முத்துப்பேட்டை பேரூராட்சி தலைவர் பதவிக்கு மகாராஜா தமீம் போட்டி: தி.மு.க.தகவல்!!
முத்துப்பேட்டை,அக்டோபர் 08: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை யில் நடைபெற உள்ள உள்ளாட்சி மன்ற தலைவர் பதவிக்கு தி.மு.க சார்பில் கட்சியின் முன்னால் மாவட்ட பொருளாளரும், வேட்பாலருமாகிய மகாராஜா தமீம் அவர்கள் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடப் போவதாக அவர் தெருவித்தார். இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிருபர் கேட்ட கேள்விக்கு பின்னர் பதிலளித்த அவர். முத்துப்பேட்டையில் குடிநீர் பற்றாக்குறையில் நிரந்தர முடிவு எடுக்கப்படும் என்றும், மருதங்கவளி மாற்று குடிநீர் திட்டம் ஏற்படுத்த முயற்ச்சி செய்வேன் என்றும், சாக்கடை வடிகால் பல இடங்களில் கழிவு நீர் சேருவதற்கு நடவடிக்கை எடுக்கப் படும் என்றும், அனைத்து வாய்க்கால்கலையும் தூர் எடுத்து மலை நீர் அவற்றை நோக்கி செல்ல வடிகள் தூர் வாரி தரப்படும் என்றும், மேலும் முத்துப்பேட்டை பேரூராட்சி யில் ஆட்கள் பற்றாக் குறையை அதிகப் படுத்த முயர்த்சிப்பேன் என்றும், ஒவ்வொரு வார்டில் உள்ள குறைகளை கண்டறிய பொது மக்களிடம் குறைகள் கேட்க மக்களிடம் காலை 6 மணி முதல் 10 மணி வரை நேரிலே சென்று குறைகளை கேட்டு அதை நிறைவேற்ற பாடுபடுவேன். மேலும் கடந்த ௧௫ வருடம் கவுன்சிலராக இருந்து பணியாற்றிய அனுபவம் இருப்பதால் அவற்றை முளுமைபட பாடுபடுவேன் என்றும், முத்துப்பேட்டை பேரூராட்சியில் எந்த ஒரு ஊழலும் நடக்காமல் இருக்க மிக கவனமாக இருப்பேன் என்றும், முத்துப்பேட்டை மக்களுக்காக நவீன கழிப்பறை உறுதி செய்து தரப்படும் என்றும் அவர் கூறினார்.
source from muthupettai express
தொகுப்பு
ரிப்போர்ட்டர் இல்யாஸ்.ASNS .அப்துல் பாரி.EK . முனவ்வர் கான். AKL. அப்துல் ரஹ்மான்
முத்துப்பேட்டை பேரூராட்சி தலைவர் பதவிக்கு மகாராஜா தமீம் போட்டி: தி.மு.க.தகவல்!!
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment