முத்துப்பேட்டை: பிப்ரவரி 19/15: முத்துப்பேட்டையைச் சேர்ந்தவர் தொழிலதிபர் எஸ்.எம்.ஹைதர் அலி. இவருக்கு குவைத் நாட்டில் தலைமையாக கொண்டு பல்வேறு நாடுகளில் டி.வி.எஸ். கார்கோ நிறுவனம் உள்ளது. மேலும் இவரது அல்மஹா அறக்கட்டளை சார்பில் ஏழை மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட பணிகள் செய்து வருகிறார், இந்த சேவையைப் பாராட்டி சமீபத்தில் ஐரோப்பியா பல்கலைகழகம் இவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது. இதனையடுத்து பல்வேறு நாடுகளில் இவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது இந்த நிலையில் நேற்று தொழிலதிபர் ஹைதர் அலி குவைத்திலிருந்து சொந்த ஊரான முத்துப்பேட்டைக்கு வந்தார் அவருக்கு வழக்கறிஞர் தீன்முகமது தலைமையில் முத்துப்பேட்டை எல்லையான செம்படவன்காடு பைபாஸ் அருகே பல்வேறு அமைப்பினர் சார்பில் சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டு அங்கிருந்து காரில் ஊர்வலமாக ஆசாத்நகர் அல்மஹா காம்ப்ளக்ஸ்க்கு அழைத்து வரப்பட்டது, அங்கே வர்த்தகக்கழக தலைவர் ராஜாராமன், துணைச்செயலாளர் மாரிமுத்து, செயற்குழு ஊறுப்பினர் இர்பான் ஹைதர்அலி, மாவட்ட ஊராட்சி ஊறுப்பினர் முருகையன். இ.கம்யூனிஸ்ட் நகர செயலாளர் மார்க்ஸ், முஸ்லீம் லீக் மாவட்ட தலைவர் முகைதீன் அடுமை, அரிமா சங்க முன்னால் தலைவர் அப்துல் அஜீஸ், ஜமாஅத் தலைவர் ஜின்னா, த.மு.மு.க ஒன்றிய தலைவர் நெயனாமுகமது, நகர தலைவர் சம்சுதீன், முன்னால் தலைவர் தாவூது. காங்கிரஸ் மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் ஹாஜா, முன்னால் நகர செயலாளர் ஜெஹபர்அலி, தி.மு.க நகர இளைஞர் அணி அமைப்பாளர் இன்பா பிரபாகர், நுகர்வோர் அமைப்பின் தலைவர் சுல்தான் இபுராகிம், அல்மஹா நிர்வாகிகள் இபுராகிம், சென்னை கிதிர், சென்னை ஹாஜா கமால் உட்பட அல்மஹா பணியாளர்கள், உறவினர்கள் பலரும் சால்வை அணிவித்து வரவேற்றனர், அதேபோல் கத்தார் நாட்டிலிருந்து மேனேஜர் தாவூது இபுராகிம், பஹ்ரைன் நாட்டிலிருந்து மேனேஜர் ரிஸ்வான் கான் ஆகியோர் தொலைப்பேசி மூலம் வாழ்த்து தெரிவித்தனர், நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கருத்தப்பா சித்திக் செய்து இருந்தார்.
நமது நிருபர் :
ரிப்போர்ட்டர் முஹைதீன்
0 comments:
Post a Comment