முத்துப்பேட்டை, அக்டோபர் 02 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நடைபெற இருக்கின்ற உள்ளாட்சி தேர்தலில் மனித நேய மக்கள் கட்சி வேட்பாளராக எல்லோராலும் செல்லமாக அழைக்கப்படும் மாஷா மாலிக் என்கிற S . முஹம்மத் மாலிக் போட்டி இடப் போவதாக மனித நேய மக்கள் கட்சி தலைமை அறிவித்துள்ளது. இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் நிருபர் கேட்ட கேள்விக்கு பின்னர் பதிலளித்த அவர், கடந்த 14 ஆண்டுகளாக இன்று வரை சமுதாயப் பணியிலும், முத்துப்பேட்டையின் முன்னேற்றத்திற்காகவும் தொடர்ந்து TMMK சார்பாக பணியாற்றி வருகிறேன் என்றும், தற்போது நடைபெற இருக்கும் உள்ளாட்சி மன்றத் தேர்தலில் தலைவர் பதவிக்கு தான் போட்டி இடுகிறேன் என்றும் அவர் தெருவித்தார். மேலும் தொடர்ந்து மக்கள் சேவையில் TMMK ரத்ததானம், மருத்துவ சேவை, ஆம்புலன்ஸ் சேவை, அனைத்து தரப்பு மக்களிடமும் TMMK வின் சேவைகள் பரவி உள்ளது என்றும் எனவே இந்த தேர்தலில் MMK இன்ஷா அல்லா அமோக வெற்றி பெரும் என்றும் அவர் தெருவித்தார்.மேலும் கடந்த 5 ஆண்டுகாலமாக பேரூராட்சி நிர்வாகத்தின் குறைகள் அனைத்தையும் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் தெருவித்தார். மேலும் MMK கட்சியுடைய தேர்தல் வாக்குறிதிகள் இன்ஷா அல்லா விரைவில் வெளியிடப் படும் என்றும் அப்போது அவர் தெருவித்தார். மேலும் சட்ட மன்ற தேர்தலில் அ.தி.மு.க உடனான கூட்டணி வைத்த நீங்கள் ஏன் உள்ளாட்சி மன்றத் தேர்தலில் அ.தி.மு.க உடன் கூட்டணி வைக்க வில்லை என்ற முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் நிருபர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர். ச.ம.தேர்தலில் அ.தி.மு.க உடன் கூட்டணி வைத்து உண்மைதான் எனினும், முஸ்லிம்களின் பிரதிநிதித்த்துவத்தை அதிகப்படுத்துவது தான் MMK வின் நோக்கம் என்றும், அந்த நோக்கத்தை சிதைக்கும் விதமாக நாங்கள் கோரிய இடங்கள் முழுமையாக அ.தி.மு.க தலைமை ஒதுக்காததால் தமிழகம் முழுவதும் தனித்துப் போட்டி இடுகின்றோம். மக்கள் சேவையில் சாதி மதம் வேறுபாடின்றி செயல்படும் மனித நேய மக்கள் கட்சிக்கு முத்துப்பேட்டை மக்கள் அனைவரும் ஆதரவு தந்து வெற்றிப் பெறச்செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்,ஊழலற்ற உள்ளாட்சி அதுவே "மனித நேய மக்கள் கட்சியின்" மனசாட்சி என்று அவர் தெருவித்தார். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் நகர தலைவர். M . சம்சுதீன் உடனிருந்தார்.
தொகுப்பு
ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS . அப்துல் பாரி, அபு மர்வா (துபாய்)
முத்துப்பேட்டை பேரூராட்சி தலைவர் பதவிக்கு மாஷா மாலிக் போட்டி: ம.ம.க தலைமை தகவல்!!
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment