முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

ஒரு முஸ்லிம் தேசம் 2020 இல் வாழத் தகுதியற்றதாகிறது..!









பலஸ்தீனின், ஆகஸ்ட் 29 : பலஸ்தீனின்ச காசா பகுதி 2020 ஆம் ஆண்டாகும் போது வாழத் தகுதியற்ற பகுதியாக மாறும் அபாயம் இருப்பதாக ஐ.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது. அங்கு உடன் சுகாதாரம், நீர் விநியோகம், மின்சக்தி மற்றும் பாடசாலைகள் மேம்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

“காசாவில் வசதிகள் உடன் மேம்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் 2020 ஆம் ஆண்டில் அங்கு வாழ முடியாத நிலை ஏற்படும். தற்போதே அங்கு வாழ்வது கடினமாக உள்ளது” என்று ஐ.நா.வுக்கான மனிதாபிமான இணைப்பாளர் மக்ஸ்வெல் கெய்லாட் ஊடகங்களுக்கு தெரிவித்தார். இது குறித்த ஐ.நா. அறிக்கை நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.

அப்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். காசாவின் தற்போதைய சனத்தொகை 1.6 மில்லியனாக உள்ளது. அது 2020 ஆம் ஆண்டாகும்போது 2.1 மில்லியனாக அதிகரிக்கும். இந்த சனத்தொகை அதிகரிப்பால் அங்கு ஒரு சதுர கிலோ மீற்றருக்கு 5,800 பேருக்கு மேல் வசிப்பார்கள் என ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எனினும் காசாவின் நிர்வாகக் கட்டமைப்பு ஜனத்தொகை அதிகரிப்புக்கு ஏற்ப வளர்ச்சியடையவில்லை. குறிப்பாக மின் விநியோகம், நீர் விநியோகம், சுகாதாரம், நகர அபிவிருத்தி மற்றும் சமூக சேவைகள் வளர்ச்சியடையவில்லை என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

காசாவின் கால் பங்கு கழிவு நீரே, மீள் பயன்பாட்டுக்கு பெறப்படுகிறது. எஞ்சிய நீர் மத்திய தரைக் கடலுடன் கலக்கிறது. காசா கடற் பகுதியை இஸ்ரேல் முழுமையாக முடக்கியுள்ளதால் அங்கு எப்போதும் இல்லாத அளவுக்கு எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதோடு அதன் காரணமாக தொடர்ச்சியான மின் தடைக்கும் உள்ளாகி வருகிறது. அதேபோன்று காசாவில் வேலையில்லா தோர் எண்ணிக்கை 45 வீதமாக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் அடுத்த 8 ஆண்டுகளுக்குள் காசாவின் குடிநீர் தேவை 60 வீதமாக அதிகரிக்கும் என குறிப்பிட்டுள்ள ஐ.நா. பிரதான நீர் ஆதாரங்களான நீர்த் தேக்கங்களில் ஏற்பட்டுள்ள சேதங்கள் அங்கு பாரிய விளைவுகளை ஏற்படுத்தும். உடன் சரி செய்யப்படாவிட்டால் பாரிய விளைவுகள் ஏற்படும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 2020 ஆம் ஆண்டாகும் போது காசா பகுதிக்கு மேலும் 440 க்கு மேற்பட்ட பாடசாலைகள், 800 மருத்துவமனை படுக்கைகள் மற்றும் மேலும் 1000 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் தேவைப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

இஸ்ரேலின் முற்றுகை

கடந்த 2006 ஆம் ஆண்டு காசாவில் இஸ்ரேல் இராணுவ வீரர் ஒருவர் போராளிகளால் கடத்தப்பட்டதைத் தொடர்ந்து அந்தப் பகுதிக்கான விநியோகப்பாதைகளை இஸ்ரேல் முடக்க ஆரம்பித்தது. இவ்வாறு கைது செய்யப்பட்ட வீரரே கடந்த ஆண்டு ஒக்டோபரில் கைதிகள் பரிமாற்றத்தின் கீழ் 1,027 பலஸ்தீன கைதிகளுக்கு பதில் விடுவிக்கப்பட்டார்.

எனினும் 2007 ஆம் ஆண்டு ஹமாஸ் அமைப்பு ஆட்சிக்கு வந்ததும் இஸ்ரேல் அந்த பகுதிக்கான முழு விநியோகப் பாதைகளையும் முடக்கியது.

இதனால் குறுகிய கடற்கரை பகுதியான காசாவில் ஐ.நா. உதவி, வெளிநாட்டு நிதியுதவி மற்றும் சுரங்கப்பாதை ஊடாகவே அங்குள்ள வர்களுக்கு உணவு, கட்டுமானப் பொருட்கள், மின்னணுப் பொருட்கள், கார்கள் என்பன எகிப்தினூடாக கிடைக்கப் பெறுகின்றன.

காசாவில் 80 வீதமானோர் உதவிகளிலேயே தங்கியிருப்பதால் அப்பகுதிக்கான சர்வதேச உதவிகளை அதிகரிக்குமாறு ஐ.நா.வுக்கான மனிதாபிமான இணைப்பாளர் கெய்லாட் கோரியுள்ளார். “அவர்கள் முற்றுகைக்கு உள்ளாகியுள்ளனர். அவர்கள் ஆக்கிரமிப்பின் கீழ் உள்ளார்கள்.

அவர்களுக்கு அரசியல் மற்றும் சாதாரண விசயங்களிலும் எமது உதவி தேவைப்படுகிறது” என்றார். எனினும் ஹமாஸ் அமைப்புக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதல் போக்கு தொடர்ந்த வண்ணமே உள்ளது. காசாவில் மக்கள் வாக்கெடுப்பின் மூலம் தேர்வான ஹமாஸ் அமைப்பை மேற்கு நாடுகள் தீவிரவாத அமைப்பாகவே கருதுகிறது.
source from: www.muthupettaiexpress.blogspot.com
நன்றி - அல் ஜஸீரா

முத்துப்பேட்டையில் கொடிய விசமுள்ள இரு பாம்புகள், பொதுமக்களே பிடித்தனர்..






முத்துப்பேட்டை, ஆகஸ்ட் 28 : முத்துப்பேட்டை ஆசாத் நகர் பகுதியில் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்திற்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தில் அதிகமான கருவை காடுகள் அதிகம் இருப்பதால் பொதுமக்கள் அதிகம் நடமாட அச்சம் அடைந்து வந்தனர். இந்த நிலையில் அந்த பகுதியிலிருந்து ரோட்டுக்கு வந்த நல்ல பாம்பு மற்றும் காட்டு விரியன் பாம்பும் அங்குள்ள குடியிருப்புக்குள் நுழைய முயன்றது. அப்போது இவற்றை கண்ட அப்பகுதி பொது மக்கள் சாமாத்தியமாக அப்பாம்பை உயிருடன் பிடித்தனர். இதனை பார்க்க அனைத்து மக்களும் காட்டு பகுதிக்கே சென்று விட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து பொதுமக்கள் தரப்பில் கருத்தப்பா கூறியதாவது. இந்த பகுதியில் அதிக கொடிய விசமுள்ள பாம்புகள் இருப்பதால் இவற்றை பொது மக்களுக்கு இடையூர் இல்லாமல் ஏற்படுத்தும் பொருட்டு இவற்றை உடனே வனத்துறையினர் பிடித்து உரிய இடத்தில் விடவேண்டும் என்றும் அப்போது அவர் தெரிவித்தார்.
source from: www.muthupettaiexpress.com, www.mttexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் முஹைதீன் பிச்சை

மவுத்து அறிவிப்பு: "நே.கா.மு. ஆசிரியர் அலிகுள் ஜமால்"


முத்துப்பேட்டை, ஆகஸ்ட் 25 : PKT ரோடு மர்ஹும் நே.கா.மு. சேக் முஹைதீன் அவர்களின் மகனும், மர்ஹும் அப்துல் லத்திப், மர்ஹும் மவுளா அபூபக்கர் ஆகியோரின் தம்பியும், H. முஹம்மது லத்திப் அவர்களின் தகப்பனாரும், ஜெஹபருதீன் அவர்களின் மாமனாருமாகிய நே.கா.மு. ஆசிரியர் அலிகுள் ஜமால் அவர்கள் இன்று பகல் 2 மணியளவில் மவுத்தாகி விட்டார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹீ ராஜிவூன்) நாளை காலை 10 மணியளவில் குத்பா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை அறிவிக்கின்றார்கள்.
source from: www.muthupettaiexpress.blogspot.com
அறிவிப்பவர்.
H. முஹம்மது லத்திப்

நமது நிருபர்

K.M. காதர் கனி (பாடகர்)

முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கம் நடத்திய ஆலோசனைக் கூட்டம்..



முத்துப்பேட்டை, ஆகஸ்ட் 25 : முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் இச்சங்கத்தின் தலைவர் ஜனாப். ஜஹபர் உசேன் அவர்களின் இல்லத்தில் நேற்று அஷர் தொழுகைக்கு பிறகு நடைபெற்றது. மேலும் முத்துப்பேட்டை பிரதிநிதி கா.மு நெய்னார் முஹம்மது அவர்கள் இக்கூட்டத்திற்கு தலைமை வகித்தார். மேலும் இக்கூட்டத்தில் ஃபித்ரா அரிசி விநியோகம் மற்றும் உதவித்தொகை பெர கடிதம் எழுதி அனுப்பிய அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் விரைவில் உதவித்தொகைகள் வழங்கப்படும் என்றும் அப்போது முடிவெடுக்கப்பட்டது. மேலும் முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கம் சார்பில் கல்வி குறித்து மாபெரும் விழிப்புணர்வு மாநாடு விரைவில் நடத்த உள்ளதாக அப்போது முடிவெடுக்கப்பட்டது. இந்த மாநாடு குறித்த செய்தி மேலும் ஒரு ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு தான் வெளியிடப்படும் என்றும் இச்சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.
source from: www.muthupettaiexpress.blogspot.com, www.mttexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ்

அசாமில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வசூல் செய்த பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா...



முத்துப்பேட்டை, ஆகஸ்ட் 20 : அசாமில் பாதிக்கப்பட்ட நமது முஸ்லிம் சமுதாய மக்களை கொன்று குவித்து வரும் புத்த மத வெறியர்களுக்கு அல்லாஹ் விரைவில் ஹிதாயத் கொடுக்க இந்த இனிய நாளில் நாம் துவா செய்வோம். இந்த முஸ்லிம் சமுதாய மக்களின் அழிவை பார்த்து எத்துணையோ மனித உரிமை ஆணையம் வாய் பொத்தி மவுனம் சாதித்து வருகிறது. இந்த மக்களுக்கு உதவிகள் செய்யும் பொருட்டு இன்று நோன்பு பெருநாளை முன்னிட்டு இந்தியா முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நமது சமுதாய மக்களிடம் நிதிகளை திரட்டி வருகிறது. இதன் அடிப்படையில் இன்று முத்துப்பேட்டையில் நடைபெற்ற நோன்பு பெருநாள் தொழுகைக்கு பிறகு நிதிகளை மாநில உறுப்பினர் ஜனாப் A. அபூபக்கர் சித்திக் அவர்களின் தலைமையில் இன்று வசூல் செய்யப்பட்டது. உடன் திருவாரூர் மாவட்ட தலைவர் ஜனாப். தப்ரே ஆலம் பாதுஷா, மற்றும் நிர்வாகிகள் இருந்தனர்.
source from: www.muthupettaiexpress.blogspot.com
நமது நிருபர்

O.M. சுபைத் கான், AKL.அப்துல் ரஹ்மான்

முத்துப்பேட்டையில் நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள் குறித்த ஓர் பார்வை...














முத்துப்பேட்டை, ஆகஸ்ட் 20 : முத்துப்பேட்டையில் நோன்பு பெருநாள் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு அமைப்பினர் மற்றும் பல்வேறு கட்சியினரும் ஒன்று சேர்ந்து அவரவர்களுக்கு தெரிந்ததை மிக சிறப்பான முறையில் பேனர்களை வைத்து குட்டியார் பள்ளி வாசல் மற்றும் ஆசாத் நகர் பள்ளி வாசலை சுற்றி அலங்கரித்துல்லானர். இது குறித்த ஓர் பார்வையாக நமது முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.
source from:www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு

முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் நிர்வாகம்

முத்துப்பேட்டையில் கோலாகலமாக கொண்டாடப் பட்ட நோன்பு பெருநாள் ஓர் பார்வை.













முத்துப்பேட்டை, ஆகஸ்ட் 20: முத்துப்பேட்டையில் இன்று நோன்பு பெருநாள் தொழுகை சரியாக 7.30 மணியளவில் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் புதுத்தெரு திடலில் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்களும், ஆண்களும் திரளாக கலந்து கொண்டு பயனடைந்தனர். தொழுகைக்கு பின்பு சிறப்பு பயனும் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து குட்டியார் ஜும்மாஹ் பள்ளிவாசலில் சரியாக 9 மணியளவில் தொழுகை நடைபெற்றுது. இதனைத்தொடர்ந்து ஆசாத் நகர் ஜும்மாஹ் பள்ளி வாசாளில் தொழுகை நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து சிறப்பு பயானும் நடைபெற்றது. பயன் முடிந்த வுடன் ஒவ்வொரு சகோதரரும் தங்களுடைய அன்பை பரிமாறிக்கொண்டனர். மேலும் புதுத்தெரு பள்ளிவாசல் மற்றும் மக்கா பள்ளி வாசலிலும் பெருநாள் தொழுகை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
source from: www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ்,

வேற்றுமைகளை மறந்து முஸ்லிம்கள் ஒன்றுபட வேண்டும் - மஸ்ஜித்துல் அக்ஸா இமாம்


ஜெருசலம் 13 : இஸ்லாத்தில் மூன்று முக்கிய புனித மஸ்ஜிதுகளில் ஒன்றான மஸ்ஜிதுல் அக்ஸாவில் ரமலானின் நான்காவது வெள்ளிக்கிழமையன்று மூன்றரை லட்சத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் ஜும்ஆ தொழுகையில் பங்கேற்றனர்.

இஸ்ரேலின் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மீறி லட்சக்கணக்கான மக்கள் பரிசுத்தமான மஸ்ஜிதில் நடந்த ஜும்ஆவில் கலந்துகொண்டனர்.

மஸ்ஜிதுல் அக்ஸாவில் ஜும்ஆ உரை நிகழ்த்திய இமாம் தனது உரையில் கூறியது: ‘ஃபலஸ்தீன் மற்றும் புனித மஸ்ஜிதான மஸ்ஜிதுல் அக்ஸாவை விடுவிப்பது உலக முஸ்லிம்களின் கடமையாகும். இவற்றின் பாதுகாப்பு என்பது உலக முஸ்லிம்களின் நம்பிக்கையில் உட்பட்டதாகும். எல்லா வேற்றுமைகளையும் மறந்து முஸ்லிம்கள் ஒன்றிணைந்து குத்ஸின் விடுதலைக்காக பாடுபட வேண்டும்’ என கூறினார்.

மஸ்ஜிதுல் அக்ஸா மற்றும் குப்பத்துஸ்ஸுஹ்ராவின் முற்றங்கள் ஆண்கள் மற்றும் பெண்களால் நிரம்பி வழிந்தன. ஜும்ஆ தொழுகைக்கு பிறகு ஃபலஸ்தீன் மற்றும் இதர நாடுகளில் உயிர் தியாகம் புரிந்த முஸ்லிம்களுக்கு ஜனாஸா தொழுகையும்(இறந்தவர்களுக்கான பிரார்த்தனை) சிறப்பு பிரார்த்தனையும் நடைபெற்றன.
source from: www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ்

சவூதி அரேபியா மன்னர் அப்துல்ல்லா கண் திறந்தார் - மியன்மார் முஸ்லிம்களுக்கு உதவி


மியான்மர்,ஆகஸ்ட் 13 : கலவரத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு, 250 கோடி ரூபாய் (இந்திய மதிப்பு) பெறுமானமுள்ள உதவிகளை சவுதி அரேபியா அரசு வழங்க உள்ளது.

கடந்த ஜூன் மாதம், முஸ்லிம்களின் குடிசைகளை, தீ வைத்து கொளுத்தி விட்டதாகக் கூறி, பெரிய அளவில் கலவரம் மூண்டது. பாதுகாப்பு கருதி, ஏராளமான முஸ்லிம்கள், தங்கள் தாயகமான வங்கதேசத்துக்குள் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.

மியான்மரில் உள்ள முஸ்லிம்கள் அந்நாட்டு ராணுவத்தால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவதை, இஸ்லாமிய கூட்டமைப்பு நாடுகள் கண்டித்துள்ளன. இதற்கிடையே இந்த மாநாட்டின் உறுப்பினரான சவுதி அரேபியா, கலவரத்தால் பாதிக்கப்பட்ட மியான்மர் முஸ்லிம்களுக்கு, 250 கோடி ரூபாய் பெறுமானமுள்ள உதவிகளை அறிவித்துள்ளது. இந்த நிவாரணப் பொருட்களை உடனடியாக மியான்மருக்கு அனுப்ப, சவுதி மன்னர் அப்துல்லா உத்தரவிட்டுள்ளார்.
source from: www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ்

நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு? கவனிப்பாரா தமிழக முதல்வர்??


புதுக்கோட்டை, ஆகஸ்ட் 11 : புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகாவில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம் சிறுமருதூர்.அங்கு இஸ்லாமிய மக்களும், உடையார் இன மக்களும், முக்குலத்தோர் இன மக்களும் , தலித் மக்களும் சந்தோசமாக வாழ்ந்து வந்தனர். இஸ்லாமிய மக்களுக்கு நிலம் சொத்துகள் கொஞ்சம் கூடுதலாகவே இருந்தது இவற்றின் மீது நெடுங்காலமாக கண் வைத்து இருந்த அந்த ஊரை சார்ந்த ராஜநாயகம் என்பவர் அங்கு வாழ்ந்து வந்த 30 க்கும் மேற்பட்ட இஸ்லாமிய குடும்பங்களை குண்டர்களை கொண்டு அடித்து சித்திரவதை செய்து கொடுமை படுத்தினார், பின்பு அனைவரின் சொத்துகளையும் பறித்து கொண்டு அந்த மக்களை ஊரை விட்டே விரட்டி விட்டார். எந்த வம்புக்கும் போகாத அந்த அப்பாவி மக்கள் எதிர்க்க தைரியம் இல்லாத நிலையில் அவர்கள் இன்று எங்கு இருக்கிறார்கள் , உயிரோடுதான் இருக்கிறார்களா? இல்லையா என தெரிய வில்லை. இந்த பிரச்சினையை கிளப்பிய சில சமுதாய அமைப்புகள் கூட வாங்க வேண்டியதை வாங்கி கொண்டு அமைதியாய் இருந்து விட்டன.

அந்த அப்பாவி மக்களை விரட்டியதோடு இல்லாமல் அங்கு அமைந்து இருந்த பழமையான ஜும்மா பள்ளிவாசலும்தரை மட்டமாகி உள்ளது.இவ்வளவு அநியாயம் நடந்தும் இந்த விஷயம் வெளி உலகத்துக்கு வராமல் மிகவும் கவனமாக பார்த்துகொண்டார் ராஜநாயகம்.

கடந்த பொது தேர்தலில் அறந்தாங்கி தொகுதிக்கு நல்ல பிள்ளையாக சீட்டும் வாங்கி தி.மு.க. ஆட்சியில் மேல் மக்கள் இருந்த வெறுப்பின் காரணமாக இவரும் அந்த அலையில் வெற்றி பெற்றார். வெற்றி பெற்றவுடன் அதிகாரம் கைக்கு வந்து விட்டது என்ற மமதையில் அந்த விரப்பட்ட மக்களில் ஒருவரான நைனா முகமது என்பவர் வாசித்த வீட்டை அபகரித்து இன்று அந்த வீட்டில் தான் குடி இருக்கிறார்.
பள்ளிவாசல் இருந்த இடத்தின் மேல் தார் சாலை போட்டு பள்ளிவாசல் இருந்த அடையாளமே இல்லாமல் செய்து விட்டார். ஆனால் வருவாய் துறையின் பதிவுகளில் இவை அனைத்தும் தெளிவாய் உள்ளது. இன்று வரை ராஜநாயகம் வசிக்கும் வீடு அந்த இஸ்லாமிய சமுதாய நண்பர்கள் பெயரில் தான் அணைத்து ரெக்கார்டுகள் உள்ளன. பள்ளிவாசலை இடித்து அதன் மேல சாலை போட்டு எல்லா வற்றையும் அபகரித்து உள்ளார். பாதிக்க பட்டவர்கள் கேட்கவே பயபடுகின்றனர். அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என தெரியவில்லை. உயிரோடுதான் உள்ளார்களா என்பது கூட சந்தேகமாக உள்ளது.

எல்லோரையும் விரட்டி விட்டு இன்று அவர் மட்டும் சந்தோசமாக இருக்கிறார்..

சமூக சேவகர்கள் யாராவது இதை தட்டி கேட்டால் தன்னுடைய பதவி அதிகாரங்களை காட்டி மிரட்டுகிறார் . இவரால் அ. இ. அ. தி. மு.க கட்சிக்கும் தூய்மையான ஆட்சிக்கும் கெட்ட பெயர் ஏற்படும் சூழல் உள்ளதால் இதன் உண்மை நிலைமையை தமிழகமுதல்வர்
உளவுத்துறையின் மூலமாக அறிந்து அவர் மேல் கடுமையான நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் , இஸ்லாமிய அமைப்புகள் , மனித உரிமை இயக்கங்கள் போன்றவை முன் வர வேண்டும். எந்தவித பிரச்சனையிலும் ஈடுபடாத அந்த மக்களின் நிலைமை என்று என்ன வென்றே தெரியவில்லை. அதிகாரம், குண்டர்களின் துணை என வலம் வரும் இவரை போன்றவர்களை எதிர்ப்பது கொஞ்சம் சிரமம் தான். ஆனால் மக்கள் சக்தி ஒன்று சேர்ந்தால் சர்வாதிகாரன் ஹிட்லருக்கு ஏற்பட்ட நிலைமை தான் இவரை போன்றவர்களுக்கும் ஏற்படும் என்பதனை நாம் தெரிய படுத்துவோம்..

தயவு செய்து இந்த செய்தியை படிக்கும் அனைத்து நண்பர்களும் இதை share செய்யவும். எங்காயாவது ஒளிந்து வாழும் அந்த மக்கள் வெளிச்சத்தின் முன்னே வர ஒரு தைரியம் கிடைக்கும்.
கேட்க கூட நாதி இல்லாத அந்த இஸ்லாமிய குடும்பங்களுக்காக சகோதருக்காக நம்மால் ஆனா உதவியை செய்வோம்.

வெளி உலகத்துக்கு வராமல் இருக்கும் இந்த செய்தியை வெளி உலகத்திற்கு எப்படி கொண்டு வந்து அவர்களுக்கு தண்டனை வாங்கி தந்து பாதிக்கப்பட்ட அந்த மக்கள் தன்னுடைய சொந்த வீட்டுக்கு செல்லும் நாளை நாம் தான் முடிவு செய்ய வேண்டும்.. மக்களே ஒன்று கூடுங்கள்..
source from: www.muthupettaiexpress.blogspot.com
தகவல் - முஹம்மது யூசுப், கோட்டைப்பட்டினம்,

முத்துப்பேட்டை மூன்லைட் கிரிக்கெட் அணியினர் நடத்திய 3 ஆம் ஆண்டு இஃப்தார் நிகழ்ச்சி.









துபாய், ஆகஸ்ட் 11 : முத்துப்பேட்டை மூன்லைட் கிரிக்கெட் அணியினர் சார்பில் மாபெரும் மூன்றாம் ஆண்டு இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி மிக பிரம்மாண்டமான முறையில் துபாயில் உள்ள அல் தவார் பார்க் என்ற இடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சுமார் 5 மணியிலிருந்து முத்துப்பேட்டை மக்கள் கூட்டம் கூட்டமாக அல் தவார் பார்க்கை நோக்கி ஒன்றன் பின் ஒன்றாக மிக ஆர்வத்துடன் படையெடுத்து வந்த வண்ணமாய் காட்சியளித்தது.

இங்கு நோன்பு திறப்பதற்காக நோன்பு காஞ்சி, பல்வேறு விதமான பல வகைகள், ஜூஸ்கள், மற்றும் பேரிச்சை பழங்கள் ஆகியவைகள் இப்தார் விருந்திற்காக வைக்கப்பட்டிருந்தது. மேலும் சரியாக 6 மணிக்கெல்லாம் அல் தவார் பார்க் முத்துப்பேட்டை மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தன. பின்னர் சரியாக 7.05 மணியளவில் நோன்பு திறக்கப்பட்டு மக்ரிப் தொழுகையும் இங்கு நடைபெற்றது. தொழுகையின் முடிவின் போது சிறப்பு பயானும் இங்கு நடைபெற்றது. பின்னர் சிறப்பு விருந்தும் அளிக்கப்பட்டு, இந்த நிகழ்ச்சி மிகவும் சீரோடும் சிறப்போடும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

மேலும் நிகழ்ச்சியின் முடிவில் முத்துப்பேட்டை சகோதரர்கள் ஒருவருக்கொருவர் தங்களுடைய அன்பை பரிமாறிக்கொண்டனர். மேலும் இந்த நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற வேண்டும் என்றும், இது போன்ற நிகழ்ச்சி துபாய் வாழ் முத்துப்பேட்டை நண்பர்களுக்கு மறக்க முடியாத நிகழ்வாக இருந்தது என்றும் இதில் கலந்து கொண்ட அனைவரும் வாழ்த்தினார்கள். மேலும் இது தொடர்ந்து நடைபெற வேண்டும் என்றும் இறைவனிடம் பிராத்தித்தனர். இந்நிகழ்ச்சியில் 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சிகளை முத்துப்பேட்டை மூன்லைட் கிரிக்கெட் அணி நிர்வாகிகள் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
source from: www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு

துபாயிலிருந்து முத்துப்பேட்டை J .சேக் பரீது

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)