குஜராத், செப்டம்பர் 24 : தன் இனத்தை கருவறுக்க துடிக்கும் ரத்த வெறியர்களின் உண்மை முகத்தை கூட புரிந்துகொள்ள முடியா சமூகமடா நாம்...:-/நீ எதற்கு புகைப்படம் எடுக்கிறாய் சகோதரி ...?உன்னை போல் எங்களை வாழவிடு என்பதற்காகவா ? அல்லதுநல்ல வேலை நீ எங்களை விட்டுவைத்தாய் என்று,நன்றி சொல்வதற்காகவா ....?நீ வெகுளியாக நிற்கிறாய் - அவன் வெறியோடு நிற்கிறான்...மிரட்டலுக்கு பணிந்தீர்களா ? அல்லது பணத்திற்கு பணிந்தீர்களா ?வேறென்ன சொல்வதற்கு புதிதாக...
நீ எதற்கு புகைப்படம் எடுக்கிறாய் சகோதரி ...?
2002ல் குஜராத்தில் நடந்த முஸ்லீம்களுக்கு எதிரான கலவரத்திற்கு தலைமை தாங்கி நடத்தியவர் முதல்வர் நரேந்திர மோடிதான் - முன்னாள்
குஜராத் உள்துறை அமைச்சர் கோர்தான் ஜடாபியா.
‘கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் நடந்தவுடன் மோடி தலைமையில் பா.ஜ.க. பிரமுகர்கள், பஜ்ரங் தள், வி.ஹெ.ச்பி., ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரின் கூட்டம் நடந்தது. அதில் பேசிய மோடி, ‘நான் உங்களுக்கு மூன்று நாட்கள் அவகாசம் தருகிறேன். அதற்குள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள். ஆனால்,மூன்று நாட்களுக்குப் பின் நான் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டியாக வேண்டும்’என்றார். அதன்பிறகு பெரிய அளவில் கொலைச்சம்பவங்கள் நடந்த பிறகு எங்களை அழைத்த மோடி, எல்லோரையும் பாராட்டினார்.’
‘முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காக ஓடினோம். அவர்களை எல்லாம் முன்னாள் காங்கிரஸ் எம்.பி. ஜாப்ரி தன்னுடைய வீட்டுக்குள் அழைத்துப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். உடனே நாங்கள் ஆயுதங்களுடன் அந்த வீட்டை முற்றுகையிட்டோம். உடனே அவர் பணத்தைக் கொண்டுவந்து கொடுத்து எங்களையெல்லாம் கலைந்து போகச் சொன்னார். நாங்களும் சரி என்றோம்.
அவர் பணத்தைத் தருவதற்காகக் கதவைத் திறந்ததும் விருட்டென வீட்டுக்குள் நுழைந்துவிட்டோம். உடனடியாக இருவர் அவரை மடக்கிப் பிடிக்க, அவருடைய கையை நான் வெட்டினேன். அவருடைய ஆண்குறியையும் வெட்டினேன். பிறகு அவரைத் துண்டு துண்டாக வெட்டி வீசிவிட்டு, பணத்தை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டோம். மோடியின் முயற்சியால்தான் எங்களால் சிறையில் இருந்து வெளியே வர முடிந்தது. நீதிபதிகளை இடமாற்றம் செய்து, வசதியான நீதிபதிகளை பணியிலமர்த்தியதால் எங்களுக்கு சுலபமாக ஜாமீன் கிடைத்தது.’
‘வழியில் தென்பட்ட கர்ப்பிணிப் பெண் முஸ்லிம் என்று தெரிந்ததும் கையில் வைத்திருந்த கத்தியை எடுத்து அவளுடைய வயிற்றில் குத்தினேன். உள்ளே இருந்த சிசுவை வெளியே எடுத்து வீசி எறிந்தேன்.’
‘எனக்குச் சொந்தமான தொழிற்சாலையில்தான் கலவரத்தின் போது பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள் தயாரிக்கப்பட்டன. அந்தப் பணியில் வி.ஹெச்.பி. தொண்டர்கள் ஈடுபட்டனர். எல்லா விஷயமும் போலீஸாருக்குத் தெரியும். ஆனால், அவற்றைக் கண்டுகொள்ளவில்லை. இன்னும் சொல்லப்போனால், விஷயம் வெளியே கசியாதவாறு அவர்கள்தான் பார்த்துக்கொண்டனர். அந்தக் குண்டுகளை வைத்துத்தான் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தினோம்.’
‘பா.ஜ.க. எம்.எல்.ஏ. மாயா பென் தெருத்தெருவாகச் சென்று தொண்டர்களைக் கலவரம் செய்வதற்கு ஊக்கப்படுத்தினார். ‘முஸ்லிம்கள் ஒருவரைக் கூட விடக்கூடாது. வேகமாகக் கொன்று குவியுங்கள்’ என்று ஆவேசமாகக் கூறிக்கொண்டே நடந்தார்.’
‘முஸ்லிம் மக்கள் இருக்கும் இடங்கள் எங்கு இருக்கிறது என்று தெரியாமல் நாங்கள் திணறியபோது போலீஸாரே சில இடங்களைச் சுட்டிக் காட்டினர். நாங்கள் அங்கு சென்று கதவுகளை மூடிவிட்டு, அவர்களை உள்ளேயே வைத்து எரித்துவிட்டோம்.’
‘கலவரத்தில் ஈடுபட்ட தொண்டர்களுக்கு எதிரான வழக்குகள் எல்லாம் ஒன்றும் இல்லாமல் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள மோடி சில உத்தரவுகளைப் பிறப்பித்தார். காவல்துறை அதிகாரிகள் இந்துக்களுக்குச் சாதகமாக நடந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
கோத்ரா சம்பவம் மோடியை ரொம்பவே வருத்தப்பட வைத்திருந்தது. அகமதாபாத்தில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியான ஜுஹபுரா பகுதியில் தானே குண்டு வீசத் தயாராக இருப்பதாக அவர் கூறி வந்தார். ஆனால், முதல்வர் பதவியில் இருந்ததால் அப்படிச் செய்ய முடியவில்லையே என்று வருத்தப்பட்டார். முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்ட தினத்தை ஒவ்வோர் ஆண்டும் கொண்டாட வேண்டும் என்றார் மோடி.’
‘மாநிலம் முழுவதும் உள்ள வக்கீல்கள் எங்களுக்குச் சாதகமாக இருந்தனர். கலவரத்தில் ஈடுபட்டவர்களுக்குச் சாதகமாக அவர்கள் வாதாடினர்!’
தமிசுதீன் (Chef reporter of Dubai)
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment