முத்துப்பேட்டை, அக்டோபர் 08 : கண்ணியத்திற்குரிய முஸ்லிம் சமூகமே திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் கடந்த 15 ஆண்டாக ரஹ்மத் அறக்கட்டளை சார்பாக செயல் பட்டு வரக்கூடிய ரஹ்மத் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் ஆண்டு மலரின் மூன்றாம் பதிப்பில் "முஹம்மத் நபி (ஸல்) அவர்களை தெரிந்து கொள்ளுங்கள்" என்ற பகுதியில் முஹம்மத் நபி (ஸல்) அவர்களை பற்றி சுயசரிதையாக வெளியிடப் பட்டிருந்தது.
அதில் கார்டூன் ஒன்றும் இடம் பெற்றிருந்தது. அதில் உள்ள கார்டூனை அகற்ற வேணுமாய் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் வருகிற 10 .10 .2011 ஆம் தேதியன்று மாபெரும் முற்றுகை போராட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் நிருபரை இஸ்லாமிய இயக்கம் ரீதியாக தொடர்பு கொண்டு பேசினார்கள் அது பின்வருமாறு. முஹம்மத் நபி ஸல் அவர்களின் விசயமாக ரமலான் மாதம் 06 .08 .2011 தேதியன்று இஸ்லாமிய இயக்கத்தை சார்த்த சகோதரர்கள் தற்போது முத்துப்பேட்டையில் ரஹ்மத் பள்ளிகூடத்தின் கவுரவச் செயலாளர் ஜனாப் 3M பசீர் அவர்களை சந்தித்து இது விசயமாக எடுத்துரைத்ததோடு மட்டுமல்லாமல் இந்த ஆண்டு 2011 ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட ஆண்டு மலரின் பிரதிகளை உடனடியாக திரும்ப பெற வேண்டுமாய் மனுவையும் கொடுத்துள்ளார்கள்.
அந்த மனுவை பள்ளிக்கூடத்தின் தாளாளர் ஜனாப் MA .முஸ்தபா அவர்களுக்கு அனுப்பப்பட்டது. அப்போது அவர் சிங்கபூரிலிருந்து தாயகம் வந்து இவற்றை செய்தது எனக்கு மிகவும் வேதனையாக இருக்கின்றது என்றும் எனவே அல்லாஹ் விற்காக என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் என்றும் ஊர் மக்களிடமும் இஸ்லாமிய இயக்கத்திரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று அப்போது அவர் ஒரு கடிதம் மூலம் எழுதியும் கொடுத்துள்ளார்.
மேலும் இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிருபர்கள் பள்ளியின் கவுரவ செயலாளர் 3M பசீர் அவர்களை நேரில் சென்று சில வினாக்களை தொடுத்தனர். இதற்கு பின்னர் பதிலளித்த அவர், இந்த விஷயம் குறித்து நானும் மன வேதனை அடைந்தேன் என்றும் இது போன்ற சம்பவம் இனி நடக்காது என்றும் அவர் தெருவித்தார். மேலும் காலாண்டு பருட்சை லீவ் முடிந்தவுடன் மீத முல்லா அனைத்து பதிப்பிணையும் திரும்ப பெற்று அப்படத்தை அகற்றுவோம் என்றும், அந்த பதிப்பினை திரும்ப பெறுவதற்கு தமிழ் நாடு தவ்ஹீத் ஜாமத் அவர்களிடம் சில மாதம் அவகாசம் கேட்டோம், அனால் அவர்கள் அதை பொருட்படுத்தாமல் வருகிற 10 ஆம் தேதியன்று ஆர்பாட்டம் நடத்த உள்ளனர் என்று அப்போது அவர் தெருவித்தார்.
இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிருபர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்ட தலைவர் ஜனாப். அப்துல் ரஹ்மான் அவர்கள், எங்கள் உயிரிலும் மேலான முஹம்மத் நபி (ஸல்) அவர்களைப் பற்றி கேலிசித்திரம் வரைந்த நிர்வாகத்தின் மீது தக்க நடவடிக்கை எடுக்கும் விதத்தில் வருகிற 10 .10 .2011 ஆம் தேதியன்று போராட்டம் நடத்துவோம் இதற்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என்றும் அவர் தெருவித்தார்.
மேலும் இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிருபர் அப்பள்ளியின் தாளாளர் ஜனாப் M .முஹம்மத் யாசின் அவர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கேட்ட கேள்விக்கு பின்னர் பதிலளித்த அவர், இது இரண்டு மாதங்கள் முன்பே நடைபெற்ற ஒரு சம்பவம் என்றும், என்னுடைய உயிரிலும் மேலான முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை உலக தமிழ் மக்கள் அனைவரும் அறிந்து கொள்வதற்காக எங்களுடைய ட்ரஸ்ட் மூலம் நாங்கள் அவற்றை அரபிளிருந்து தமிழாக்கம் செய்து கொண்டு வரக்கூடிய நாங்கள் முஹம்மத் நபியை எப்படி இழிவு படுத்த எங்களுக்கு மனம் வரும் என்றும், மேலும் இந்த பதிப்பினை பொறுப்பேற்று நடத்திய பொறுப்பாளரையும் கண்டித்துள்ளோம் என்றும், இந்த விஷயம் எங்களுக்கு அப்பொழுதே தெருந்திருந்தால் அவற்றை கண்டிப்பாக தடுத்து நிருத்திருப்போம் என்றும், மேலும் நமது சமுதாயத்திற்கும், குறிப்பாக முத்துப்பேட்டை மக்களுக்கும் பல்வேறு விதமான உதவிகளையும் முஹம்மத் நபி ஸல் அவர்கள் காட்டித்தந்த முறைப்படி செய்து வருகிறோம் என்றும், இது குறித்து சில ஹதீஸ்களை எங்களிடம் அவர் தெருவித்தார்.
ஒரு முஸ்லிமுடைய ரத்தமும், அவர்களுடைய மானமும், அவர்களுடைய பொருளும் பாது காக்கப்படவேண்டும் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள், நூல்: முஸ்லிம்,
யார் ஒரு முஸ்லிமின் மானத்தையும் கண்ணியத்தையும் குலைத்தனோ அல்லாஹ் அவனுடைய கண்ணியத்தையும் மானத்தையும் வேறொரு இடத்தில் வைத்து கேவலபடுத்துவான். நூல்: அபூதாவூத்
ஆதமுடைய மக்கள் அனைவர்களும் தவறு செய்யக் கூடியவர்கள், அதிலே சிறந்தவர்கள் (தவ்பா) அல்லாஹ் விடத்தில் பாவ மன்னிப்பு தேடக்கூடியவர்கள்! நூல் : திர்மிதி, இபுனுமாஜா,
இதனைத்தொடர்ந்து அவர் அனைத்து மக்களிடமும் இந்த செயலுக்காக அல்லாஹ் விற்காக என்னை மன்னித்து விடுங்கள் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். அல்லாஹ் விடம் எனக்கு மன்னிப்பு கிடைக்க அனைத்து மக்களும் இறைவனிடம் துவா செய்யுங்கள் என்றும் இதன் மூலம் கேட்டுக்கொண்டார்.
Source from www.Muthupettaiexpress.comதொகுப்பு
ரிப்போர்ட்டர் முஹம்மது இல்யாஸ்.
0 comments:
Post a Comment