முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டை பேரூராட்சி தலைவருக்கு போட்டியிடும் அ.தி.மு.க.வேட்பாளரின் பேட்டி!


முத்துப்பேட்டை, அக்டோபர் 02 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட அ.தி.மு.க. தலைமை என்னை பணிந்துள்ளது என்று கட்சியின் நகரச் செயலாளரும், வேட்பாலருமாகிய கோ. அருணாச்சலம் தெருவித்துள்ளார். இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிருபர் கேட்ட கேள்விக்கு பின்னர் பதிலளித்த அவர். அ.தி.மு.க. அரசு தற்போது ஆட்சியில் இருப்பதால் அந்த அரசு மக்களுக்கு செய்யும் பல்வேறு நலத்திட்டங்களை முத்துப்பேட்டை மக்களுக்கு மிக எளிதில் கிடைக்க மிகவும் பாடுபடுவேன் என்றும் அதில் எந்த ஒரு பாரபட்சமும் பார்க்க மாட்டேன் என்றும் அவர் தெருவித்தார். மேலும் முத்துப்பேட்டை மக்களுக்கு இருக்கின்ற அடிப்படையான பிரச்சனை என்னவெனில் குடிநீர் பிரச்சனை தான், அதில் 18 ஆயிரம் மக்களுக்கு 18 லட்சம் லிட்டர் தேவைபடுகின்றது. தற்சமயம் 9 லட்சம் லிட்டர் தான் குடிநீர் வடிகால் வாரியத்தால் வழங்கப்பட்டு வருகின்றது. இதனை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று இரண்டு மேல்நிலைத்தொட்டிகள் முத்துப்பேட்டையில் கட்டுவதற்கான செயல்களை செய்யப் போவதாகவும், அவர் தெருவித்தார். மேலும் முத்துப்பேட்டை பகுதியில் உள்ள மக்கள் குறுப்பிட்ட அளவிற்கு மேற்பட்ட மக்கள் வெளிநாட்டில் இருப்பதால் கியாஸ் பெறுவதற்கு கூடுதல் செலவு செய்து இடைதரகர் மூலம் பெற்று வருகின்றனர் என்றும், இதனை அரசுக்கு நான் வகிக்கின்ற பல்வேறு பொறுப்புகளின் அடிப்படையில் கடந்த 4 ஆண்டுகளாக தொடர்ந்து கேட்ட தின் விளைவாக கேஸ் ஏஜென்ட்டை முத்துப்பேட்டைக்கு வளங்கப்பட்டுள்ளது. முத்துப்பேட்டையில் முதன் முதலில் STD உருவாக்கித்தந்ததும் முத்துப்பேட்டையில் 33 KV தடையற்ற மின்சாரம் கிடைக்க இங்கு மின்சார துணை மின்நிலையம் அமைக்கப்பட்டது. மேலும் 100 KV துணை மின்நிலையம் அமைக்க பவேறு வேலைகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெருவித்தார். மேலும் முத்துப்பேட்டைக்கு பாதாள சாக்கடை திட்டத்தை அரசுக்கு கொண்டு சென்றுள்ளேன் என்றும் தெருவித்தார். முத்துப்பேட்டையை சுற்றுலாத் தலமாக மற்ற கண்டனத 10 ஆண்டுகளாக முழு மூச்சாக செயல் பட்டு வருவதாகவும், மேலும் சிறுபான்மை உடைய சொத்து, நலன்கள் ஆகியவிகள் பாதிக்கப் படாத வண்ணம் 38 ஆண்டுகளாக பாடுபட்ட வந்த நான் வருகின்ற காலங்களிலும் அந்த நிலையை பேணுவேன் என்றும் அவர் தெருவித்தார்.

Source from muthupettai express

தொகுப்பு
ரிப்போர்ட்டர் இல்யாஸ். EK.முனவ்வர் கான்

0 comments:

Post a Comment

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)