முத்துப்பேட்டை,அக்டோபர் 17 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் இன்று நடைபெற்ற உள்ளாட்சி மன்ற தேர்தலில், சென்ற தேர்தலைவிட இந்த தேர்தலில் அதிக படியான வாக்குகள் பதிவாகி உள்ளது என்று தேர்தல் ஆணையம் தெருவித்துள்ளது. மேலும் குறிப்பாக அதில் பெண்களின் ஓட்டு சுமார் 65 சதவீதத்தை தாண்டும் என்றும் கூறப் படுகிறது. முத்துப்பேட்டையில் உள்ள 18 வார்டுகளிலும் அதிகமாக பெண்கள் ஆர்வத்துடன் வந்து தனது வாக்குகளை பதிவு செய்த வண்ணம் உள்ளார்கள். அதற்கு உதாரணமாக முஹைதீன் பள்ளி வாசல் தெருவை சேர்ந்த உம்மாகுள் அம்மாள், வயது 98 , பஜாரியா அம்மாள் வயது 92 , முஹைதீன் பள்ளி தெருவை சேர்ந்த பல்கீஸ் அம்மாள் வயது 90 ஆகிய மூவரும் இந்திய ஜனநாயக வாக்குரிமையை விட்டுக்கொடுக்க மாட்டோம் என்ற உறுதி பாட்டுடன் வந்து தனது வாக்கை பதிவு செய்துள்ளார்கள்.
Source from www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு
ரிப்போர்ட்டர் இல்யாஸ்,AKL .அப்துல் ரஹ்மான்,EK .முனவ்வர் கான்,அபு மர்வா,
முத்துப்பேட்டை: தள்ளாத வயதிலும் ஜனநாயக உரிமையை விட்டுக் கொடுக்காத முதியோர்கள்!
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment