வரும் சாக்கடை நீர்கள் வடிய
வழியின்றி தேங்கி நிற்கிறது.
ஆனால் ஒதிக்கீடு செய்யப்பட்ட நிதி மட்டும்
ஒப்பந்தக்காரருக்கு கிடைத்துவிட்டதாக தெரிகிறது. இது குறித்து அப்பகுதி
பொதுமக்கள் பலமுறை சம்மந்தப்பட்ட அதிகாரியிடம் புகார் தொவித்தும் நடவடிக்கை
எடுக்கப்பட வில்லை என்பது ஒரு பக்கம். ஆனால் பாதியில் நிறுத்தப்பட்ட இந்த
பணியால் நான்கு வருடமாக ஆங்காங்கே கழிவு நீர்;கள் தேங்கி வடிய வழியின்றி
நிற்பது இப்பகுதியின் ஒரு கொடுமையான அவலமாக உள்ளது. மேலும் இப்பகுதியில்
முக்கிய பள்ளிவாசல்கள், பள்ளிக்கூடங்கள், அரசு அலுவலகங்கள், ஆயிரக்கணக்கான
குடியிருப்புகள் மத்தியில் தற்பொழுது 4 வருடமாக சாக்கடை நீர் தேங்கி கொசு
உற்பத்தியை ஏற்படுத்தி கொண்டிருக்கும் இந்த அவல நிலையால் இப்பகுதி
மக்களுக்கு அடிக்கடி பல்வேறு வியாதிகள் ஏற்பட்டு வருகிறது.
இதனை
சுகாதாரத்துறையும,; பேரூராட்சி நிர்வாகமும் கண்டுக்கொள்ளவில்லை என்று
இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். மேலும் வடிய வழியின்றி திறந்து
கிடக்கும் இந்த சாக்கடை நீரால் நோய்கள் பரவி வருவது ஒருபுறம் இருந்தாலும்
அடிக்கடி திறந்து கிடக்கும் இந்த வடிக்காலுக்குள் மக்களும் வாகனங்களும்
விழுந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த
அப்துல் அஜீஸ் கூறுகையில்: நான்கு வருடத்துக்கு முன் முறைக்கேடாக போடப்பட்ட
இந்த கழிவு நீர் வடிக்கால் திட்டத்தில் பெரும் அளவில் முறைக்கேடு ஏற்பட்டு
உள்ளது. பணியை 15 சதவீதம் கூட முடிக்காமல் முழு பணத்தையும் கொள்ளையடித்து
விட்டனர்.
இதனால் பாதிக்கப்படுவது இப்பகுதி மக்கள்தான். இது குறித்து
மாவட்ட ஆட்சியர் வரை நூறு முறை புகார் தெரிவித்துவிட்டேன். எந்த பலனும்
இல்லை. ஒரு முறை பேரூராட்சியில் தேங்கி நிற்கும் இந்த சாக்கடை நீரை
அப்புறப்படுத்த கோரிய போது என் மீது போலீசில் புகார் கொடுத்து என் மீது
நடவடிக்கை எடுத்தனர். ஆனாலும் நான் தொடர்ந்து போராடிக் கொண்டு தான்
இருக்கிறேன். இது வரை எனக்கு வெற்றி கிடைக்கவில்லை. சென்ற மாதம் கூட மாவட்ட
ஆட்சியரை சந்தித்து புகார் கொடுத்தேன், பலனில்லை. செய்தியின்; மூலமாவது
இதற்கு ஒரு தீர்வு ஏற்படும் என்று கடைசியாக நம்புகிறேன் என்றார்.
நமது நிருபர்;
ரிப்போர்ட்டர் முஹைதீன் பிச்சை
0 comments:
Post a Comment