முத்துப்பேட்டை,அக்டோபர் 28 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையின் நகரத்தின் இதயம் போன்ற பகுதியில் அமைந்துள்ளதுதான் பட்டறைக்குலம். கடந்த 80 ஆண்டுகளுக்கு மேலாக இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர், தலித் ஆகிய அனைத்து தரப்பு மக்களும் பயன்பட்டு வந்தன. இதில் ஆண்,பெண் ஆகிய இருபாலரும் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வந்தனர். இந்த பட்டறைக்குலம் முத்துப்பேட்டை மக்களின் பல்வேறு தேவைகளையும் நிறைவேற்றி வந்தது. இதன் அடிப்படையில் கடந்த சில ஆண்டுகளாக முத்துப்பேட்டை தேர்வு நிலை பேரூராட்சியின் (selection grade panjayath) பேரூராட்சியின் அலட்சியப் போக்கால் சீரழிந்து சின்னாபின்னமாகி சுற்றுச் சூழல் மாசு ஏற்பட்டு விட்டது. இதற்க்கு மிக முக்கிய காரணம் அக்குளத்தில் உள்ள ஓரங்களில் அமைந்துள்ள கடைகள் யாவும் தங்களுடைய கழிவுநீர்களை மேற்படி குளத்திலே விடுகிறார்கள். மேலும் இந்த குளக்கரையில் குடியிருப்பவர்களும் ஆக்கிரமிப்பு செய்துள்ளார்கள் என்பதை பார்க்கும் போது மிக வேதனையான ஒரு விசயமாக இருக்கின்றது. இந்த விஷயம் குறித்து பலமுறை முத்துப்பேட்டை பேரூராட்சிக்கும், பொது பணித்துரைக்கும் தகவல் தெருவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த 1 ஆண்டுக்கு முன்பு இந்த குளத்தை முறையாக தூறு வாரியும், சுத்தம் செய்தும் தர வேண்டும் என்ற பொது மக்களின் கோரிக்கையின் அடிப்படையில் பொது பணித்துரையால் முத்துப்பேட்டை பஞ்சாயத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் இது வரைக்கும் எந்த பணிகளும் தொடங்கவில்லை என்றும் இந்த பணிக்ககாக ஒதுக்கப்பட்ட பணம் எங்கே போனது என்று முத்துப்பேட்டை மக்களின் மத்தியில் ஒரு கேள்விக்குறியாகத்தான் இன்றுவரையும் இருந்து வருகிறது. மேலும் முத்துப்பேட்டை மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க திருவாரூர் மாவட்ட நிர்வாகம் இதனை தூர்வாரி, சுத்தம் செய்து மேலும் ஆக்கிரமிப்புகளை நீக்கி மீண்டும் மக்களின் பயன் பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பதே முத்துப்பேட்டை மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது. பொறுத்திருந்து பாப்போம் இவர்கள் பொது மக்களை மதிப்பார்களா என்று?
source from muthupettaiexpress.blogspot.com, www.muthupettaiexpress.com
தொகுப்பு
ரிப்போர்ட்டர் இல்யாஸ்,ASNS .அப்துல் பாரி,EK .முனவ்வர் கான்,அபு மர்வா
நன்றி - EK .அப்துல் அஜீஸ்
முத்துப்பேட்டையில் கேட்பாரற்று கிடக்கும் பட்டறைக் குளம்? ஓர் பார்வை:
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment