மதுரை,அக்டோபர் 30 : ஊழலுக்கு எதிரான மக்கள் விழிப்புணர்வு யாத்திரையை BJP யின் மூத்த தலைவர் திரு.அத்வானி அவர்கள் மேற்கொண்டுள்ளார். இது குறித்து அவர் செய்தியாளருக்கு பேட்டியளிக்கையில் தேர்தலுக்காகவோ அல்லது தனிப்பட்ட அத்வானிக்காகவோ இந்த யாத்திரையை தான் தொடங்கவில்லை என்றும்,தேசிய அளவில் மக்கள் நலன் மற்றும் ஊழலை ஒழிப்பதற்காக இந்த யாத்திரை நடைபெறுகிறது என்று அவர் தெரிவித்தார். மேலும் இந்த நாட்டை ஆழ வேண்டும் என்று விரும்பும் எந்த ஒரு அரசியல் கட்சியாக இருந்தாலும், உண்மை நிலவரத்தை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார். மத்தியில் இனிமேல் கூட்டணி இல்லாமல் அரசு அமைப்பது நடக்காது. கண்டிப்பாக கூட்டணி கட்சி ஆட்சிதான் இனிவரும் காலங்களில் ஏற்படும் என்றும், தேர்தல் நேரத்தில் தான் கூட்டணி அமைப்பது குறித்து அலோசனை செய்யப்படும் என்றும், அதே போன்று தமிழகத்திலும் உரிய நேரம் வரும் போது கூட்டணி அமைப்பது குறித்து குடிவு எடுக்கப்படும் என்றும் அப்போது அவர் தெரிவித்தர்.
www.muthupettaiexpress.com
நமது நிருபர்
பாலா (ஆலங்காடு)
BJP கட்சி .அ.தி.மு.க.வுடன் கூட்டணியா? மதுரையில் அத்வானி பேட்டி!
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment