முத்துப்பேட்டை,அக்டோபர் 28 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் பேரூராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜனாப்.அபூபக்கர் சித்திக் அவர்களுக்கு 1927 வாக்குகள் அளித்தமைக்கு தனது நன்றியை முத்துப்பேட்டை மக்களுக்கு தெருவிக்கும் விதம் நேற்று நன்றி தெருவிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மருதங்காவெலி, வெள்ளைக்குலத்தான்கரை, பேட்டை, தெற்குத் தெரு, மரைக்காயர் தெரு, பழைய பேருந்து நிலையம், ஆசாத் நகர், புது காளியம்மன் கோவில் தெரு, செம்படவான் காடு, ஆ,நே,பள்ளி, மேலும் அனைத்து இடங்களிலும் உள்ள வார்டு மக்களுக்கு தனது நன்றியை அப்போது அவர் தெருவித்தார். இதனைத் தொடர்ந்து உரை நிகழ்த்திய SDPI யின் மாநில செயலாளரும், வேட்பாலருமாகிய ஜனாப்.அபூபக்கர் சித்திக் அவர்கள், அடிப்படை வசதிகளான குடிநீர் மற்றும் கழிவு நீர் வசதிகளை சீர் செய்யும் பணிகள் உடனே நிறைவேற்றி தரப்படும் என்றும், அரசு ஆண்கள், பெண்கள் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் பற்றாக்குறைகளை சரிசெய்து மாணவர்களின் அடிப்படை வசதிகளான கழிவறை மற்றும் மாற்று குடிநீர் ஆகியவை கிடைக்க செய்து மேலும் ஏழை, எளிய மாணவர்களின் கல்வியில் ஒழி ஏற்றுவதற்காக முறையான பேரூராட்சி நிர்வாகத்தினரை அணுகுவதெனவும், A,B,C சொத்து வரி விதிப்பு இருக்கக்கூடிய முறைகேடுகளை களைந்து தமிழக அரசு ஆணையின் அடிப்படையில் ABC மண்டல பிரிவை அமல்படுத்த முயற்ச்சி செய்வோம் என்றும், இப்படிப்பட்ட பல்வேறு முறைகேடுகளை களைந்து சரியான ரீதியில் மக்களுடைய தேவைகளை நிறைவேற்ற அரப்போராட்டங்கள் மூலம் மக்கள் பணியாற்றுவோம் என்றும்,ஒருகால் பேரூராட்சி நிர்வாகம் கவன குறைவு மற்றும் அலட்சியமாக செயல்படும் பட்சத்தில் மக்களை ஒன்று திரட்டி அரப் போராட்டங்களின் மூலமாக மக்களுக்கான தேவைகளை நிறைவேற்றுவோம் என்றும் அப்போது அவர் உரைநிகள்தினார்.
source from www.muthupettaiexpress.blogspot.com, www.muthupettaiexpress.com
தொகுப்பு
Riporter Ilyas, ASNS. Abdul Bari, EK. Munavar Khan, Abu Marvaa
முத்துப்பேட்டையில் SDPI கட்சியினர் நேற்று மக்களுக்கு நன்றி தெருவித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment